பாகிஸ்தானுக்கு ரூ.19 ஆயிரத்து 600 கோடி கடன் வழங்கிய சீனா

இஸ்லாமாபாத், பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடியில் தத்தளித்து வருகிறது. அந்த நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு தீரும் நிலையில் உள்ளது. இந்த நிலையில் பாகிஸ்தானின் நெருங்கிய நட்பு நாடான சீனா, அந்த நாட்டுக்கு 2.4 பில்லியன் அமெரிக்க டாலரை (சுமார் ரூ.19 ஆயிரத்து 600 கோடி) கடனாக வழங்கியுள்ளது. அடுத்த 2 நிதியாண்டுகளில் கடனை திருப்பிச் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையில் கீழ் சீனா இந்த கடனை வழங்கியுள்ளதாக பாகிஸ்தான் நிதி மந்திரி இஷாக் தர் தெரிவித்துள்ளார். … Read more

சன் கிளாஸ்-ஐ ஆட்டைய போட்ட அரசியல்வாதி! சிசிடிவியால் பறிபோன எம்.பி. பதவி..

அரசியல் கட்சி தலைவரும் நாடாளுமன்ற எம்பி யுமான ஒருவர் சூப்பர் மார்க்கெட்டில் ஒரு பொருளைத் திருடியதால்  மாட்டிக் கொண்டுள்ளார் 

சிங்கப்பூரில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு பெண்ணுக்கு மரணத் தண்டனை நிறைவேற்றம்

சிங்கப்பூர்: 20 ஆண்டுகளுக்குப் பிறகு பெண் ஒருவருக்கு போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தூக்குத் தண்டனையை சிங்கப்பூர் அரசு நிறைவேற்றியுள்ளது. சமூக நலப் பாதுகாப்பு, ஒழுக்கம் ஆகியவற்றை சுட்டிக் காட்டி, போதைப்பொருள் பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடுமையான தண்டனைகளை வழங்கி வருகிறது சிங்கப்பூர். இதனால் ஐ.நா.வின் மனித உரிமை அமைப்புகளின் கடும் விமர்சனத்தையும் சந்தித்து வருகிறது இந்த நிலையில், 2018-ல் சரிதேவி டிஜமானி என்ற பெண் 30 கிராம் ஹெராயினை கடத்தி வந்ததற்காக கைது செய்யப்பட்டார். இவ்வழக்கில் அவருக்கு தூக்குத் … Read more

சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் பெண்ணுக்கு தூக்கு! எச்சரிக்கும் அரசு

Capital punishment in Singapore: மரண தண்டனைக்கு வழி வகுக்கும் அளவை விட இரண்டு மடங்கு அதிகமான ஹெராயின் (30.72 கிராம்) கடத்தியதற்காக சிங்கப்பூரில் ஒரு பெண்ணுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது

Indian crew killed in ship fire in mid-sea | நடுக்கடலில் தீப்பற்றிய கப்பல் இந்திய ஊழியர் பலி

லண்டன் : நெதர்லாந்து அருகே நடுக்கடலில் சரக்கு கப்பல் திடீரென தீப்பற்றியது. இதை அணைக்க முயன்ற இந்திய ஊழியர் ஒருவர் பலியானார்; 20 பேர் காயமடைந்தனர். ஐரோப்பிய நாடான ஜெர்மனியில் இருந்து மேற்காசிய நாடான எகிப்துக்கு, சரக்கு கப்பல் ஒன்று சமீபத்தில் புறப்பட்டது. இந்தக் கப்பலில், 3,000 கார்கள் இருந்தன. ஐரோப்பிய நாடான நெதர்லாந்து அருகே சென்றபோது, 25ம் தேதி கப்பலில் திடீரென தீப்பற்றியது. கப்பலில் பணியாற்றும், 23 ஊழியர்கள், இதை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், … Read more

குவைத் மசூதியில் குண்டு வெடிப்பு தாக்குதல்: 5 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

துபாய்: கடந்த 2015-ம் ஆண்டு குவைத் மசூதியில் குண்டு வெடிப்பு நிகழ்த்திய குற்றவாளிகள் 5 பேருக்கு நேற்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து குவைத் அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: கடந்த 2015-ம் ஆண்டு ஷியாமசூதியில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதலில் 27 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஐஎஸ் அமைப்பு இந்த குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு பொறுப்பேற்றது. இதையடுத்து, இந்த தாக்குதலுக்கு காரணமான முக்கிய குற்றவாளிகள் ஐந்து பேருக்கு மரண தண்டனை வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது. இதில், போதைப் பொருள் கடத்திய … Read more

3 ஆயிரம் கார்களுடன் சென்ற சரக்கு கப்பலில் தீ: இந்தியர் ஒருவர் உயிரிழப்பு, 20 பேர் காயம்

லண்டன்: நெதர்லாந்து கடற்பகுதியில் 3 ஆயிரம் கார்களுடன் சென்ற சரக்கு கப்பல் தீப்பற்றியதில் இந்தியர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 20 பேர் காயம் அடைந்தனர். ஜெர்மனியில் இருந்து சுமார் 3,000 கார்களுடன் ‘ஃப்ரீமேன்டில் ஹைவே’ என்ற சரக்கு கப்பல் எகிப்து நோக்கி புறப்பட்டது. கடந்த செவ்வாய்க்கிழமை இரவு நெதர்லாந்து நாட்டின் அமெலாண்ட் தீவு அருகே சென்று கொண்டிருந்தபோது கப்பலில் அடுக்கப்பட்டிருந்த 25 எலெக்ட்ரிக் கார்களில் ஒன்று திடீரென தீப்பற்றியது. தீ மளமளவென மற்ற கார்களுக்கும் பரவியது. தீயை … Read more

Rescue efforts fail: Whales are euthanized | காப்பாற்றும் முயற்சி தோல்வி: திமிங்கலங்கள் கருணை கொலை

பெர்த்: ஆஸ்திரேலியாவில் அடுத்தடுத்து கரை ஒதுங்கிய திமிங்கலங்களை, மீண்டும் கடலுக்குள் விடும் முயற்சி தோல்வி அடைந்ததை அடுத்து, அவை கருணைக் கொலை செய்யப்பட்டன. பசிபிக் கடல் நாடான ஆஸ்திரேலியாவின் மேற்கு பகுதியில் உள்ள கடற்கரை பகுதிகளில் ஏராளமான திமிங்கலங்கள் வசிக்கின்றன. இவை அவ்வப்போது கரை ஒதுங்கி, பின் கடலுக்கு செல்வது வழக்கம். இந்நிலையில், அல்பானி பகுதியில் உள்ள செயின்ட்ஸ் கடற்கரை பகுதியில் இரு தினங்களுக்கு முன், 100க்கும் மேற்பட்ட திமிங்கலங்கள் திடீரென கரை ஒதுங்கின. கூட்டம், கூட்டமாக … Read more

பள்ளிகளில் ஸ்மார்ட்போன்களுக்கு உலகளாவிய தடை செய்ய பரிந்துரை-யுனெஸ்கோ

வாஷிங்டன், அமெரிக்காவைத் தலைமை இடமாகக் கொண்டு, யுனெஸ்கோ எனப்படும் ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு செயல்பட்டு வருகிறது. இது கற்றலை மேம்படுத்தவும் ஆன்லைன் கொடுமைப்படுத்துதலில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கவும், உலகெங்கிலும் உள்ள பள்ளிகளில் ஸ்மார்ட்போன்களை தடை செய்ய பரிந்துரைத்துள்ளது. பள்ளியில் ஸ்மார்ட்போன்களின் அதிகப்படியான பயன்பாடு கல்வி செயல்திறன் குறைவதற்கும், வகுப்பறையில் மோசமான செயல்திறனுக்கு வழிவகுக்கிறது. தொழில்நுட்பத்தின் பயன்பாடு மேம்பட்ட கற்றல் அனுபவத்திற்காகவும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நல்வாழ்வுக்காகவும் இருக்க வேண்டும், அவர்களுக்கு தீங்கு … Read more