காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 110 பேர் பலி

காசா சிட்டி, காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. அதேவேளை, பணய கைதிகளில் பலரை ஒப்பந்த அடிப்படையிலும், … Read more

‘இந்தியாவுக்கு எதிராக அணு அயுதங்களை பயன்படுத்த நினைக்கவில்லை’ – பாக். பிரதமர்

இஸ்லாமாபாத்: இந்தியா உடனான அண்மைய மோதலில் அணு ஆயுதத்தை பயன்படுத்தும் திட்டம் தங்களுக்கு அறவே இல்லை என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறியுள்ளார். பஹல்காம் தீவிரவாத தாக்குதலை அடுத்து இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கை மூலம் பாகிஸ்தானில் இருந்த தீவிரவாத முகாம்களை தாக்கி அழித்தது. தொடர்ந்து பாகிஸ்தான் தரப்பில் இருந்து எல்லையோர இந்திய மாநிலங்கள் குறிவைக்கப்பட்டன. அந்த தாக்குதலை இந்திய ராணுவம் இடைமறித்து அழித்தது. பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடி கொடுத்தது. இந்நிலையில், இந்த மோதல் … Read more

இந்திய உறவை கெடுக்கும் போலி சமூக வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை

புதுடெல்லி: இந்​தி​யா​வில் உள்ள ஈரான் தூதரகம் நேற்று 4 சமூக வலைதள பதிவு​களை தனது எக்ஸ் தளத்​தில் பகிர்ந்தது. மேலும், இந்​தியா – ஈரான் நல்​லுறவை சீர்​குலைக்க இந்த பதிவு​கள் போலி​யாக வெளி​யிடப்​பட்​டுள்​ளன. அந்​தப் பதிவு​கள் வெளி​யான சமூக வலை​தளங்​கள் ஈரான் அரசின் அதி​காரப்​பூர்​வ​மானவை அல்ல. அவற்​றுக்​கும் ஈரான் அரசுக்​கும் தொடர்​பில்லை என்று எச்​சரிக்கை விடுத்​துள்​ளது. ஈரான் தூதரகம் வெளி​யிட்ட 4 போலி சமூக வலைதள பதிவு​களில் ஒன்​றில், ‘‘அமெரிக்க விமானம் இந்​திய வான் பரப்​பில் பறந்து … Read more

திபெத்தில் சீனா நடத்தும் உறைவிடப் பள்ளிகளில் 10 லட்சம் குழந்தைகள் கட்டாயமாக சேர்க்கை

புதுடெல்லி: ​திபெத்​தில் சீனா நடத்​தும் உறை​விடப் பள்​ளி​களில் 10 லட்​சம் குழந்​தைகள் கட்​டாய​மாக சேர்க்​கப்​பட்​டுள்​ள​தாக தகவல் வெளி​யாகி உள்​ளது. சீனா​வில் 1911-ல் ஏற்​பட்ட ஜின்ஹை புரட்​சிக்​குப் பிறகு திபெத் தனி நாடாக பிரிந்​தது. எனினும், 1950-ல் திபெத்தை சீனா மீண்​டும் தனது கட்​டுப்​பாட்​டில் கொண்​டு​வந்​தது. இதையடுத்​து, திபெத்​திலிருந்து வெளி​யேறிய 14-வது தலாய் லாமா இந்​தி​யா​வில் வசித்து வரு​கிறார். இதனிடையே அடுத்த தலாய் லாமாவை நாங்​கள் தேர்வு செய்​வோம் என சீனா கூறியது. இதற்கு அடுத்த தலாய் லாமாவை … Read more

அமெரிக்காவில் அரசு ஊழியர்கள் 1,300 பேர் பணிநீக்கம் – டிரம்ப் அதிரடி உத்தரவு

இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரி மாதம் டொனால்ட் டிரம்ப் பதவியேற்றார். அவர் பதவியேற்றது முதலே பல்வேறு நிர்வாக சீர்திருத்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்த நிலையில் அமெரிக்க வௌியுறவுத்துறையில் உள்ள 1,300-க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். அதன்படி அமெரிக்காவில் உள்நாட்டு பணிகளில் ஈடுபட்டு வந்த 1,107 பணியாளர்கள், வௌிநாட்டு பணிகளை மேற்கொண்டு வந்த துணை தூதர்கள் உட்பட 246 பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட உள்ளனர். நிர்வாக மறுசீரமைப்பின் ஒருபகுதியாக இவர்கள் … Read more

புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம்

மக்களிடையே இணைய பயன்பாடு அதிகரித்து வருகிறது. இணைய வேகத்தை அதிகரிக்கும் ஆராய்ச்சிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வரும் நிலையில், 2G யில் தொடங்கிய இணைய சேவை, 3G, 4G என அதிகரித்து, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் தற்போது 5G அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், 1.02 பெட்டாபிட்ஸ் இணைய வேகத்தை கண்டுபிடித்து ஜப்பான் பொறியாளர்கள் உலக சாதனை படைத்துள்ளனர். 1.02 பெட்டாபிட்ஸ் என்பது ஒரு வினாடிக்கு சுமார் 1 மில்லியன் ஜிகாபிட்ஸ் ஆகும். இது இந்தியாவின் சராசரி இணைய வேகமான 63.55 … Read more

மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி

யாங்கூன், மியான்மரில் ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரியில் ஆட்சி அதிகாரத்தை அந்நாட்டு ராணுவம் கைப்பற்றியது. இதற்கிடையே ராணு வத்துக்கு எதிராக கிளர்ச்சி யாளர்கள் குழுக்கள் செயல் பட்டு வருகின்றன. அவர்கள் மீது ராணுவம் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மியான்மரில் உள்நாட்டு போர் நீடித்து வருகிறது. கடந்த சில நாட்களாக சகாயிங் மாகாணத்தில் கிளர்ச்சி படைக்கும், ராணு வத்துக்கும் இடையே மோதல் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் அந்த மாகாணத்தில் உள்ள … Read more

ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா

வாஷிங்டன், ஈரானில் உள்ள அணு ஆராய்ச்சி மையங்களை குறிவைத்து கடந்த மாதம் 13ம் தேதி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதனை தொடர்ந்து இஸ்ரேல், ஈரான் இடையே போர் வெடித்தது. 12 நாட்கள் நீடித்த இந்த போரின்போது இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரான் அணு ஆராய்ச்சி மையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. அமெரிக்க குண்டுவீச்சு விமானம் மூலம் ஈரான் அணு ஆராய்ச்சி மையங்கள் மீது குண்டுகள் வீசப்பட்டன. இதற்கு பதிலடியாக கத்தாரில் உள்ள அமெரிக்க விமானப்படைத்தளம் மீது கடந்த … Read more

குண்டு வெடித்து பயங்கரவாத அமைப்பின் தளபதி பலி

லாகூர், பாகிஸ்தனில் தெக்ரிக் இ பாகிஸ்தான் என்ற பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது. ஆப்கானிஸ்தான் எல்லை மாகாணமான கைபர் பக்துவாவில் இந்த பய்ங்கரவாத அமைப்பு ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்நிலையில், அந்நாட்டின் கைபர் மாவட்டம் திரக் பகுதியில் பயங்கரவாத முகாம் செயல்பட்டு வருகிறது. இந்த முகாமில் தெக்ரிக் இ பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் முக்கிய தளபதி யாசிம் என்கிற அப்துல்லா வெடிகுண்டு தயாரித்துள்ளார். அந்த வெடிகுண்டை டிரோனில் வைத்து பறக்கவுட்டுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக யாசிம் நின்றுகொண்டிருந்த … Read more

மாணவர், சுற்றுலாப் பயணிகளுக்கான அமெரிக்க விசா கட்டணம் ரூ.40 ஆயிரமாக உயர்வு

நியூயார்க்: ​மாணவர்​கள், சுற்​றுலா பயணி​கள் விசா, இந்​தி​யப் பணி​யாளர்​கள் அதி​கம் பயன்​படுத்​தும் எச்​-1பி விசா கட்​ட​ணத்தை ரூ.16 ஆயிரத்தில் இருந்து ரூ.40 ஆயிர​மாக அதி​கரிக்​கப்​பட்​டுள்​ளது. மேலும், இந்த கட்​ட​ணம் ஆண்​டு​தோறும் பணவீக்​கத்​துக்கு ஏற்ப உயர்த்​தப்​படும் என்​றும் 2026-ம் ஆண்டு முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. கடந்த ஜனவரி​யில் அமெரிக்க அதிப​ராக பொறுப்​பேற்ற டொனால்டு ட்ரம்ப் பல்​வேறு சீர்​திருத்​தங்​களை அமல்​படுத்தி வரு​கிறார். மேலும் பல்​வேறு நாடு​களுக்​கான இறக்​குமதி வரியை​யும் உயர்த்தி வரு​கிறார். இதனிடையே, கடந்த ஜூலை 4-ம் … Read more