இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதல்: பாலஸ்தீன அதிபர் சொல்வது என்ன?

டெல் அவிவ்: இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அவர்களின் தாக்குதலை நியாயப்படுத்தி உள்ள பாலஸ்தீன அதிபர் மஹ்முத் அப்பாஸ், பயங்கரவாதத்துக்கு எதிராக தற்காத்துக்கொள்ளும் உரிமை என்பது பாலஸ்தீனியர்களுக்கு உண்டு என்று கூறியுள்ளார். இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் இன்று திடீர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். ஹமாஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் 4 சக்கர வாகனங்களில் இஸ்ரேலுக்குள் நுழைந்து அங்கு கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஒவ்வொரு இளைஞரும் … Read more

ஆப்கனில் கடுமையான பூகம்பம்: 14 பேர் பலி| 14 Dead, 78 Injured As 6.3 Magnitude Earthquake Hits Afghanistan

காபூல்: ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட கடுமையான பூகம்பத்தில் 14 பேர் உயிரிழந்தனர். 78 பேர் காயம் அடைந்தனர். ஆப்கனின் ஹெராட் மாகாணத்தை மையமாக வைத்து பூகம்பம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ரிக்டரில் 5.5, 4.7, 6.3, 5.9 மற்றும் 4.6 என்ற அளவுகளில் பூகம்பத்திற்கு பிந்தைய நில அதிர்வுகள் உணரப்பட்டது. இதனால், வீடுகள் மற்றும் கடைகளில் இருந்தவர்கள் அலறியடித்து வீடுகளை விட்டு வெளியே வந்தனர். இடிபாடுகளுக்குள் சிக்கி 14 பேர் உயிரிழந்தனர். 78 பேர் காயமடைந்துள்ளனர். இடிபாடுகளுக்குள் இன்னும் … Read more

ஆயுதங்களுடன் நகருக்குள் நுழைந்த ஹமாஸ் பயங்கரவாதிகள் – 'யுத்தம்' செய்வதாக இஸ்ரேல் பிரதமர் பிரகடனம்

டெல் அவிவ்: ரஷ்யா – உக்ரைன் போரில் இருந்து கவனத்தை இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் பக்கம் ஒட்டுமொத்தமாக திருப்பிக் கொள்ளலாம் என்பதுபோல், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு ‘நாங்கள் யுத்தம் செய்கிறோம்’ என்று பிரகடனம் செய்துள்ளார். இஸ்ரேல் நாட்டில் இன்றைய (சனிக்கிழமை) காலைப் பொழுது சகஜமானதாகத் தொடங்கவில்லை. காலை 8 மணி தொடங்கி 2 மணி நேரத்தில் இஸ்ரேல் முழுவதும் பல பகுதிகளிலும் ஏவுகணைகள் துளைத்தெடுத்தன. சற்றும் எதிர்பாராத இந்தத் தாக்குதலால் தேசமும், தேச மக்களும் … Read more

சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் முகாம் மீது துருக்கி வான்தாக்குதல்

டமாஸ்கஸ், சிரியாவின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் குர்திஷ் கிளர்ச்சியாளர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். தனிநாடு கோரும் இவர்கள் துருக்கி மீது அடிக்கடி தாக்குதலில் ஈடுபடுகின்றனர். எனவே துருக்கி அரசாங்கம் இவர்களை பயங்கரவாத அமைப்பாக கருதுகின்றது. இந்த நிலையில் துருக்கி நாடாளுமன்றம் அருகே கடந்த 1-ந்தேதி தற்கொலை படை தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதல் நடத்த முயன்ற மற்றொரு நபரை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் சுட்டு கொன்றனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை … Read more

5000 ராக்கெட்டுகள் தாக்குதல்… போரை அறிவித்தது இஸ்ரேல் – அடுத்தது என்ன?

Israel War Against Hamas: தங்கள் நாட்டின் மீதான தாக்குதலை தொடர்ந்து, ஹமாஸ் படைகளுக்கு எதிராக போரை அறிவிப்பதாக இஸ்ரேல் நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யா அறிவித்துள்ளார். 

ஆப்கனில் நிலநடுக்கம்: ஒருவர் உயிரிழப்பு, 25 பேர் காயம்

காபூல்: ஆப்கனிஸ்தானில் சனிக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக ஒருவர் உயிரிழந்தார்; 25-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஆப்கனிஸ்தானின் மேற்குப் பகுதியில் உள்ள ஹெராத் நகரில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பகுதியை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் சனிக்கிழமை காலை 11 மணி அளவில் ஏற்பட்டுள்ளது. முதல் நிலநடுக்கம் 5.5 ஆக பதிவான நிலையில், அடுத்தடுத்து 4.7, 6.3, 4.6 என நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. … Read more

நியூசிலாந்தில் விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் – விமானங்கள் தாமதமாக புறப்பட்டன

வெலிங்டன், நியூசிலாந்தின் தெற்கு பகுதியில் உள்ள குயின்ஸ்டவுன் நகரம் முக்கிய சுற்றுலா தலமாக விளங்குகிறது. இது சாகச விளையாட்டுகளுக்கு பெயர் பெற்றது. எனவே தினந்தோறும் இங்கு ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்வர். இந்த நிலையில் அங்குள்ள சர்வதேச விமான நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனையடுத்து பயணிகள் விமான நிலையத்தை விட்டு உடனடியாக வெளியேறுமாறு ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டது. இதனால் பயணிகள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடினர். பின்னர் விமான நிலையம் மூடப்பட்டு … Read more

இங்கிலாந்தில் ராணி எலிசபெத்தை கொல்ல முயன்ற இந்தியருக்கு சிறை

லண்டன், இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இந்திய வம்சாவளியான ஜஸ்வந்த் சிங் சைலு என்பவர் வசித்து வந்தார். இவர் கடந்த 2021-ம் ஆண்டு இங்கிலாந்து நாட்டின் பக்கிங்ஹாம் அரண்மனைக்குள் சட்ட விரோதமாக நுழைய முயன்றுள்ளார். முகமூடி அணிந்து சென்ற அவரை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மடக்கி பிடித்தனர். இதனையடுத்து இவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் சில திடுக்கிடும் தகவல் தெரிய வந்தது. அதாவது 1919-ம் ஆண்டு இந்தியாவில் நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு பழிவாங்க மறைந்த … Read more

காசாவில் இருந்து பாய்ந்த ஏவுகணைகள்: 'போர் நிலை' அறிவித்த இஸ்ரேல் – பாதுகாப்புத் துறை ஆலோசனை

டெல்அவிவ்: சர்ச்சைக்குரிய காசா பகுதியில் இருந்து இன்று (சனிக்கிழமை) அதிகாலை இஸ்ரேல் நோக்கி ஒரே நேரத்தில் பல ஏவுகணைகள் பாய்ந்த நிலையில் இஸ்ரேல் போரை எதிர்கொள்ள தயார்நிலையில் உள்ளதாக அறிவித்துள்ளது. இஸ்ரேல் – பாலஸ்தீனத்துக்கு இடையே உள்ளது காசா பகுதி. இது தன்னாட்சி பெற்ற பகுதியாக காசா முனை பகுதி உள்ளது. இந்தப் பகுதி ஹமாஸ் போராளிகளின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இந்த அமைப்பை பயங்கரவாத இயக்கமாக இஸ்ரேல் கருதுகிறது. இவ்வமைப்புத்தான் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது … Read more