பிரேசிலில் புயல்; ஒரே வீட்டில் 15 பேரின் உடல்கள்…! பலி எண்ணிக்கை 31-ஆக உயர்வு

மியூகம், பிரேசில் நாட்டை கடந்த திங்கள்கிழமை இரவு பெரும் புயல் ஒன்று தாக்கியது. இதனால் அந்நாட்டின் தெற்கு பகுதிகளில் உள்ள மாகாணங்கள் புயலால் அதிகம் பாதிக்கப்பட்டன. புயலால் பெய்த கனமழை காரணமாக ஆறுகளில் நீர் வரத்து அதிகரித்து நகரின் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கடும் வெள்ளத்தில் சிக்கிய மியூகம் நகரின் பல அடுக்குமாடி குடியிருப்புகள் இடிந்து தரைமட்டமாகின. அங்கு ஒரே வீட்டில் 15 பேரின் உடல்களை மீட்புப் படை வீரர்கள் மீட்டு உள்ளனர். இது அப்பகுதியில் … Read more

யு.எஸ். ஓபன் : பைனலில் போபண்ணா, மாத்யூ எப்டென் ஜோடி | U.S. Open: Bopanna, Matthew Ebden in the final

நியூயார்க்: யு.எஸ். ஓபன் டென்னிஸ் தொடரின் ,ஆண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸி.யின் மாத்யூ எப்டென் ஜோடி அபாராமாக ஆடி பைனலுக்குள் நுழைந்தது. கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான யு.எஸ்.ஓபன் டென்னிஸ் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா,l ஆஸ்திரேலியாவின் மாத்யூ எப்டென் ஜோடி 7-6, 6-1 என அமெரிக்காவின் நதானியேல் லமன்ஸ், ஜாக்சன் வித்ரோ ஜோடியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. … Read more

வட கொரியாவுக்கு எந்த நாடும் ராணுவ ஒத்துழைப்பு வழங்கக்கூடாது- தென் கொரிய அதிபர் வலியுறுத்தல்

சியோல்: வட கொரியாவுக்கு எந்த நாடும் ராணுவ ஒத்துழைப்பு வழங்கக் கூடாது என்று தென் கொரியா வலியுறுத்தி உள்ளது. சர்வதேச அமைதியை கெடுக்கும் வகையில் ராணுவ விவகாரங்களில் வடகொரியாவுடன் ஒத்துழைக்கும் எந்த முயற்சியும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று தென் கொரிய அதிபர் யூன் சுக் இயோல் கூறியுள்ளார். இந்தோனேசியாவில் நடைபெறும் தென்கிழக்கு ஆசியாவின் ஆசியான் உச்சி மாநாட்டில் தென் கொரிய அதிபர் இந்த கருத்தை தெரிவித்ததாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. ஆனால் இதுதொடர்பான விரிவான தகவல் … Read more

மியான்மரில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவு

நெய்பிடாவ் மியான்மரில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலஅதிர்வு தெரிவித்துள்ளது. இதுகுறித்து நிலஅதிர்வு மையம் வெளியிட்ட தகவலில், மியான்மரில் இன்று காலை 10.29 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆகப் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கமானது 25 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை. முன்னதாக, ஆகஸ்ட் 21-ம் தேதி 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது என்பது குறிப்பிடத்தக்கது. தினத்தந்தி Related Tags … Read more

அரசு ஊழியர்கள் iPhone பயன்படுத்த முடியாது… தடை விதித்த அரசு!

ஆப்பிள் பயனர்களுக்கு வருத்தமளிக்கும் செய்தியாக, ஐபோன் பயன்பாடு தொடர்பாக அரசாணையை ஒன்றை அரசு வெளியிட்டுள்ளது. மில்லியன் கணக்கான ஐபோன் பயனர்கள் இதனால் பாதிக்கப்படலாம்.

பெரும் பின்னடைவில் சீன பொருளாதாரம்… ஏற்றுமதியில் பெரும் சரிவு!

கோவிட்-19 தொற்றுநோயால் ஏற்கனவே மந்தமான சீனாவின் பொருளாதாரம், மீண்டும் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில், அதன் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி இரண்டும் குறைந்துள்ளன.

ஆசியான் – இந்தியா  ஒத்துழைப்பை வலுப்படுத்த 12 அம்ச திட்டம்: பிரதமர் மோடி வெளியிட்டார்

ஜகர்தா: 21 ஆம் நூற்றாண்டு ஆசியாவின் நூற்றாண்டு. நமது இந்த நூற்றாண்டில் கோவிட் 19-க்கு பிந்தைய ஓர் உலக ஒழுங்கு தேவைப்படுகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும், ஆசியான்(தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு) – இந்தியா இடையிலான ஒத்துழைப்பினை ஊக்குவிப்பதற்காக 12 அம்ச திட்டத்தினையும் முன்மொழிந்தார். இந்தோனேசிய தலைநகர் ஜகார்தாவில் நடைபெறும் ஆசியான் இந்தியா உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “தெற்குலகில் குரலை உரக்க ஒலிக்கச் செய்வதிலும், சுதந்திரமான இந்தோ பசிஃபிக் … Read more

மியான்மரில் மிதமான நிலநடுக்கம்| Earthquake in Myanmar: Quake of Magnitude 4.4 on Richter Scale

நைப்பியிதோ: மியான்மரில் இன்று(செப்.,07) மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.4ஆக பதிவாகி உள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. நைப்பியிதோ: மியான்மரில் இன்று(செப்.,07) மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.4ஆக பதிவாகி உள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள் Advertisement

நிலவை ஆய்வு செய்வதற்கான விண்கலனை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது ஜப்பான்

தனேகஷிமா: நிலவை ஆய்வு செய்வதற்கான விண்கலனை வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ளது ஜப்பான். இன்று (வியாழக்கிழமை) அதிகாலை இதனை விண்ணில் செலுத்தியுள்ளனர் அந்நாட்டு விஞ்ஞானிகள். நிலவை 120 முதல் 180 நாட்களில் இந்த விண்கலன் அடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் தனேகஷிமா விண்வெளி மையத்தில் HII-A லாஞ்சர் (ராக்கெட்) மூலம் நிலவை ஆய்வு செய்வதற்கான SLIM எனும் ஸ்மார்ட் லேண்டர் மற்றும் XRISM எனும் செயற்கைக்கோள் மூலம் பேரண்டம் குறித்தும் ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் மூலம் … Read more