ஹாங்காங்: சாவோலா சூறாவளி எதிரொலி; 450 விமானங்கள் ரத்து, பள்ளிகள் மூடப்பட்டன

ஹாங்காங், சீனாவின் நிர்வாக ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாக ஹாங்காங் அமைந்துள்ளது. ஹாங்காங்கின் குவாங்டாங் மாகாணத்தில் ஹுய்டாங் கவுன்டி பகுதியில் இருந்து தைஷன் நகரை நோக்கி சாவோலோ சூறாவளி இன்று காலை கடந்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூறாவளியானது, தொடர்ந்து மத்திய குவாங்டாங் அருகே மேற்கு நோக்கி நகர்ந்து செல்ல கூடும் என சீன தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதனால் மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும் சூழலும் காணப்படுகிறது. … Read more

இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம்: பேச்சுவார்த்தையை நிறுத்திய கனடா!| Canada pauses trade treaty talks with India after setting year-end deadline

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஒட்டாவா: இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தையை கனட அரசு திடீரென நிறுத்தி வைத்துள்ளது. இரு நாடுகளுக்கு இடையே, ஆக்கப்பூர்வமான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம் தொடர்பாக இந்தியாவும் கனடாவும் கடந்த 2010 முதல் பேச்சுவார்த்தையை துவக்கின. ஆனால், இடையில் தடைப்பட்ட இந்த பேச்சுவார்த்தை கடந்த ஆண்டு மீண்டும் துவங்கியது. ஜ20 மாநாட்டில் பங்கேற்க கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இன்னும் சில நாட்களில் டில்லி வர உள்ள நிலையில், இரு … Read more

அதி பயங்கர சர்மட் ஏவுகணையை நிலைநிறுத்திய ரஷ்யா… பீதியில் NATO நாடுகள்!

ஒரே நேரத்தில் 15 அணுகுண்டுகளை சுமந்து செல்லக்கூடிய, மிகவும் ஆபத்தான மற்றும் அதிநவீன அணுசக்தி ஏவுகணையான சர்மாட்டை  நிறுத்தி நேட்டோ நாடுகளுக்கு புடின் மிரட்டல் விடுத்துள்ளார்.

சிங்கப்பூர் அதிபர் பதவியேற்கும் தர்மன் சண்முகரத்னமுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

புதுடெல்லி: சிங்கப்பூரின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தமிழ் வம்சாவளியை சேர்ந்த தர்மன் சண்முகரத்னமுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பக்கத்தில்,”சிங்கப்பூரின் புதிய அதிபாராக தேர்வாகியுள்ள தங்களுக்கு என்னுடைய உளம்கனிந்த வாழ்த்துகள். இருநாடுகளின் தூதரக உறவுகளை இன்னும் நெருக்கான அளவில் வலுப்படுத்த தங்களுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். சிங்கப்பூரில் வெள்ளிக்கிழமை நடந்த அதிபர் தேர்தலில் தர்மன் அமோக வெற்றி பெற்றார். அவர் 70.4 சதவீதம் வாக்குகள் … Read more

பாகிஸ்தான் வரலாற்றில் முதல்முறை: ரூ.300-ஐ கடந்த பெட்ரோல், டீசல் விலை

கராச்சி: வரலாற்றில் முதல்முறையாக பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை ரூ.300ஐ தாண்டியுள்ளது. தற்போது அங்கு பெட்ரோல் ரூ.305.56-க்கும், டீசல் ரூ.311.54-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பாகிஸ்தான் காபந்து பிரதமர் அன்வருல் ஹக் கக்கர் தலைமையிலான அரசு, பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.14.91 மற்றும் டீசல் விலையை லிட்டருக்கு ரூ.18.44 உயர்த்தியது. இதன் மூலம் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.305.56-க்கும், டீசல் ரூ.311.54-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பாகிஸ்தான் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு பெட்ரோல், டீசல் விலை முதல் முறையாக … Read more

இலங்கைக்கு அமெரிக்கா நெருக்கடி: சீனா ஆதிக்கத்தை குறைக்க உதவுமா?| US Crisis on Sri Lanka: Can China Help Reduce Dominance?

இலங்கையின் பொருளாதார நெருக்கடியை பயன்படுத்தி, அங்குள்ள, 1,200 ஏக்கர் அம்பன்தோட்டா துறைமுகத்தை, சீனா, 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு பெற்றுள்ளது. அதை வைத்து, அங்கு பெரிய கப்பல் தளம் கட்ட முயற்சி மேற்கொண்டுள்ளது. அங்கு, கடல் அட்டை பண்ணைகளையும் அமைத்து வருகிறது. இவற்றை வைத்து, தென்கிழக்கு ஆசியாவிலும், தென் சீன கடல் பகுதியிலும் தன் ஆதிக்கத்தை அதிகரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இதனால், பூகோள அரசியலில், பல மாற்றங்கள் ஏற்படும் என்று கூறப்படுகிறது. இது, அமெரிக்காவுக்கு உறுத்தலாக உள்ளது. … Read more

“லூனா 25” விழுந்து நிலவில் 10 மீட்டர் பள்ளம்: நாசா புகைப்படம் வெளியீடு| Luna 25s Impact Site, Captured By NASA Lunar Reconnaissance Orbiter. See Before And After PICS

வாஷிங்டன்: நிலவுக்கு அனுப்பப்பட்ட ரஷ்யாவின் லூனா-25 விண்கலம் விழுந்து நொறுங்கியதில், தென் துருவ பகுதியில் பள்ளம் உண்டாகிய படத்தை நாசா வெளியிட்டுள்ளது. நிலவின் தென் துருவ பகுதியை ஆராய ரஷ்யா லூனா 25 விண்கலத்தை அனுப்பியது. சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் தரையிறங்குவதற்கு முன்பாக லூனா-25 விண்கலத்தை தரையிறக்க ரஷ்ய விண்வெளி நிறுவனம் தீவிரமாக செயல்பட்டது. புவி மற்றும் நிலவின் சுற்றுவட்ட பாதைகளை அதிவேகமாக கடந்து சென்ற லூனா-25 விண்கலம், தரையிறக்குவதற்கு முந்தைய சுற்றுவட்டபாதைக்குள் கடந்த மாதம் 19ம் … Read more

ரஷ்யாவின் லூனா 25 விண்கலம் விழுந்ததில் நிலவில் 10 மீட்டர் அகலத்தில் பள்ளம் – நாசா ஆர்பிட்டர் படம் பிடித்தது

வாஷிங்டன்: நிலவுக்கு அனுப்பப்பட்ட ரஷ்யாவின் லூனா-25 விண்கலம் விழுந்து நொறுங்கியதில் தென் துருவ பகுதியில் 10 மீட்டர் அகலத்தில் பள்ளம் ஏற்படுத்திய படத்தை நாசா வெளியிட்டுள்ளது. நிலவின் தென் துருவ பகுதியைஆராய, சந்திரயான்-3 விண்கலத்தை இந்தியா அனுப்பியது போல், ரஷ்யா லூனா -25 விண்கலத்தை அனுப்பியது. சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர்தரையிறங்குவதற்கு முன்பாக, லூனா-25 விண்கலத்தை தரையிறக்க ரஷ்ய விண்வெளி நிறுவனம் ராஸ்காஸ்மாஸ் தீவிரமாக செயல்பட்டது. புவி மற்றும் நிலவின் சுற்றுவட்டபாதைகளை அதிவேகமாககடந்து சென்ற லூனா-25 விண்கலத்தை, தரையிறக்குவதற்கு … Read more