கொசு ஒழிப்பு தினம்| Mosquito Eradication Day

உருவத்தில் சிறியதாக இருக்கும் கொசு மனிதர்களுக்கு பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. மலேரியா, டெங்கு உள்பட பல நோய்களுக்கு கொசுக்களே காரணம். ‘பிளாஸ்மோடியம்’ ஒட்டுண்ணி ‘அனாபெலஸ்’ பெண் கொசுவின் வயிற்றில் தொற்றிக் கொள்கிறது. இது ஒருவரை கடிப்பதன் மூலம் தான் மலேரியா பரவுகிறது என்ற அறிவியல் உண்மையை பிரிட்டன் டாக்டர் ரொனால்டு ரோஸ் 1897 ஆக., 20ல் கண்டுபிடித்தார். இந்நாள் ‘உலக கொசு ஒழிப்பு தினமாக’ கடைபிடிக்கப்படுகிறது. இவரது இந்த … Read more

"குட்பை சீம்ஸ்".. உலகையே மகிழ்வித்த சீம்ஸ் நாய் விடைபெற்றது.. சோகத்தில் மூழ்கிய சோஷியல் மீடியா!

ஹாங்காங்: கிட்டத்தட்ட 13 ஆண்டுகளாக சமூக வலைதளங்கள் மூலமாக அனைவரையும் வயிறு வலிக்க சிரிக்க வைத்து வந்த சீம்ஸ் நாய், உடல்நலக்குறைவு காரணமாக இன்று உயிரிழந்தது. சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருப்பவர்கள் அனைவருக்குமே சீம்ஸ் நாயை தெரிந்திருக்கும். சீம்ஸின் புகைப்படத்தை வைத்து வலம் வந்த மீம்ஸ்கள் அனைவரின் வயிறையும் புண்ணாக்கி இருக்கும். அந்த அளவுக்கு சமூக வலைதளங்களில் அனைவருக்கும் செல்லப் பிராணியாக வலம் வந்தது. மற்ற நாய்களை போல அல்லாமல் சீம்ஸின் முகம் சற்று உருண்டையாகவும், வாய் … Read more

புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு| Discovery of a new type of coronavirus

பெய்ஜிங்: புதிய வகை வீரியம் மிக்க கொரோனா கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவின் வூகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் பரவலால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். தற்போது தடுப்பூசியால் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் புதிய வகை கொரோனா ஒன்று தற்போது கண்டறியப்பட்டு இருக்கிறது.அமெரிக்கா, டென்மார்க், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளில் கண்டறியப்பட்டு உள்ள இந்த வைரசுக்கு பிஏ.2.86 என பெயரிடப்பட்டு உள்ளது. இந்த வைரசின் வீரியம் மற்றும் பரவலை கண்காணித்து வருவதாக … Read more

விடைபெற்றார் சீம்ஸ்… மீம்ஸ் மூலம் மக்களை கவர்ந்த நாய்!

Cheems Dog Died: சமூக வலைதளங்களில் சீம்ஸ் என்ற பெயரில் உலகம் முழுவதும் புகழ்பெற்ற நாய் நேற்று உயிரிழந்ததாக அதன் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இம்ரான் கான் உயிருக்கு ஆபத்து – உணவுல விஷம் வச்சிருவாங்க.. பகீர் கிளப்பிய மனைவி!

சிறையில் இம்ரான் கான் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், அவருக்கு வீட்டு உணவு வழங்க வேண்டுமெனவும் அவரது மனைவி பரபரப்பு கடிதம் எழுதியுள்ளார். பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரரான இம்ரான் கான் தெஹ்ரிக் இ சாஹிப் கட்சியைத் தொடங்கி நடத்தி வருகிறார். 2018ஆம் ஆண்டு மிகப்பெரிய எழுச்சியுடன் ஆட்சியைப் பிடித்த இம்ரான் கான், 2022ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மூலம் ஆட்சியை இழந்தார். அதன்பிறக இம்ரான் கான் மீது பல்வேறு வழக்குகள் தொடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் … Read more

இம்ரானை சிறையில் கொல்ல சதி: மனைவி கதறல்| Pak ex-PM Imran Khan can be poisoned in Attock jail, says wife Bushra

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் இஸ்லாமாபாத்: ஊழல் வழக்கில் சிறையில் உள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை விஷம் கொடுத்து கொல்ல சதி நடப்பதாக அவரது மனைவி புஷ்ரா பீபி கூறியுள்ளார். அரசு கருவூல பரிசுப் பொருட்களை முறைகேடாக விற்பனை செய்த வழக்கில் இஸ்லாமாபாத் நீதிமன்றம், இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதையடுத்து இம்ரான் கானை கைது செய்த போலீசார், பஞ்சாப் மாகாணத்தில் உள்ள அட்டாக் சிறையில் அடைத்து உள்ளனர். … Read more

பிரிட்டனில் குழந்தைகளை கொன்ற நர்ஸ் கைது| Why Did Lucy Letby, A UK Nurse, Murder Babies?

லண்டன்: பிரிட்டனில் மகப்பேறு மருத்துவமனையில் 7 பச்சிளம் குழந்தைகளை கொன்ற நர்சை போலீசார் கைது செய்தனர். அவரை காட்டிக் கொடுக்க இந்திய வம்சாவளியைச் சேர்ந்த டாக்டர் உதவியது தெரியவந்தது. ரவி ஜெயராம் என்ற டாக்டர் கவுண்டஸ் செஸ்டர் மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். குழந்தைகள் நல டாக்டரான இவர், பச்சிளம் குழந்தைகள் மரணம் தொடர்பாக நர்ஸ் மீது சந்தேகம் தெரிவித்தார். இதனையடுத்து, விசாரணைக்கு பிறகு லூசி லெட்பி(33) என்ற நர்ஸ் கைது செய்யப்பட்டார். அவர் 7 பச்சிளம் குழந்தைகளை … Read more

நாடு கடத்துவதை எதிர்த்து தஹாவூர் வழக்கு தள்ளுபடி செய்தது அமெரிக்க நீதிமன்றம்| US court dismisses Dahawoors case against extradition

வாஷிங்டன் ;இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதை எதிர்த்து, மும்பை பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய பாகிஸ்தான் பயங்கரவாதி தஹாவூர் ராணா, 62, தாக்கல் செய்த மனுவை, அமெரிக்க நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்துள்ளது. மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில், 2009 நவம்பரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலில் தொடர்புடைய, நம் அண்டை நாடான பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த, வட அமெரிக்க நாடான கனடா தொழிலதிபர் தஹாவூர் ராணா, அமெரிக்காவில் 2009-ல் பிடிபட்டார். இவர், பாக்., பயங்கரவாதி … Read more

துபாய் கடற்கரையில் வேற லெவல்… 4 நாட்கள் விசிட்டிற்கு புறப்பட்டு ஏ.எம்.சி அதிகாரிகள்!

துபாய் என்றாலே வளைகுடா நாடுகளில் மிக முக்கியமான ஒன்று என்ற விஷயம் நினைவில் தோன்றும். அதுமட்டுமின்றி வேலை வேண்டுமா? துபாய்க்கு கிளம்பி போய்டுங்க என்று தமிழகத்தை சேர்ந்த பலர் கூறுவதை கேட்கலாம். அந்த அளவிற்கு இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதில் துபாய்க்கு முக்கிய பங்குண்டு. துபாய்க்கு செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு! துபாய் உள்கட்டமைப்பு வசதிகள் இங்கிருந்து சென்ற தொழிலாளர்களால் அந்நாட்டு உள்கட்டமைப்பு வசதிகள் வேற லெவலுக்கு மேம்படுத்தப்பட்டு உள்ளன. குறிப்பாக பொழுதுபோக்கு அம்சங்களுக்கு பஞ்சமே இல்லை. வெளிநாட்டு … Read more

வியட்நாமில் விமான போக்குவரத்து துறையில் நிபுணர்களுக்கு பற்றாக்குறை

ஹனோய், வியட்நாமின் பொருளாதாரத்தில் சுற்றுலாத்துறை முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே வருமானத்தை அதிகரிப்பதற்காக சுற்றுலா துறையை மேம்படுத்த அரசாங்கம் முடிவு செய்தது. வெளிநாடுகளில் இருந்து அங்கு வர 87.6 சதவீதம் பேர் விமான போக்குவரத்தையே பயன்படுத்தி உள்ளனர். எனவே அங்குள்ள டான் சன் நாட், லாங் தான் மற்றும் நொய் பாய் உள்ளிட்ட முக்கிய சர்வதேச விமான நிலையங்கள் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகின்றன. ஆனால் அதற்கேற்ற வகையில் அங்கு விமான துறையில் போக்குவரத்து, துறைமுகம் மற்றும் நிர்வாக … Read more