Palestine Israel Conflict: இஸ்ரேல் ஹமாஸ் மோதளுக்கு மத்தியில் இந்தியாவிடம் கோரிக்கை வைத்த பாலஸ்தீனம்

Palestine Demands In India:  இஸ்ரேல் – பாலஸ்தீனம் ஆகிய இரு நாடுகளுக்கும் இந்தியா நண்பன்.  தற்போது நிலவும் நெருக்கடியை தீர்க்க இந்தியா தலையிட வேண்டும் என பாலஸ்தீன தூதர் அபு அல்ஹைஜா கூறியுள்ளார்.

இஸ்ரேலை குறிவைத்து ஹமாஸ் மீண்டும் தாக்குதல்: இரு தரப்பு பலி 1,800 ஆக அதிகரிப்பு

காசா: காசாவில் இருந்து இஸ்ரேலை குறிவைத்து ஹமாஸ் ஆயுதப் படை அமைப்பினர் மீண்டும் தாக்குதல் நடத்தி வருகின்றன. முன்னதாக, பாலஸ்தீன குடிமக்களை நாட்டைவிட்டு வெளியேறும்படி எச்சரிக்கை விடுத்த ஹமாஸ் குழு, தெற்கு இஸ்ரேலிய நகரமான அஷ்கெலோனை குறிவைத்து ராக்கெட்டுகளை வீசித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், இஸ்ரேல் முழுவதும் சைரன்கள் ஒலித்து மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதேநேரம், காசா நகரை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 830 ஆக அதிகரித்துள்ளதாகவும், 4,250 பேர் காயமடைந்துள்ளதாகவும் … Read more

இந்திய உறவு குறித்து ஜோர்டான் அரசருடன் கனடா பிரதமர் ஆலோசனை| After UAE President, Justin Trudeau Dials Jordan King, Discusses India

ஒட்டாவா: இந்தியாவுடன் ஏற்பட்ட மோதல் குறித்து, ஜோர்டான் அரசருடன், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தொலைபேசி வாயிலாக ஆலோசனை நடத்தினார். முன்னதாக அவர் ஐக்கிய அரபு எமீரேட்ஸ்(யுஏஇ) அதிபருடன் இந்தியா உறவு குறித்து ஆலோசனை நடத்தியிருந்தார். இது தொடர்பாக கனடா பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஜோர்டான் அரசர் அப்துல்லா பின் அல் ஹூசையினுடன் தொலைபேசியில் ஆலோசனை நடத்திய ஜஸ்டின் ட்ரூடோ, கனடா மற்றும் இந்தியா இடையில் நடக்கும் மோதல் குறித்து எடுத்துரைத்தார். அப்போது, சட்டத்தின் … Read more

சீனாவில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிப்பு

பீஜிங், உலகின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடான சீனாவில் வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது. தற்போது 21.3 சதவீதம் இளைஞர்கள் அங்கு வேலை இல்லாமல் தவிப்பதாக நியூசிலாந்தின் விக்டோரியா பல்கலைக்கழகம் தனது ஆய்வறிக்கையில் கூறி உள்ளது. இது கொரோனாவுக்கு முன்பு இருந்ததை விட சுமார் இரு மடங்கு அதிகம் ஆகும். இதற்கு அரசாங்கத்தின் முரண்பாடான சில கொள்கைகளே முக்கிய காரணம் என கூறப்படுகிறது. அதில் ஒன்று கிராமப்புற இளைஞர்களுக்கு சரியான வேலைவாய்ப்பு இல்லாதது. மற்றொன்று ஒரே … Read more

இஸ்ரேல் போரை தொடங்கவில்லை; ஆனால் முடித்து வைக்கும்: பிரதமர் நேதன்யாகு எச்சரிக்கை

டெல் அவிவ், இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் முன்னறிவிப்பு எதுவுமின்றி கடந்த சனிக்கிழமை திடீரென தாக்குதல் தொடுத்தது. ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை அடுத்தடுத்து ஏவியது. இந்த ஏவுகணை தாக்குதலில் பெண்கள், முதியவர்கள் என நூற்றுக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின்போது, இஸ்ரேல் போரில் ஈடுபட்டு வருகிறது. நாங்கள் இந்த போரை விரும்பவில்லை. போரானது எங்கள் மீது கொடூர மற்றும் வன்முறையான வழியில் திணிக்கப்பட்டு உள்ளது. இந்த போரை … Read more

காசா மீது வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகளை இஸ்ரேல் வீசுவதாக குற்றச்சாட்டு – இதன் மோசமான தாக்கம் என்ன?

காசா: பாலஸ்தீனிய ஆயுதக் குழுவான ஹமாஸின் தாக்குதலைத் தொடர்ந்து காசாவில் ஹமாஸ் நிலைகளைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனிடையே, இஸ்ரேல் பாதுகாப்புப் படை (IDF) மக்கள்தொகை அதிகம் உள்ள காசா பகுதிகளில் தடை செய்யப்பட்ட வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகளைப் பயன்படுத்துவதாக சமூக ஊடகங்களில் பல புகைப்படங்கள், வீடியோக்கள் பகிரப்பட்டு வருகின்றன. பூமியில் மிகவும் நெரிசலான இடங்களில் ஒன்றாக காசா சொல்லப்படுவதுண்டு. இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் சுமார் 362 சதுர கிலோமீட்டர் … Read more

லைவ்: காசா மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தினால் பிணைக்கைதிகளை கொலை செய்வோம் – ஹமாஸ் எச்சரிக்கை

ஜெருசலேம், Live Updates 2023-10-10 02:05:39 10 Oct 2023 12:34 PM GMT இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் பேசினார். அப்போது, இக்கட்டான சூழ்நிலையில் இஸ்ரேலுக்கு இந்தியா துணை நிற்கும் என பிரதமர் மோடி கூறினார். 10 Oct 2023 11:04 AM GMT காசா மீது வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகளை வீசியதா இஸ்ரேல்..? பீதியை கிளப்பும் வீடியோ 10 Oct 2023 9:55 AM GMT #BREAKING || இஸ்ரேல் … Read more

தொழிலாளர் சந்தையில் பெண்களின் பங்கு குறித்த ஆராய்ச்சி: அமெரிக்க பேராசிரியைக்கு பொருளாதார நோபல் பரிசு

புதுடெல்லி: இந்த ஆண்டுக்கான பொருளாதார அறிவியலுக்கான நோபல் பரிசுக்கு பேராசிரியை கிளாடியா கோல்டின் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தொழிலாளர் சந்தையில் பெண்களின் பங்கு குறித்த விரிவான ஆராய்ச்சிக்காக அவருக்கு இந்த பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவம், இயற்பியல், வேதியியல், அமைதி, இலக்கியம், பொருளாதாரம் ஆகிய 6 துறைகளில் மக்கள் பயனடையும் வகையில் சிறப்பாக செயல்படுபவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு அறிவிக்கப்படுகிறது. கடந்த வாரம் 5 துறைகளுக்கான பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில், பொருளாதார அறிவியலுக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் … Read more