மூன்று விரல்கள்… பெரிய தலை… – மெக்சிகோவில் காட்சிப்படுத்தப்பட்டது ஏலியன்களின் உடல்களா?

மெக்சிகோ: மெக்சிகோ நாட்டில் இரண்டு ஏலியன் உடல்களை அந்நாட்டு ஆய்வாளர்கள் பொதுமக்கள் காட்சியப்படுத்திய விவகாரம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பிரபஞ்சத்தில் பூமியில் இல்லாத வேறு உயிரினங்கள் உள்ளனவா என்பது குறித்த ஆய்வுகள் பன்னெடுங்காலமாக நடந்து வருகின்றன. அதுகுறித்த தெளிவான முடிவுக்கு இன்னும் ஆய்வாளர்களால் வர இயலவில்லை. இந்த சூழலில் மெக்சிகோவைச் சேர்ந்த பத்திரிகையாளரும் யூஎஃப்ஓ ஆய்வாளருமான ஜெய்மீ மாஸ்ஸன் என்பவர், மெக்ஸிகோ காங்கிரஸ் பிரதிநிதிகள் சபை விசாரணையின்போது இரண்டு ஏலியன் உடல்களை காட்சிப்படுத்தியுள்ளார். ஹாலிவுட் படங்களில் வரும் ஏலியன்களைப் … Read more

சிங்கப்பூர் அதிபராக இன்று பதவியேற்கிறார் தர்மன் சண்முகரத்னம்

சிங்கப்பூர், சிங்கப்பூரில் கடந்த 1-ந் தேதி அதிபர் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் இந்திய வம்சாவளியும், தமிழருமான தர்மன் சண்முகரத்னம் 70.4 சதவீத வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். இதை தொடர்ந்து, சிங்கப்பூரின் 9-வது அதிபராக அவர் இன்று (வியாழக்கிமை) பதவியேற்கிறார். பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன. தர்மன் சண்முகரத்னம் இதற்கு முன், சிங்கப்பூர் நாணய வாரியத்தின் தலைவர், பிரதமரின் ஆலோசகர், நிதிமந்திரி, கல்வி மந்திரி, துணை பிரதமர் என பல்வேறு பதவிகளை வகித்துள்ளார் … Read more

லெபனானில் அகதிகள் முகாமில் வன்முறை; 6 பேர் பலி

பெய்ரூட், லெபனான் நாட்டில் 10-க்கும் மேற்பட்ட அகதிகள் முகாம்கள் உள்ளன. இவற்றில் ஒன்றான சிடான் என்ற துறைமுக நகரின் தெற்கு பகுதியில் அமைந்துள்ளத அகதிகள் முகாமில் மோதல்கள் ஏற்பட்டு உள்ளன. ஐன் எல்-ஹில்வெ என்ற இந்த முகாம், பதா இயக்கத்தினரால் நடத்தப்படுகிறது. இதன் தலைவர் கடந்த ஜூலை மாத இறுதியில் முகாமில் பலியானார். அவரை மர்ம நபர்கள் சுட்டு கொன்றுள்ளனர் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த நிலையில், முகாமில் அடிக்கடி வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன. கடந்த 7-ந்தேதி … Read more

ஸ்டோக்ஸ் 182 ரன் விளாசல்: நியூசிலாந்தை வீழ்த்தியது இங்கிலாந்து| Stokes 182: England beat New Zealand

ஓவல்: நியூசிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் ஸ்டோக்ஸ் விளாசிய 182 ரன் கைகொடுக்க, 181 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்திய இங்கிலாந்து அணி, மெகா வெற்றி பெற்றது. இங்கிலாந்து சென்றுள்ள நியூசிலாந்து அணி, நான்கு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டிகளின் முடிவில், தொடர் 1-1 என சமநிலையில் இருந்தது. லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் 3வது போட்டி நடந்தது. ‘டாஸ்’ வென்ற நியூசிலாந்து ‘பீல்டிங்’ தேர்வு செய்தது. இங்கிலாந்து அணிக்கு பவுல்ட் … Read more

ஈரானுக்கு தடை விதிக்க அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல்

வாஷிங்டன், ஈரான் தலைநகர் டெஹ்ரானில் கடந்த ஆண்டு ஹிஜாப் சரியாக அணியவில்லை எனக்கூறி போலீசாரால் இளம்பெண் மாஷா அமினி கைது செய்யப்பட்டார். விசாரணையின்போது அவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். இதனை கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் வெடித்தது. இதில் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே நடந்த மோதலில் குழந்தைகள், பெண்கள் உள்பட 500-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர். மேலும் 2 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்தனர். மேலும் ஈரான், உலகநாடுகளை அச்சுறுத்தும் விதமாக அணு ஆயுதங்களை உற்பத்தி செய்து பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாக … Read more

ஆப்பிரிக்க நாட்டில் 46 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை: பதிலடி தாக்குதலில் 10 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

பமாகோ, ஆப்பிரிக்க நாடான மாலியில் கடந்த 2020-ம் ஆண்டு மக்களாட்சி கவிழ்க்கப்பட்டது. அதன் பின் அமைந்த ராணுவ ஆட்சியில் ஜ.எஸ்., அல்கொய்தா உள்ளிட்ட பயங்கரவாதிகள் அதிக அளவில் தலைதூக்க ஆரம்பித்தனர். நாட்டின் சாகல் மாகாணத்தை அடிப்படையாக கொண்டு இயங்கி வரும் பயங்கரவாதிகளை ஓழித்துக்கட்ட ராணுவத்தினர் கடுமையாக முயற்சித்து வருகிறார்கள். இதனால் அவ்வப்போது இருதரப்புக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படும். இந்தநிலையில் கவோ பகுதியின் போரெம் நகரில் ராணுவ வீரர்கள் கவச வாகனங்களில் வழக்கமான ரோந்துப்பணி மேற்கொண்டனர். … Read more

3 ராசிகளுக்கு கொண்டாட்டம், மற்றவர்களுக்கு திண்டாட்டம்! அக்டோபர் மாத சுக்கிரப் பெயர்ச்சி

Planets Transit Predictions: சுக்கிரனின் பெயர்ச்சியால் உறவுகள் மற்றும் குடும்ப விஷயங்களில் ஈகோ தொடர்பான பிரச்சினைகள் ஏற்படும், ஆனால் 3 ராசிக்காரர்களுக்குக் கொண்டாட்டம் தான் 

இந்திய மாணவியை மோதி கொன்றுவிட்டு சிரித்து பேசிய அமெரிக்க போலீசார்| American policemen laughed and talked after hitting and killing an Indian student

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஹுஸ்டன்: அமெரிக்காவில், போலீஸ் வாகனம் மோதி, இந்திய மாணவி உயிரிழந்த சம்பவம் குறித்து கேலி செய்து போலீஸ் அதிகாரிகள் அலட்சியமாக சிரித்து பேசிய சம்பவம் தொடர்பாக, அந்த அதிகாரிகள் மீது விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆந்திராவின் கர்ணுால் மாவட்டத்தை சேர்ந்த ஜானவி கண்டூலா, 23, அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள சீயாட்டல் நகரில் முதுநிலை பட்டப்படிப்பு படித்து வந்தார். கடந்த ஜன., 23ம் தேதி, சீயாட்டலில் இவர் சாலையை கடக்கும் போது … Read more

வெள்ளக்காடாய் மாறிய லிபியா! மழை வெள்ள பலி 5300ஐ தாண்டியது! இயற்கை பேரிடர்

Death Toll In Libya Flood: லிபியாவில் ஏற்பட்ட வெள்ளத்தின் பலி எண்ணிக்கை 5300ஐ தாண்டியது… சடலங்களை வைக்கக்கூட இடம் இல்லாத அளவு மருத்துவமனைகள் நிரம்பிவழிகின்றன