சிங்கப்பூர் அதிபர் தேர்தல்: நாளை நடைபெறும் வாக்குப்பதிவு… மும்முனை போட்டியில் அரியணை ஏறுவாரா தமிழர் தர்மன் சண்முகரத்தினம்?

சிங்கப்பூர் அதிபராக தற்போது பதவி வகித்து வருபவர் ஹலிமா யாகூப். இவருடைய பதவி காலம் வரும் செப்டம்பர் 13 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து 2.7 மில்லியன் வாக்காளர்கள் உள்ள சிங்கப்பூரின் அதிபர் பதவிக்கான தேர்தல் செப்டம்பர் ஒன்றாம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அதிபர் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தார் அந்நாட்டின் கேபினட் அமைச்சரான இந்திய வம்சாவளி, தமிழரான தர்மன் சண்முகரத்னம். அதிபர் தேர்தலில் போட்டியிடுபவர்கள் எந்த அரசியல் கட்சியிலும் பதவியிலும் இருக்கக்கூடாது என்பதால் தனது … Read more

இந்தியாவுக்கு போதை பொருள் கடத்தல்: பாக்., உயரதிகாரி தொடர்பால் அதிர்ச்சி| Pakistans drug smuggling to India, shocked by high-ranking officials

லாகூர்: நம் நாட்டுக்குள், ‘ட்ரோன்’கள் வாயிலாக போதைப் பொருட்களை கடத்திய பாகிஸ்தான் போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸ் தலைவரிடம், அந்நாட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக நம் எல்லைப் பகுதி யில் அமைந்துள்ள பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்கள் வழியாகவும், ஜம்மு – காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்களின் வாயிலாகவும் போதைப் பொருள் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இவற்றில், ‘ட்ரோன்’ எனப்படும் ஆளில்லா விமானங்கள் வாயிலாக, நம் அண்டை நாடான … Read more

தென் ஆப்பிரிக்காவில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து: 64 பேர் பலி; பலர் காயம்

ஜோகன்னஸ்பர்க், தென்ஆப்பிரிக்காவின் முக்கிய வணிக மாவட்டமாக கருதப்படுவது ஜோகன்னஸ்பர்க். தென்ஆப்பிரிக்காவில் உள்ள மிகப்பெரிய நகரமான இங்குள்ள ஐந்து மாடி கட்டிடத்தில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஐந்து மாடிகளைக் கொண்ட மிகப்பெரிய அடுக்குமாடிக் குடியிருப்பில் நேரிட்ட தீ விபத்தில் 43 பேர் காயமடைந்தனர். இந்த தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. நள்ளிரவு 1.30 மணிக்கு தீயணைப்புத்துறையினருக்கு தீ விபத்து குறித்து தகவல் கிடைத்துள்ளது. விரைந்து சென்ற தீயணைப்புப் படை வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். … Read more

வரைபடம் குறித்து மிகை விளக்கம் வேண்டாம் இந்தியாவுக்கு சீனா அடாவடி பதில்| Dont overexplain the map Chinas rude response to India

பீஜிங், ‘எங்கள் நாட்டு சட்டத்துக்கு இணங்க வழக்கமான நடைமுறையை பின்பற்றி வரைபடம் வெளியிட்டு உள்ளோம். இந்த விவகாரத்தில் இந்தியா அமைதி காப்பதுடன், மிகை விளக்கம் அளிப்பதை தவிர்க்க வேண்டும்’ என, சீனா அடாவடியாக தெரிவித்துள்ளது. கட்டுப்பாடு நம் அண்டை நாடான சீனாவுடன் எல்லை தொடர்பான பிரச்னை இருந்து வருகிறது. இந்நிலையில், 2023ம் ஆண்டுக்கான தன் தேசிய வரைபடத்தை சமீபத்தில் சீனா வெளியிட்டது. இதில், நம் நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாச்சல பிரதேசம் இடம்பெற்றுள்ளது. மேலும், 1962 … Read more

தென் ஆப்பிரிக்கா தீ விபத்து: பலி எண்ணிக்கை 73 ஆக உயர்வு.!

ஜோகன்னஸ்பர்க், தென்ஆப்பிரிக்காவின் முக்கிய வணிக மாவட்டமாக கருதப்படுவது ஜோகன்னஸ்பர்க். தென்ஆப்பிரிக்காவில் உள்ள மிகப்பெரிய நகரமான இங்குள்ள ஐந்து மாடி கட்டிடத்தில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நள்ளிரவு 1.30 மணிக்கு தீயணைப்புத்துறையினருக்கு தீ விபத்து குறித்து தகவல் கிடைத்துள்ளது. விரைந்து சென்ற தீயணைப்புப் படை வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இன்று காலையில் தான் தீ முழுமையாக அணைக்கப்பட்டதாகவும் ஆனாலும் கட்டடத்திலிருந்து புகை வெளியேறி கொண்டிருந்தன. இந்த தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. தீ … Read more

மோடிக்கு சாதகமாக 80 சதவீத இந்தியர்கள்!| 80 percent of Indians are in favor of Modi

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: பிரதமர் நரேந்திர மோடி குறித்து, 80 சதவீத இந்தியர்கள் சாதகமான கருத்துகளை கொண்டுள்ளதாக, அமெரிக்காவின் ‘பியூ’ ஆய்வு மையத்தின் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. சமூக பிரச்னை அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் 2004ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் பியூ ஆய்வு மையம், சமூகப் பிரச்னைகள், பொதுக் கருத்துகள் உள்ளிட்ட தகவல்களை வழங்கி வருகிறது. இது, அந்நாட்டின் மிக முக்கிய சிந்தனை குழாமாகவும் திகழ்கிறது. இந்த ஆய்வு மையம், இந்தியா … Read more

பிட்னஸ் பெண்ணிற்கு ஏற்பட்ட சோகம்…33 வயதில் திடீர் மரணம்.. ரசிகர்கள் அதிர்ச்சி..!

பிரேசிலியா, சமூக வலைத்தளங்களில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக வீடியோக்களை வெளியிடுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதில் ஒரு சிலரின் வீடியோக்கள் வைரலாகும்போது, அவர்கள் பிரபலம் அடைகிறார்கள். அவர்களை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து, ஒவ்வொரு போஸ்டையும் பார்த்து தங்களது கருத்துகளை வெளியிடுவார்கள். ஆன்மிகம், மருத்துவம், அழகு குறிப்பு, பிட்னஸ் என எல்லா துறைகளிலும் இதுபோன்று வீடியோக்கள் வெளியிடுபவர்கள் சமூக வலைத்தளங்களில் ஆதிக்கம் செலுத்துபவர்கள் (Influencer) என அழைக்கப்படுவார்கள். அந்த வகையில் … Read more

ஜோகன்னஸ்பர்க் நகரில் பயங்கர தீ விபத்து – 73 பேர் உயிரிழப்பு

ஜோகன்னஸ்பர்க்: தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் உள்ள கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 73 பேர் உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் உள்ள ஐந்து அடுக்கு கட்டிடம் ஒன்றில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சில நிமிடங்களிலேயே தீ மளமளவென கட்டிடம் முழுவதும் பரவியதில் உள்ளே இருந்தவர்களால் அங்கிருந்து வெளியேற முடியவில்லை. இந்த தீ விபத்தில் இதுவரை 73 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இறந்தவர்களில் குழந்தைகளும் … Read more

சிறந்த துணை அதிபர் வேட்பாளர்: விவேக் ராமசாமியை புகழும் டிரம்ப்| Would Make A Very Good…: Trumps Big Praise For Indian-American Rival

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான போட்டியில் உள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி, மிகச்சிறந்த துணை அதிபர் வேட்பாளர் ஆக இருப்பார் என முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடக்க உள்ள அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளர்களுக்கான போட்டியில் உள்ளவர்களின் பட்டியலில் இந்திய வம்சாவளி தொழிலதிபரான விவேக் ராமசாமியும் இடம்பெற்றுள்ளார். முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், நியூ ஜெர்சி முன்னாள் கவர்னர் … Read more

'வழக்கமான நடைமுறைதான்' – புதிய வரைபடம் தொடர்பாக சீனா விளக்கம்

பீஜிங், இந்தியாவின் அருணாசல பிரதேசம், சர்ச்சைக்குரிய அக்சாய் சின் ஆகிய பகுதிகளை தங்கள் நாட்டுடன் இணைத்து புதிய வரைபடத்தை சீனா வெளியிட்டுள்ளது. சீனாவின் இந்த வரைபடத்தை நிராகரித்த இந்தியா, இது தொடர்பாக அந்த நாட்டுக்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. இந்தியாவின் கண்டனம் தொடர்பாக சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் வாங் வென்பின்னிடம் நேற்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதிலளிக்கையில், ‘சீனாவின் தேசிய வளத்துறை அமைச்சகம் 2023-ம் ஆண்டுக்கான புதிய வரைபடத்தை வெளியிட்டது. சீன … Read more