மொராக்கோவில் 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு! பலி எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரிப்பு

Earthquake Morocco: மொராக்கோ பூகம்பத்தில் பலி எண்ணிக்கை இரண்டாயிரத்தைத் தாண்டியது. நாடு 3 நாட்கள் தேசிய துக்கம் அறிவித்துள்ளது, உலகத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர் 

சூடான் உள்நாட்டு போரால் 78 ஆயிரம் பேர் எத்தியோப்பியாவில் தஞ்சம் – ஐ.நா. அறிக்கை

வடகிழக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் அந்த நாட்டு ராணுவத்துக்கும், ஆர்.எஸ்.எப். எனப்படும் துணை ராணுவ படையினருக்கும் இடையே கலவரம் வெடித்தது. கடந்த ஏப்ரல் மாதம் 15-ந்தேதி தொடங்கிய இந்த உள்நாட்டு போரானது இன்னும் முடிந்தபாடில்லை. இந்த போரில் இதுவரை 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் அங்கு பலியாகி உள்ளனர். இதனால் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதால் ஏராளமானோர் பாதுகாப்பு கருதி அண்டை நாடுகளுக்கு அகதிகளாக குடிபெயர்கின்றனர். அந்தவகையில் சூடானில் இருந்து 78 ஆயிரத்து 598 பேர் எத்தியோப்பியாவுக்கு … Read more

அமெரிக்க மாகாணத்தில் துப்பாக்கிக்கு தடை

அமெரிக்காவில் சமீப காலமாக துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அதன்படி கடந்த 6-ந்தேதி அங்குள்ள அல்புகெர்கி பகுதியின் கூடைப்பந்து மைதானத்துக்கு அருகே நடந்த துப்பாக்கிச்சூட்டில் 11 வயது சிறுவன் உயிரிழந்தான். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில் இதுபோன்ற துப்பாக்கி வன்முறையை தவிர்க்க நியூ மெக்சிகோ மாகாண கவர்னர் புதிதாக நிர்வாக உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதில் நியூ மெக்சிகோ மாகாணத்துக்குட்பட்ட பகுதிகளில் அடுத்த 30 நாட்களுக்கு துப்பாக்கிகளை கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்படுகிறது. … Read more

சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் தரைமட்டம் – மொராக்கோவில் 1,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

காசாபிளாங்கா: மொராக்கோ நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்துக்கு இதுவரை 1037 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நிலநடுக்கத்தால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மரண ஓலங்கள் கேட்டுக் கொண்டே இருப்பதாகத் தெரியவந்துள்ளது. மொராக்கோ நாட்டில் நேற்று முன்தினம் நள்ளிரவு 11.11 மணிக்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.8புள்ளி என்ற அளவில் பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் வீடுகள், பல்வேறு கட்டிடங்களில் இருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடிவந்தனர். நிலநடுக்கத்துக்கு இதுவரை 1037 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. 300-க்கும் … Read more

நாசாவின் புதிய திட்டத்துக்கு தலைவரான இந்திய விஞ்ஞானி| Indian scientist who is the head of the new program of NASA

வாஷிங்டன்அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான, ‘நாசா’ வின், ‘சந்திரன் – செவ்வாய் கிரக ஆராய்ச்சி திட்டத்தின் தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பொறியாளர் ஷாக்ட்ரியா நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே நிலவுக்கு மனிதர்களை அனுப்பி சாதனை படைத்துள்ள அமெரிக்கா, அடுத்த கட்டமாக நிலவில் நீண்ட காலம் மனிதர்கள் தங்கியிருந்து ஆய்வு மேற்கொள்ளும் திட்டத்தையும், செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தையும் செயல்படுத்துவது குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், இந்த திட்டத்துக்கான தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஷாக்ட்ரியா என்ற … Read more

அமெரிக்க ஆஸ்பத்திரிகளில் சைபர்கிரைம் தாக்குதல்; சுகாதார சேவைகள் முடக்கம்

அமெரிக்காவின் கலிபோர்னியா, டென்னசி உள்பட 5 மாகாணங்களில் உள்ள ஆஸ்பத்திரிகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் உள்ள கம்ப்யூட்டர்களில் சைபர் கிரைம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 900-க்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர்களில் இருந்து சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் பேரின் தகவல்கள் திருடப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சைபர் கிரைம் தாக்குதல் நடத்தப்பட்ட ஆஸ்பத்திரிகளில் சர்வர்கள் அணைத்து வைக்கப்பட்டது. மேலும் அங்கிருந்த நோயாளிகள் உடனடியாக வேறு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டனர். இதன் காரணமாக அங்கு சுகாதார சேவைகள் பெரிதும் முடங்கின … Read more

இந்தியாவுக்கு உயர்தொழில்நுட்பம்: அமெரிக்க பார்லி.,யில் மசோதா| High Technology for India: Bill in US Parl

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்,-இந்தியாவுக்கு உயர் தொழில்நுட்பங்கள், சாதனங்களை ஏற்றுமதி செய்வதற்கான தடையை நீக்கும் மசோதா, அமெரிக்க பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ‘ஜி – 20’ மாநாட்டில் பங்கேற்க, அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். இந்நிலையில், அமெரிக்க பார்லிமென்டில், இரண்டு முக்கிய எம்.பி.,க்கள் புதிய மசோதாவை தாக்கல் செய்துள்ளனர். அமெரிக்க பார்லி.,யின் பிரதிநிதிகள் சபையின் வெளியுறவு விவகாரக் குழுவைச் சேர்ந்த கிரிகோரி மீக்ஸ், சபையின் இந்தியக் குழுவின் … Read more

மொராக்கோ நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,037 ஆக உயர்வு

ரபட், வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு மொராக்கோ. இந்நாட்டில் நேற்று இரவு (இந்திய நேரப்படி இன்று காலை) பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டு நேரப்படி இரவு 11.11 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் அந்நாட்டின் மாரகேஷ், அல்-ஹவுஸ், அஷிலால், சிஷவ், டரொண்ட் ஆகிய நகரங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டது. குறிப்பாக மாரகேஷ் நகர் நிலநடுக்கத்தால் அதிக பாதிப்பை சந்தித்துள்ளது. நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இரவு நேரம் என்பதால் … Read more

'பெருமைப்பட ஒன்றுமில்லை' – ஜி20 டெல்லி பிரகடனம் குறித்து உக்ரைன் கருத்து

கீவ்: ஜி20 கூட்டுப் போர்ப் பிரகடனம் குறித்து ‘பெருமைப்பட ஒன்றுமில்லை’ என்று உக்ரைன் கருத்து தெரிவித்துள்ளது. உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு தொடர்பான ஜி20 நாடுகளின் கூட்டுப் பிரகடனத்தால் பெருமைப்பட ஒன்றுமில்லை என்று உக்ரேனிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், ரஷ்யாவைக் குறிப்பிடாததற்காக பிரகடன உரையை விமர்சித்தது. இதுதொடர்பாக, “ஜி20 கூட்டத்தில் உக்ரைன் தரப்பின் பங்கேற்பு, பங்கேற்பாளர்கள் நிலைமையை நன்கு புரிந்துகொள்ள அனுமதித்திருக்கும் என்பது தெளிவாகிறது” என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஒலெக் நிகோலென்கோ … Read more

மொராக்கோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : ஆயிரத்தை தாண்டியது பலி; கட்டடங்கள் சேதம்| Powerful earthquake in Morocco: death toll exceeds a thousand; Damage to buildings

ரபாத்,: மொராக்கோவில், நேற்று முன்தினம் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி, 1,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 1,200 பேர் படுகாயம் அடைந்துள்ள நிலையில், கட்டட இடிபாடுகளில் ஏராளமானோர் சிக்கி இருப்பதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என, அஞ்சப்படுகிறது. வட ஆப்ரிக்க நாடான மொராக்கோவில், நேற்று முன்தினம் இரவு, சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது, ரிக்டர் அளவுகோலில், 6.8 ஆக பதிவாகி உள்ளதாகவும், மொராக்கோவின் சுற்றுலாத் தலமான, மாரகேஷ் பகுதியில் இருந்து, 72 கி.மீ., தொலைவில், … Read more