பதவி நீக்கம் செய்யப்பட்டதால் விரக்தி – ரஷ்ய போக்குவரத்துத் துறை அமைச்சர் தற்கொலை

மாஸ்கோ: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தன்னை பதவி நீக்கம் செய்த சில மணி நேரங்களில் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார் அந்நாட்டின் முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் ரோமன் ஸ்டாரோவோயிட். ரஷ்ய தலைநகர் மாஸ்கோவின் புறநகர்ப் பகுதியில் காரில் அவருடைய உடல் கண்டெடுக்கப்பட்டதாக ரஷ்ய செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன. உக்ரைன் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள குர்ஸ்க் பிராந்தியத்தின் ஆளுநராக ஐந்து ஆண்டுகள் பணியாற்றிய ரோமன் கடந்த ஆண்டு மே மாதம் ரஷ்யாவின் போக்குவரத்துத் துறை … Read more

ஜப்பான், தென் கொரிய பொருட்களுக்கு 25% வரிவிதிப்பு: ட்ரம்ப் கடிதம்!

வாஷிங்டன்: தென் கொரியா மற்றும் ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இந்த வரிவிதிப்பு வரும் ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வரும் என்று ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார். அத்துடன் தென் கொரியா மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு அனுப்பிய கடிதங்களின் நகல்களையும் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் ட்ரம்ப் கூறியிருப்பதாவது: “வரும் ஆகஸ்ட் 1 முதல் அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் ஜப்பான் / … Read more

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம் அவசியம்: பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேசியது என்ன?

ரியோ டி ஜெனிரோ: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், உலக வர்த்தக அமைப்பு ஆகியவற்றில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம் என்று பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்தினார். பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் பிரிக்ஸ் கூட்டமைப்பின் 17-வது உச்சி மாநாடு நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாளில் உலக அமைதி, பாதுகாப்பு குறித்த சிறப்பு கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். பின்னர் சர்வதேச சீர்திருத்தம், செயற்கை நுண்ணறிவு தொடர்பான சிறப்பு கூட்டங்களிலும் அவர் கலந்து … Read more

தலாய் லாமாவிற்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து – எதிர்ப்பு தெரிவித்த சீனா

பீஜிங், சீனாவின் தன்னாட்சி பெற்ற மாகாணமாக திபெத் உள்ளது. திபெத்திய புத்த மத துறவியான 14-வது தலாய் லாமா, சீனாவின் அச்சுறுத்தல் காரணமாக சிறுவயதிலேயே இந்தியாவில் அரசியல் தஞ்சம் புகுந்து விட்டார். அவருடன் வந்த லட்சக்கணக்கான திபெத் மக்கள் இந்தியாவில் வசிக்கின்றனர். இவர்கள், திபெத் மீதான சீனாவின் ஆட்சியை ஏற்பதில்லை. இந்நிலையில், தலாய் லாமாவின் 90-வது பிறந்த நாள் 6-ந்தேதி(நேற்று) கொண்டாடப்பட்டது. அதனை முன்னிட்டு உலகம் முழுவதும் உள்ள மத தலைவர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் அவருக்கு … Read more

அமெரிக்காவின் டெக்சாஸ் பெருவெள்ளம்: உயிரிழப்பு 82 ஆக அதிகரிப்பு; 41 பேர் மாயம்

வாஷிங்டன்: அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 82 ஆக உயர்ந்துள்ளது; காணாமல் போனோரின் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கடந்த 4-ம் தேதி சில மணி நேரத்தில் 280 மிமீ மழை பெய்தது. இதன் காரணமாக குவாடலூப் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டடு, சுமார் 2 மணி நேரத்தில் நதியின் நீர்மட்டம் 29 அடி வரை உயர்ந்தது. … Read more

இரட்டை நிலைப்பாடுகளால் உலகளாவிய தெற்கு பகுதிக்கு கடுமையாக பாதிப்பு; பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

ரியோ டி ஜெனிரோ, பிரதமர் மோடி கானா, டிரினிடாட் அண்டு டுபாகோ, அர்ஜென்டினா, பிரேசில் மற்றும் நமீபியா ஆகிய 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். இதன் ஒரு பகுதியாக, பிரேசில் நாட்டில் நடைபெற்ற 17-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக அவர் நேற்று அதிகாலை அந்நாட்டுக்கு சென்றார். இந்த உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிமை, பிரதமர் மோடி நேரில் சந்தித்து பேசினார். இதேபோன்று, கியூபா நாட்டின் ஜனாதிபதி மிகுவேல் டையஸ்-கேனலையும் … Read more

குழந்தைகளை பெற்றெடுக்க பள்ளி மாணவிகளை ஊக்குவிக்கும் ரஷ்யா – பகீர் பின்னணி

ரஷ்யாவின் சில பகுதிகளில் டீன் ஏஜ் பள்ளி மாணவிகள் குழந்தைகளை பெற்றெடுக்குமாறு ஊக்குவிக்கப்படுகின்றனர். இதற்காக அவர்களுக்கு இந்திய ரூபாய் மதிப்பில் 1 லட்சம் வரை வழங்கப்படுகிறது. ரஷ்யாவின் 10 மாகாணங்களில் இந்தப் புதிய திட்டம் கடந்த சில மாதங்களாகவே அமலில் உள்ளது. இது உள்நாட்டிலும், உலக அரங்கிலும் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது. ரஷ்ய அதிபரின் உத்தரவின் பேரிலேயே இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதால், அதற்கான எதிர்ப்புக் குரல் உடனுக்குடன் நசுக்கப்பட்டு விடுவதில் ஆச்சரியம் ஏதும் இருக்க முடியாது. மேலும், … Read more

அமெரிக்க விரோத கொள்கைகளை ஆதரித்தால் கூடுதல் வரி: டிரம்ப் எச்சரிக்கை

வாஷிங்டன், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது ட்ரூத் சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: “பிரிக்ஸ் கூட்டமைப்பின் அமெரிக்க விரோத கொள்கைகளை ஆதரிக்கும் எந்தவொரு நாட்டுக்கும் கூடுதலாக 10 சதவீதம் வரி விதிக்கப்படும். இதில் எந்தவொரு மாற்றத்துக்கும் இடமில்லை. இந்த எச்சரிக்கைக்கு கவனம் செலுத்துவோர்க்கு நன்றி.” என்று பதிவிட்டுள்ளார். எனினும், எந்த மாதிரியான நடவடிக்கைகள் அமெரிக்க விரோதக் கொள்கைகள் என்பது பற்றி டிரம்ப் எதுவும் விரிவாக பதிவிடவில்லை. டொனால்டு டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்றதில் இருந்தே பல்வேறு நாடுகள் … Read more

33-வது பருவநிலை மாற்ற மாநாட்டை இந்தியா தலைமையேற்று நடத்தும்: பிரிக்ஸ் கூட்டறிக்கை

ரியோ டி ஜெனீரோ, பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோ நகரில், 17-வது பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதில், இந்தியா, ரஷியா, பிரேசில், தென்ஆப்பிரிக்கா உள்ளிட்ட உறுப்பு நாடுகள் கலந்து கொள்கின்றன. இதில் பங்கேற்பதற்காக, இந்தியா தரப்பில் பிரதமர் மோடி சென்றுள்ளார். பிரேசிலின் ஜனாதிபதி லுலா அழைப்பின்பேரில், அந்நாட்டுக்கு சென்ற பிரதமர் மோடி, பிரேசில் தலைநகர் பிரேசிலியாவில் அவரை சந்தித்து உரையாடுவார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த 17-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கூட்டறிக்கை ஒன்று … Read more

பிரிக்ஸ் உறுப்பு நாடுகளுக்கு கூடுதல் வரி விதிப்பதாக அச்சுறுத்திய ட்ரம்ப்: சீனா எதிர்வினை

புதுடெல்லி: பிரிக்ஸ் உறுப்பு நாடுகளுக்கு கூடுதலாக 10% வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அச்சுறுத்தியுள்ள நிலையில், ‘பிரிக்ஸ் நாடுகள் மோதலை விரும்பவில்லை’ என்று சீனா எதிர்வினையாற்றியுள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் கூடுதல் வரி அச்சுறுத்தலுக்கு பதிலளித்துள்ள சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங், “வர்த்தகம் மற்றும் வரிவிதிப்பு போர்களில் வெற்றியாளர்கள் இல்லை. அதிகளவில் வரி விதிக்கும் போக்கு முன்னேற்றத்துக்கான எந்த வழியையும் வழங்காது என்று சீனா தனது நிலைப்பாட்டை மீண்டும், … Read more