சந்திரயான் 3 வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்த அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ்

வாஷிங்டன், நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோவால் அனுப்பப்பட்ட சந்திரயான் 3 விண்கலம் 41 நாட்கள் பயணம் செய்து இலக்கை அடைந்து விட்டது. விண்கலத்தில் இணைக்கப்பட்டிருந்த விக்ரம் லேண்டர் நேற்று மாலை 6.04 மணிக்கு வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கப்பட்டது. மிகவும் சவாலான இந்தப் பணிகளை பெங்களூரு தரை கட்டுப்பாட்டுத் தளத்தில் இருந்து விஞ்ஞானிகள் மிகுந்த சாதுர்யமாக நடத்தி முடித்தனர். இஸ்ரோ விஞ்ஞானிகளின் இந்த அயராத பணிகள் உலக நாடுகளின் பாராட்டுகளை பெற்றுள்ளது. நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கிய விக்ரம் … Read more

சந்திரயான் திட்டம் வெற்றிபெற அமெரிக்க வாழ் இந்தியர்கள் வழிபாடு

வாஷிங்டன்: அமெரிக்காவின் வர்ஜீனியா மாகாணத்தில் இந்திய வம்சாவளியினர் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். அவர்கள் அனைவரது கவனமும் இந்தியாவின் சந்திரயான்-3 திட்டத்தை நோக்கியே இருந்தது. இந்த நிலையில், இஸ்ரோவின் இந்த திட்டம் வெற்றிகரமாக அமைந்து, நிலாவில் லேண்டர் பத்திரமாக தரையிறங்க வேண்டி அங்குள்ள இந்திய வம்சாவளியினர் நூற்றுக்கணக்கானோர் ஒன்று கூடி பல்வேறு மத வழிபாடுகளில் ஈடுபட்டனர். அபிஷேகம், யாகங்கள் உள்ளிட்ட மத சடங்குகளை நடத்தி சந்திரயான் திட்டம் வெற்றிபெற பகவானிடம் பிரார்த்தனை நடத்தினர். இதுகுறித்து இந்திய வம்சாவளியைச் சேர்ந்த … Read more

மெக்சிகோவில் பஸ் மீது லாரி மோதி 16 அகதிகள் உயிரிழப்பு..!

மெக்சிகோ சிட்டி, மத்திய மெக்சிகோ மாகாணமான பியூப்லாவில் இருந்து அகதிகளை ஏற்றிக்கொண்டு பஸ் ஒன்று அமெரிக்கா நோக்கி சென்று கொண்டிருந்தது. குவாக்னோபாலன்-ஓக்சாகா நெடுஞ்சாலையில் அந்த பஸ் சென்றது. அதே சாலையில் கனரக லாரி ஒன்று பஸ்சை பின்தொடர்ந்து வந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை லாரி திடீரென இழந்ததாக கூறப்படுகிறது. இதனால் நிலைதடுமாறி முன்னே சென்று கொண்டிருந்த பஸ் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் அகதிகளை ஏற்றிச் சென்ற பஸ் அப்பளம்போல் நொறுங்கியது. விபத்தில் 15 மெக்சிகோ … Read more

சந்திரயான்-3 செல்லும் பாதையை கண்டறிய நாசா, ஐரோப்பிய விண்வெளி மையம் உதவி

பெங்களூரு அருகில் உள்ள பெயலாலு என்ற இடத்தில் பிரம்மாண்ட ஆன்ட்டனா மூலம் விக்ரம் லேண்டர் தரையிறங்கும் பாதை கண்காணிக்கப்பட்டது. இந்தியாவின் மிகப் பெரிய இந்த ஆண்டனா 38 மீட்டர் குடை வடிவத்தில் உள்ளது. இந்நிலையில், விக்ரம் லேண்டர் நிலவின் இருண்ட அல்லது அடர்த்தியான நிழல் படர்ந்த பகுதியில் தரையிறங்கும்போது, பெங்களூருவில் இருந்து ஆன்ட்டனா மூலம் அதன் பாதையை துல்லியமாக கணிக்க இயலாது. இதற்குதான் நாசாவும், ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையமும் (இஎஸ்ஏ) இஸ்ரோவுக்கு உதவ முன்வந்தன. அதன்படி, … Read more

ரஷியா மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் – மாஸ்கோவில் விமான போக்குவரத்து நிறுத்தம்

மாஸ்கோ, ரஷியா-உக்ரைன் இடையேயான போர் 1½ ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்த போரினால் கணக்கிலடங்கா உயிர்கள் பறிபோனது. மேலும் பலகோடி மதிப்பிலான சேதங்கள் பதிவாகி தொடர்ந்து வருகிறது. போரில் ஆதிக்கத்தை செலுத்தும் வகையில் இருநாடுகளும் டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்துகிறார்கள். ஆளில்லா விமானத்தை கொண்டு நடத்தும் தாக்குதலில் குறிப்பிட்ட இலக்கை எவ்வித சிரமுமின்றி தகர்க்க ஏதுவாக அமைகிறது. இந்த நிலையில் ரஷியா தலைநகரான மாஸ்கோவில் டிரோன் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. ரஷியாவின் வான் பாதுகாப்பு தளவாடங்களின் ரேடாரில் சிக்காமல் … Read more

பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் மேடையில் கீழே கிடந்த தேசியக் கொடியை எடுத்து பாக்கெட்டில் வைத்தார் பிரதமர் மோடி

ஜோகன்னஸ்பர்க்: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் தலைவர்களுடன் புகைப்படம் எடுக்கும் நிகழ்ச்சியில், கீழே விழுந்து கிடந்த தேசியக் கொடியை எடுத்து பாக்கெட்டில் வைத்தார் பிரதமர் மோடி. பிரிக்ஸ் அமைப்பின் 15-வது உச்சி மாநாடு தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்ற தலைவர்களை புகைப்படம் எடுக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசா மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் போட்டோ எடுப்பதற்காக மேடையில் ஏறினர். அப்போது அவர்கள் அருகில் வைக்கப்பட … Read more

சூயஸ் கால்வாயில் கப்பல்கள் மோதி விபத்து

கெய்ரோ, சர்வதேச பொருளாதாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த சூயல் கால்வாய் மத்திய தரைக்கடலையும் செங்கடலையும் இணைக்கும் வகையில் அமைந்துள்ளது. ஐரோப்பாவுக்கும் ஆசியாவுக்கும் எளிய முறையில் வர்த்தகம் அமையும் வகையில் இந்த கால்வாய் வெட்டப்பட்டது. இந்த நிலையில் சிங்கப்பூரில் இருந்து கச்சா எண்ணெய் பொருட்களை ஏற்றிக்கொண்டு சரக்கு கப்பல் ஒன்று சூயல் கால்வாயை கடந்து வந்துகொண்டிருந்து. அதேபோல் இங்கிலாந்து நிர்வாகத்தின் கீழ் உள்ள கேமான் தீவுகளை சேர்ந்த சரக்கு கப்பல் ஒன்றும் சூயஸ் கால்வாயை கடக்க முயன்றது. அப்போது இரண்டு … Read more

புதிய உறுப்பு நாடுகளைச் சேர்ப்பதற்கான கட்டமைப்பை ஒப்புக்கொள்ளும் பிரிக்ஸ் தலைவர்கள்

BRICS Expansion: விரிவாக்கத்திற்கு வழி வகுக்கும் BRICS புதிய உறுப்பு நாடுகளைச் சேர்ப்பதற்கான கட்டமைப்பை ஒப்புக்கொள்கிறது

தேஜஸ் விமானத்தின் சோதனை முயற்சி வெற்றி| Test attempt of Tejas aircraft successful

புதுடில்லி, கண்ணுக்கு தெரியாத தொலைவில் உள்ள இலக்கை, அஸ்த்ரா ஏவுகணை வாயிலாக தாக்கும் தேஜஸ் போர் விமானத்தின் சோதனை முயற்சி வெற்றிகரமாக நடந்துள்ளது. உள்நாட்டு தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ள, தேஜஸ் என பெயரிடப்பட்டுள்ள இலகு ரக போர் விமானம், பல்வேறு சோதனைகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது. இதன் அடுத்தகட்டமாக, கண்ணுக்கு தெரியாத தொலைவில் உள்ள இலக்கை, உள்நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ள அஸ்த்ரா ஏவுகணை வாயிலாக தாக்கும் சோதனை முயற்சி நேற்று நடந்தது. கோவா கடற்கரைக்கு அருகே, 20,000 அடி உயரத்தில் பறந்த … Read more

ரஷ்ய அதிபரை எதிர்த்தவர் பலி?| Victim who opposed the Russian president?

மாஸ்கோ,:ரஷ்ய அதிபருக்கு எதிராக புரட்சி நடத்தி தோல்வி அடைந்த, எம்ஜெனி பிரிகோஜின், விமான விபத்தில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு எதிராக, ஜூன் மாத இறுதியில் தனியார் ராணுவப் படையை வைத்து புரட்சி செய்தவர் எம்ஜெனி பிரிகோஜின். ஆனால், அதை முறியடித்த ரஷ்ய ராணுவம், பிரிகோஜின் நாடு கடத்தப்படுவார் என அறிவித்தது. இந்நிலையில், மாஸ்கோவிலிருந்து, செயின்ட் பீட்டர்ஸ்பர்க் சென்ற ஜெட் விமானம் நேற்று விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில், 10 ேபர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. … Read more