தோல்வியுடன் விடைபெற்றார் ஜான் சீனா

கடந்த 2002-ம் ஆண்டு WWE போட்டிகளில் அறிமுகமாகி, தனித்துவமான மல்யுத்த உத்திகளால் ரசிகர்களைக் கவர்ந்தவர் ஜான் சீனா. ‘தி சூசைட் ஸ்குவாட்’, ‘ப்ரீலான்ஸ்’ உள்ளிட்ட படங்களிலும் இவர் நடித்துள்ளார். ஜான் சீனாவின் என்ட்ரி இசை பலரது ரிங்டோனாக இருந்தது. இவர் WWE மல்யுத்த போட்டிகளில் 17 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். WWE ஜாம்பவான்களான ராக், டிரிபிள் எச், ரேண்டி ஆர்ட்டன், அண்டர்டேக்கர் உள்ளிட்டோருடன் ஜான் சீனா மோதியுள்ளார். 23 ஆண்டுகளாக WWE மல்யுத்த போட்டிகளில் அசத்தி … Read more

தென் ஆப்பிரிக்காவில் கோவில் இடிந்து விபத்து; இந்தியர் உள்பட 4 பேர் பலி

கேப்டவுன், தென் ஆப்பிரிக்காவின் வாசுலு நட்டல் மாகாணம் டர்பன் நகரில் உள்ள மலைப்பகுதியில் இந்து மத வழிபாட்டு தலமான நரசிம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தது. இதில், 10க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், கட்டுமான பணியின்போது திடீரென கோவில் மேற்கூரை இடிந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் கட்டிட பணியில் ஈடுபட்டிருந்தவர்கள், பக்தர்கள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர். இதில் விக்கி ஜெய்ராஜ் என்ற இந்தியரும் அடக்கம். தகவலறிந்து … Read more

அமெரிக்கா பல்கலைக்கழகத்தில் மர்ம நபர் துப்பாக்கி சூடு: 2 பேர் பலி; 8 பேர் காயம்

ரோடு ஐலேண்ட், அமெரிக்காவின் ரோடு ஐலேண்ட் மாகாணத்தில் பிராவிடென்ஸ் பகுதியில் உள்ள பிரவுன் பல்கலைக்கழகத்தில் பாரஸ் மற்றும் ஹாலி கட்டிடத்தில் மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தி உள்ளார். துப்பாக்கி சூடு சத்தம் கேட்டதும் மாணவ மாணவிகள் உள்பட பலரும் அலறியடித்து ஓடினார்கள். எனினும், இந்த சம்பவத்தில் 2 பேர் பலியானார்கள். 8 பேர் காயமடைந்து உள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களுடைய நிலைமை சீராக உள்ளது. சம்பவம் பற்றி அறிந்து … Read more

காசா முனையில் இஸ்ரேல் தாக்குதல்: ஹமாஸ் முக்கிய தளபதி பலி

காசா சிட்டி, காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தியது. அதேவேளை, பணய கைதிகளில் பலரை ஒப்பந்த அடிப்படையிலும், ராணுவ … Read more

2025இல் ஸ்பெஷல் கிறிஸ்துமஸ்… 100 ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் வரும் – இது லக்கியா…?

Christmas 2025: வரும் கிறிஸ்துமஸ் பண்டிகையின் டிசம்பர் 25ஆம் தேதி, 100 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே நிகழும் சிறப்பம்சத்தை கொண்டிருக்கிறது. இதுகுறித்து இங்கு விரிவாக காணலாம். 

இந்தியா மீதான 50 சதவீத வரியை ரத்து செய்ய அமெரிக்க நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் தீர்மானம் தாக்கல்

வாஷிங்டன், உக்ரைன், ரஷியா இடையிலான போர் சுமார் 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் நிலையில், ரஷியாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் மீது அமெரிக்க அரசு கடுமையான வரிவிதிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. குறிப்பாக இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50 சதவீத வரி விதித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இதனால், அமெரிக்காவில் இந்திய பொருட்களில் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. இதனிடையே, இந்தியா, … Read more

2 ஆண்டுகளுக்கு பிறகு இஸ்ரேல்-பொலிவியா தூதரக உறவு மீண்டும் தொடக்கம் – ஒப்பந்தம் கையெழுத்து

சுக்ரே, இஸ்ரேல்-காசா போர் கடந்த 2023-ம் ஆண்டு தொடங்கியது. இந்த போரில் உலக நாடுகள் பலவும் காசாவுக்கு ஆதரவு தெரிவித்தன. அதன் ஒரு பகுதியாக 2 ஆண்டுகளுக்கு முன்பு இஸ்ரேல் உடனான தூதரக உறவை பொலிவியா முறித்து கொண்டது. மேலும் அப்போதைய அதிபர் எவோ மோராலஸ் அமெரிக்காவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டவர். எனவே அமெரிக்கா உடனான தூதரக உறவை துண்டித்து ஈரானுடன் நட்புறவை வளர்த்து கொண்டது. இந்த சூழலில் கடந்த அக்டோபர் மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. … Read more

அமெரிக்காவில் முதியவர்களை குறிவைத்து ரூ.62 கோடி மோசடி – இந்தியருக்கு ஏழரை ஆண்டுகள் சிறை

வாஷிங்டன், அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தில் வசித்து வருபவர் லிக்னேஷ்குமார் பட்டேல் (வயது 38). இந்தியரான அவர் முதியவர்களை குறிவைத்து மோசடியில் ஈடுபட்டு வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன்பேரில் எட்வர்ட்ஸ்வில் நகர போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். விசாரணையில் கொரியர் நிறுவனத்தில் பணிபுரிபவர் போல முதியவர்களின் வீடுகளில் புகுந்து அங்கிருந்து பணம், நகை போன்றவற்றை திருடியது தெரிய வந்தது. இதன்மூலம் சுமார் ரூ.62 கோடி அளவுக்கு அவர் மோசடி செய்தது உறுதியானது. எனவே லிக்னேஷ்குமாருக்கு ஏழரை … Read more

வங்காளதேசத்தில் பிப்ரவரி 12-ந்தேதி நாடாளுமன்ற தேர்தல் – அறிவிப்பு வெளியீடு

டாக்கா, வங்காளதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா, கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம், மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்து, நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். அங்கு தற்போது இடைக்கால அரசு பதவியில் உள்ளது. இந்நிலையில், வங்காளதேச நாடாளுமன்ற தேர்தல், அடுத்த ஆண்டு பிப்ரவரி 12-ந் தேதி நடைபெறும் என்று தலைமை தேர்தல் கமிஷனர் நசிர் உத்தின் அறிவித்துள்ளார். ஷேக் ஹசீனா வெளியேற்றத்துக்கு பிறகு நடக்கும் முதலாவது தேர்தல் இது என்பது குறிப்பிடத்தக்கது. 1 More update … Read more

குழந்தை பெற்று கொள்ளும் நோக்கத்தில் சுற்றுலா விசாவில் வந்தால்… டிரம்ப் நிர்வாகம் கூறிய தகவல்

வாஷிங்டன், அமெரிக்காவில் விசா தொடர்பாக பல்வேறு கட்டுப்பாடுகளை ஜனாதிபதி டிரம்ப் விதித்துள்ளார். இதற்கிடையே சுற்றுலா விசா மூலம் அமெரிக்காவுக்கு வந்து சிலர் குழந்தை பெற்று அக்குழந்தைக்கு அமெரிக்க குடியுரிமை பெற முயற்சிப்பதாக டிரம்ப் நிர்வாகம் குற்றம் சாட்டியது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் குழந்தை பெற்று கொள்ளும் நோக்கத்தில் சுற்றுலா விசா பெற முயன்றால் அவர்களுக்கு விசா கிடையாது என்று அமெரிக்கா மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது. இதுதொடர்பாக இந்தியாவில் உள்ள … Read more