பயனர்களுக்கு தெரியாமல் லொகேஷனை டிராக் செய்த கூகுள்: ரூ.7,000 கோடி அபராதம் விதிப்பு

கலிபோர்னியா: பயனர்களுக்கு தெரியாமல் இருப்பிடம் (லொகேஷன்) குறித்த விவரங்களை சேகரித்த விவகாரத்தில் கூகுள் நிறுவனத்துக்கு ரூ.7,000 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கலிபோர்னியாவின் அட்டர்னி ஜெனரல் தாக்கல் செய்த வழக்கில் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு காரணங்களுக்காக கூகுள் நிறுவனம் பயனர்களின் இருப்பிடம் சார்ந்த விவரங்களை சேகரிப்பது வழக்கம். அதற்கு பயனர்கள் லொகேஷன் அம்சத்தை ஆன் செய்திருக்க வேண்டும். இதன் மூலம் பல்வேறு சேவைகளை பயனர்கள் பெற முடியும். இருப்பினும் பிரைவசி உட்பட பல்வேறு காரணங்களுக்காக பயனர்கள் லொகேஷனை … Read more

சீனா உதவியுடன் நிலவுக்கு மனிதர்களை அனுப்ப வெனிசுலா திட்டம்

கராகஸ், சீன தலைநகர் பெய்ஜிங்கில் சீனா-வெனிசுலா உயர்மட்ட அதிகாரிகள் சந்திப்பு நடைபெற்றது. இதன் நிறைவு விழாவில் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், சீனா உதவியுடன் முதன்முறையாக வெனிசுலா நாட்டின் விண்வெளி வீரர்கள் நிலவு பயணம் மேற்கொள்ள உள்ளனர். இதற்காக வெனிசுலா நாட்டில் இருந்து இளைஞர்கள் பலர் சீனாவில் பயிற்சி பெறுவார்கள் என அவர் தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது உணவு ஏற்றுமதி, தகவல் தொடர்பு, சுற்றுலா உள்பட பல்வேறு முக்கிய … Read more

எல்லோரும் அனுபவிக்க கூடியதே: இன்று சர்வதேச ஜனநாயக தினம்| Something everyone can enjoy: Today is International Democracy Day

ஜனநாயகம் என்பது ஒரு வழிமுறை. அது ஒரு இலக்கும் கூட. சர்வதேச சமூகத்தின் முழு பங்களிப்பு மற்றும் ஆதரவுடன் எட்டப்பட வேண்டிய இலக்கு. தனிநபர்கள், பொதுச் சமூகம், அரசாங்கம் என அனைத்திற்கும் இதில் பங்கு இருக்கிறது. எங்கேயும், எப்போதும், எல்லோராலும் அனுபவிக்ககூடியதே ஜனநாயம் – இப்படித்தான் ஜனநாயகம் குறித்து ஐ.நா. தனது அதிகாரபூர்வ இணையதளத்தில் விளக்கம் கொடுத்துள்ளது. ஐ.நா. பொதுச் சபை கடந்த 2007ஆம் ஆண்டு ஒரு தீர்மானம் நிறைவேற்றியதனை தொடர்ந்து 2008ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் … Read more

24 மணி நேரமும் படுத்தே இருக்க வேண்டும்… 'சோம்பேறி குடிமகன்' பட்டத்திற்காக நடக்கும் விநோத போட்டி

போட்கொரிகா, தென்கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான மாண்டெனெக்ரோவில், ‘சோம்பேறி குடிமகன்’ என்ற பட்டத்தை வெல்வதற்காக விநோதமான போட்டி ஒன்று நடத்தப்பட்டு வருகிறது. இந்த போட்டியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் எந்த வேலையும் செய்யாமல், 24 மணி நேரமும் மெத்தையில் படுத்தே இருக்க வேண்டும் என்பதே இந்த போட்டியின் முக்கிய விதிமுறையாகும். போட்டியாளர்கள் 8 மணி நேரத்திற்கு ஒரு முறை கழிப்பறைக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள். மற்ற நேரங்களில் எழுந்து நிற்கவோ அல்லது உட்காரவோ கூடாது. இதனை மீறினால் போட்டியில் … Read more

லிபியா வெள்ள பாதிப்பு: பலி எண்ணிக்கை 20,000ஐ கடந்தது!

திரிபோலி, தெற்கு ஆப்பிரிக்காவில் மத்திய தரைக்கடல் பகுதியில் அமைந்துள்ள லிபியாவில் உள்நாட்டுப்போர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், லிபியாவை டேனியல் புயல் தாக்கியது. மத்திய தரைக்கடல் பகுதியில் அமைந்துள்ள லிபியாவின் டெர்னா, பெடா, சுசா உள்பட பல்வேறு நகரங்களை புயல் தாக்கியது. இதனால், கனமழை பெய்து, நீர்நிலைகள் நிரம்பின. அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. புயல், கனமழை, வெள்ளப்பெருக்கில் சிக்கி ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். பலர் மாயமாகியுள்ளனர். மேலும், ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து மீட்புப்பணிகள் துரிதப்படுத்தப்பட்டு … Read more

எடை குறைக்க வழி சொல்லும் ஜப்பான் ஏர்லைன்ஸ்! இது ஆடை குறைப்பு வழி

Any Wear Anywhere: ஜப்பான் ஏர்லைன்ஸ் பயணிகளை ஆடையின்றி பயணிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கலாம். இதற்கான காரணம் சுவராசியமானது  

காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் முயற்சி: புகை மண்டலமான சிட்னி| Trying to contain bushfires: Sydney, the smoke zone

சிட்னி, ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ பரவாமல் தடுக்க மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால், சிட்னி நகரம் புகை மண்டலமாக மாறியுள்ளது. ஆஸ்திரேலியா நாட்டில் கோடைக்காலத்தில் காட்டுத் தீ ஏற்படுவது வழக்கம். விக்டோரியா, நியூ சவுத்வேல்ஸ் மாகாணங்களில் பற்றி எரியும் தீயால், பல அரியவகை மரங்கள் தீக்கிரையாகியுள்ளன. ஒரு சில இடங்களில் உயிரிழப்புகளும் ஏற்பட்டு உள்ளன. இதனால், தீ அபாயக் குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அரசு, காட்டுத் தீயால் ஏற்படும் ஆபத்துகளை குறைக்கும் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. இதையடுத்து, காட்டுத்தீ சீசனுக்கு … Read more

Breaking! அமெரிக்க அதிபர் மகன் மீது குற்றச்சாட்டு? ஜோ பிடெனுக்கு அதிகரிக்கும் சிக்கல்

Hunter Biden Indicted: அமெரிக்க அதிபரின் மகன் மீதான குற்றச்சாட்டு விசாரணை எங்கே நடைபெறும்? அதிபர் பதவிக்கு வேட்டு வைக்குமா மகனின் போதைப்பொருள் பழக்கம்?

இந்திய மாணவி இறந்ததில் கடும் சர்ச்சை : நடவடிக்கைக்கு அமெரிக்க அரசு உறுதி| The US government has decided to take appropriate action in the Indian students death

வாஷிங்டன், ‘அமெரிக்காவில், போலீஸ் ரோந்து வாகனம் இடித்து இந்திய மாணவி உயிரிழந்த விவகாரத்தில் விரைவாக விசாரணை நடத்தப்பட்டு, விபத்துக்கு காரணமாக போலீஸ் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என, அமெரிக்க அரசு உறுதி அளித்து உள்ளது. அமெரிக்காவின், வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள சியாட்டில் நகரில், ஆந்திராவின் கர்னுால் மாவட்டத்தைச் சேர்ந்த ஜானவி கண்டூலா, 23, என்ற மாணவி, முதுநிலை பட்டப்படிப்பு படித்து வந்தார். கடந்த ஜன., மாதம், சியாட்டில் நகரில் மாணவி ஜானவி சாலையை கடக்கும்போது, … Read more

ஸ்பெயினில் புடவையில் ஜாகிங் சென்ற மம்தா| Mamata went jogging in a saree in Spain

மாட்ரிட், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஸ்பெயின் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், வழக்கமாக அணியும் புடவையில், ‘ஜாகிங்’ பயிற்சியில் ஈடுபட்டார். மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி, முதலீடுகளை ஈர்ப்பதற்காக, மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாய், ஐரோப்பிய நாடான ஸ்பெயினுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். இந்நிலையில் ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட் சென்ற அவர், நேற்று காலை அங்கு, ஜாகிங் பயிற்சி மேற்கொண்டார். வழக்கமாக அணியும் புடவை மற்றும் … Read more