Tsunmai 2024: ஜப்பானில் ஒரே நாளில் 155 நிலநடுக்கங்கள், பலி எண்ணிக்கை 20ஆக உயர்வு

2024 Earthquake: புத்தாண்டின் முதல் நாளன்றே ஜப்பானில்155 நிலநடுக்கங்கள் ஏற்பட்டது, இதில் ஒன்று 7.6 ரிக்டர் அளவு மற்றும் மற்றொன்று 6 ரிக்டர் அளவுக்கு அதிகமானது

பாகிஸ்தானில் பிப்ரவரி 8-ம் தேதி நாடாளுமன்ற தேர்தல்: இம்ரான்கான் வேட்பு மனுக்கள் நிராகரிப்பு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். தெஹ்ரிக்-இ-இன்சாப் (பிடிஐ) கட்சியின் தலைவரான இம்ரான்கான் (71) கடந்த 2018 முதல் ஏப்ரல் 2022 வரையில் பாகிஸ்தான் பிரதமராக பதவி வகித்தார். இவர் தனது பதவிக் காலத்தில் வெளிநாட்டு தலைவர்களிடம் இருந்து பெற்ற பரிசுப் பொருட்களை, அரசு கருவூலத்தில் ஒப்படைக்காமல் அவற்றை விற்று சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது பாகிஸ்தான் … Read more

Opposition leader stabbed in South Korea | தென் கொரிய எதிர்க்கட்சி தலைவருக்கு கத்திக்குத்து

சியோல்: தென் கொரியாவின் எதிர்க்கட்சி தலைவர் லீ ஜே மியாங்யை கத்தியால் குத்திய நபர் கைது செய்யப்பட்டார். தென் கொரியாவின் எதிர்க்கட்சித் தலைவர் லீ ஜே மியாங் தெற்கு துறைமுக நகரமான பூசானுக்கு சென்றார். அங்கு விமான நிலையத்தை அவர் சுற்றி பார்த்தார். அப்போது ஒருவர் அவரது கழுத்தின் இடது பக்கத்தில் கத்தியால் குத்தினார். இதையடுத்து லீ ஜே மியாங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இவர் தென் கொரியாவின் பிரதான எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின் தலைவராக உள்ளார். … Read more

வங்கதேசத்தில் நோபல் பரிசு பெற்ற யூனுஸுக்கு 6 மாதம் சிறை

டாக்கா: வங்கதேசத்தை சேர்ந்த முகமது யூனுஸ், ‘கிராமீன் கம்யூனிகேஷன்ஸ்’ என்ற வங்கியை தொடங்கி, லட்சக்கணக்கான கிராமப்புற தொழில் முனைவோருக்கு கடன்களை வழங்கினார். அவரது பொருளாதார சிந்தனைக்காக கடந்த 2006-ம் ஆண்டில்அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. கடந்த 2007-ல் முகமது யூனுஸ் அரசியலில் கால் பதித்தார். இதனால் கடந்த 2011-ம் ஆண்டில் கிராமீன் கம்யூனிகேஷன்ஸ் வங்கியின் தலைவர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து தொழிலாளர் சட்ட விதிமீறல் தொடர்பாகஅவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த … Read more

ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கையால் மக்கள் பீதி – 16 அடி உயரத்துக்கு அலைகள் எழுந்தன

டோக்கியோ: ஜப்பானில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஜப்பானின் கடலோர பகுதிகளில் 16 அடி உயரத்துக்கு சுனாமி அலைகள் எழுந்ததால் மக்கள் பீதி அடைந்தனர். ஜப்பானின் மேற்கு பகுதியான இஷிகாவா மாகாணம், அனாமிசு நகரை மையமாக கொண்டு நேற்று பிற்பகல் 4 மணி அளவில் (இந்திய நேரப்படி மதியம் 12.40) சக்திவாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த பூகம்பம் ரிக்டர் அலகில் … Read more

Attack on Mumbai stock market Khalistan terrorist threat | மும்பை பங்கு சந்தை மீது தாக்குதல்: காலிஸ்தான் பயங்கரவாதி மிரட்டல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: ‘மும்பை பங்குச் சந்தையை குறிவைத்து தாக்குதல் நடத்துவோம்’ என, மத்திய அரசால் பயங்கரவாதி என அறிவிக்கப்பட்டுள்ள, காலிஸ்தான் ஆதரவாளர் குருபத்வந்த் சிங் பன்னுன் மிரட்டல் விடுத்துள்ளார். அமெரிக்காவில், ‘சீக்கியர்களுக்கான நீதி’ என்ற அமைப்பை நடத்தி வருபவர் குருபத்வந்த் சிங் பன்னுன். காலிஸ்தான் தனி நாடு கோரிக்கைக்கு ஆதரவு அளித்து வரும் இவரை, பயங்கரவாதி என, இந்திய அரசு அறிவித்துள்ளது. மேலும், அவரின் அமைப்பையும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் … Read more

Former Prime Ministers nomination rejected | முன்னாள் பிரதமர் வேட்பு மனு நிராகரிப்பு

இஸ்லாமாபாத், நம் அண்டை நாடான பாகிஸ்தானில் அடுத்த மாதம் 8ம் தேதி பொதுத்தேர்தல் நடக்க உள்ளது. லாகூர் தொகுதியில் போட்டியிட, முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சார்பில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. அவரது வேட்புமனுவை பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது. இது தொடர்பாக, தேர்தல் அதிகாரி அளித்துள்ள விளக்கத்தில், ‘இம்ரான் கான் சிறை தண்டனை மட்டுமே ரத்து செய்யப்பட்டது. குற்றவாளியாக இம்ரான் தொடர்வதால், அவரது வேட்புமனு ரத்து செய்யப்பட்டது’ என, தெரிவித்துள்ளார். இஸ்லாமாபாத், நம் அண்டை நாடான … Read more

21 earthquakes hit Japan in 90 minutes, tsunami waves hit, people fear | � ஜப்பானில் 90 நிமிடங்களில், 21 முறை நிலநடுக்கம் குலுங்கியது  சுனாமி அலைகளும் தாக்கியதால் மக்கள் அச்சம்

டோக்கியோ, ஜப்பான் நாட்டில் நேற்று 21 முறை ஏற்பட்ட நிலநடுக்கத்தால், கட்டடங்கள் ஆட்டம் கண்டன. அதிகபட்சமாக, 7.6 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. கடலோர பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்ட நிலையில், 4 அடி உயரத்துக்கு சுனாமி அலைகள் தாக்கின. தொடர் அதிர்வுகள் ஏற்படலாம் என்ற எச்சரிக்கையால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். கிழக்காசிய நாடான ஜப்பானில், அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம். இந்நிலையில், அந்நாட்டின் ஹோன்சு தீவின் மேற்கு கடலோர பகுதியில் நேற்று பிற்பகலில், 7.6 ரிக்டர் அளவில் … Read more

India-Pakistan Exchange of information between nuclear power plants | இந்தியா -பாக். இடையே அணுமின்நிலைய தகவல்கள் பரிமாற்றம்

புதுடில்லி: இந்தியா-பாக்., இடையே அணு மின்நிலையங்கள் குறித்த தகவல்களை பரிமாறி கொண்டன. இந்தியா -பாகிஸ்தான் இடையே போர் ஏற்பட்டால், தங்களது நாட்டில் உள்ள அணு மின்நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை தவிர்க்கும் வகையில் ‘அணு மின் நிலையங்கள் மீதான தாக்குதலைத் தடைசெய்வது என கடந்த 1988-ல் டிச.31-ம் தேதி இரு நாடுகளிடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் 1991-இல் ஜன. 27-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஒப்பந்தப்படி ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி … Read more

ஜப்பானை தாக்க தொடங்கிய சுனாமி: பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல பிரதமர் வேண்டுகோள்

டோக்கியோ, ஜப்பான் நாட்டின் மேற்கு பகுதியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்திய நேரப்படி மதியம் 12.40 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஹோன்ஷி அருகே 13 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் 5 மீட்டர் உயரத்திற்கு கடல் அலைகள் எழும் என அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்தது. ஜப்பானில் அடுத்தடுத்து பலமுறை சக்திவாய்ந்த நிலநடுக்கம் … Read more