அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸில் டி20 உலக கோப்பை| T20 World Cup in USA, West Indies

துபாய்: இந்தியாவில் வரும் அக்டோபர் 5ம் தேதி 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் துவங்குகிறது. இத்தொடர் முடிந்து அடுத்த சில மாதங்களிலேயே ‘டி20’ உலக கோப்பை துவங்கும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி 2024ம் ஆண்டு ஜூன் மாதத்தில் நடைபெற உள்ள ‘டி20’ உலக கோப்பையை அமெரிக்காவும், வெஸ்ட் இண்டீஸ்ம் சேர்ந்து நடத்துவதாக ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதில் அமெரிக்காவில் டல்லாஸ், புளோரிடா, நியூயார்க் ஆகிய மாகாணங்களில் நடைபெறும் … Read more

உக்ரைனில் இனப்படுகொலை… ஐ.நா. பொது சபையில் ரஷியா மீது ஜெலன்ஸ்கி ஆவேசம்

நியூயார்க், உக்ரைன் மற்றும் ரஷியா இடையேயான போரானது தொடர்ந்து, ஓராண்டை கடந்து நீடித்து வருகிறது. இதில், இரு தரப்பிலும் பலர் உயிரிழந்து வருகின்றனர். தூதரக அளவிலான அமைதி பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. எனினும் போரானது நிற்காமல் தொடருகிறது. இந்நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 78-வது ஐ.நா. பொது சபை கூட்டத்தொடர் நடைபெற்றது. இதில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்போது, ரஷியாவில் உள்ள உக்ரைனிய குழந்தைகளை திரும்ப சொந்த நாட்டுக்கு கொண்டு வர … Read more

மீண்டும் வருகிறது ‘டாஸ்மேனியன் புலி’ – 100 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்து போன விலங்கு

சிட்னி: சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்துபோன டாஸ்மேனியன் புலி என்ற விலங்கை மீண்டும் உயிர்ப்பிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டிருப்பதாக மெல்போர்ன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். தைலசின் என்று அழைக்கப்படும் டாஸ்மேனியன் புலி இனம் கடந்த 2000 ஆண்டுகளுக்கு முன்பு காலநிலை மாற்றம், வேட்டையாடுதல் உள்ளிட்ட காரணங்களால் ஆஸ்திரேலியாவின் டாஸ்மேனியா தீவைத் தவிர உலகின் மற்ற பகுதிகளில் இருந்து அழிந்து போனது. ஐரோப்பிய குடியேற்றத்திற்கு முன்பு சுமார் 5,000 டாஸ்மேனிய புலிகள் டாஸ்மேனிய காடுகளில் இருந்ததாக கூறப்படும் … Read more

நியூசிலாந்தில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவு

வெல்லிங்டன்: நியூசிலாந்து நாட்டின் தெற்கு தீவு பகுதியில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் சேதங்கள் எதுவும் இல்லை எனக் கூறப்பட்டுள்ளது. நியூசிலாந்து நாட்டின் தெற்கு தீவு பகுதியில் அமைந்துள்ள ஜெரால்டின் நகருக்கு அருகே இன்று காலை 9.15 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 11 கிமீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் அதிர்வை சுமார் 14,000 மக்கள் உணர்ந்ததாகக் கூறப்படுகிறது. இந்த ஆண்டில் ஏற்பட்ட நிலநடுக்கங்களில் இதுவே … Read more

மனிதர்களிடத்தில் சோதனையைத் தொடங்க உள்ளது எலோன் மஸ்கின் நியூராலிங்க்!

கலிபோர்னியா: எலான் மஸ்க் உரிமையாளராக உள்ள நியூராலிங்க் நிறுவனம் மனிதர்களிடத்தில் சோதனையை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மூளையில் பொருத்தும் வகையில் நியூராலிங்க் தயாரித்துள்ள சிப்களை பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு செலுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அமெரிக்காவை சார்ந்த 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் நியூராலிங்க் ஹியூமன் ட்ரையலுக்கு தானாக முன்வந்து விண்ணப்பிக்கலாம் எனத் தெரிகிறது. இதற்கான விண்ணப்பம் அந்நிறுவனத்தின் வலைதளத்தில் கிடைக்கிறது. மனிதர்களின் மூளையில் சிப் பொருத்தி சோதனை மேற்கொள்ள முறையான அனுமதி பெற்றுள்ளதாக அந்நிறுவனம் … Read more

ஏலியன்களின் சடலங்களின் ஆய்வறிக்கை வெளியானது! வேற்றுகிரகவாசிகள் இருப்பது உண்மை தான்

Research On Alien Bodies: ஏலியன்களின் சடலங்களில் மாற்றம் எதுவும் நடக்கவில்லையாம்! அப்ப வேற்றுகிரகவாசி இருப்பது  உண்மை தான்… 1000 ஆண்டுகள் பழைய வேற்றுகிரகவாசிகளின் சடலங்கள் சொல்லும் சரித்திரம்

Canterbury: நியூசிலாந்தை குலுக்கி உலுக்கிய 6.2 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம்

New Zealand earthquake: எரிமலைகள் அதிகமிருக்கும் நியூசிலாந்து நில அதிர்வினால் குலுங்கியது…  6.2 ரிக்டர் அளவிலான வலுவான நிலநடுக்கத்தின் சேத விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை  

பயனர்களுக்கு தெரியாமல் லொகேஷனை டிராக் செய்த கூகுள்: ரூ.700 கோடி அபராதம் விதிப்பு

கலிபோர்னியா: பயனர்களுக்கு தெரியாமல் இருப்பிடம் (லொகேஷன்) குறித்த விவரங்களை சேகரித்த விவகாரத்தில் கூகுள் நிறுவனத்துக்கு ரூ.700 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கலிபோர்னியாவின் அட்டர்னி ஜெனரல் தாக்கல் செய்த வழக்கில் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு காரணங்களுக்காக கூகுள் நிறுவனம் பயனர்களின் இருப்பிடம் சார்ந்த விவரங்களை சேகரிப்பது வழக்கம். அதற்கு பயனர்கள் லொகேஷன் அம்சத்தை ஆன் செய்திருக்க வேண்டும். இதன் மூலம் பல்வேறு சேவைகளை பயனர்கள் பெற முடியும். இருப்பினும் பிரைவசி உட்பட பல்வேறு காரணங்களுக்காக பயனர்கள் லொகேஷனை … Read more