அமெரிக்காவில் பசியால் வாடும் ஹைதராபாத் மாணவி: மகளை மீட்க அமைச்சருக்கு தாய் கடிதம்

ஹைதராபாத்: அமெரிக்காவில் மேற்படிப்புக்கு சென்ற மகள், கடந்த 2 மாதங்களாக பசியால் வாடி தெருவில் சுற்றி திரிவதாகவும் அவரை மீட்டுத் தருமாறும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு தாய் கடிதம் எழுதியுள்ளார். ஹைதராபாத் மவுலாலி பகுதியை சேர்ந்தவர் சையிதா ஹவாஜ் பாத்திமா. இவரது மகளான சையிதா லுலூ மின்ஹாஜ் குவைதி எம்.எஸ். படிக்க 2021 ஆகஸ்ட் மாதம் அமெரிக்காவில் உள்ள சிகாகோவிற்கு சென்றார். அங்கிருந்து தினமும் தனது தாயிடம் செல்போனில் பேசி வந்துள்ளார். லுலூ கடந்த 2 … Read more

The decision to crown the son of the outgoing Cambodian Prime Minister | பதவி விலகும் கம்போடிய பிரதமர் மகனுக்கு முடிசூட்ட முடிவு

நோம் பென், கம்போடியாவை பல ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் பிரதமர் ஹுன் சென், 70, அப்பதவியில் இருந்து மூன்று வாரங்களில் விலகி, தன் மூத்த மகனை அமர வைக்கப் போவதாக அறிவித்துள்ளார். அமோக வெற்றி தென்கிழக்கு ஆசிய நாடான கம்போடியாவை, கம்போடிய மக்கள் கட்சி தலைவர் ஹுன் சென், கடந்த 38 ஆண்டுகளாக ஆட்சி செய்து வருகிறார். இங்கு, பார்லிமென்டுக்கு சமீபத்தில் நடந்த தேர்தலில், மொத்தமுள்ள 125 இடங்களில், 120 இடங்களில் கம்போடிய மக்கள் கட்சி … Read more

அமெரிக்காவில் மேல்படிப்பு படிக்க சென்ற இளம்பெண்ணின் உடைமைகள் திருட்டு… தெருக்களில் சுற்றித்திரியும் அவலம் – மத்திய மந்திரி உதவ…

நியூயார்க், தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில் மவுலா அலி பகுதியை சேர்ந்த இளம்பெண் சையிடா லுலு மினாஜ் ஜைதி. அவர் அமெரிக்காவின் டெட்ராய்டு நகரில் உள்ள டிரைன் பல்கலை கழகத்திற்கு முதுநிலை படிப்புக்காக சென்றுள்ளார். இந்நிலையில், 2 மாதங்களாக அவரது தாயார் சையிடா வகாஜ் பாத்திமாவால் மகளை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால், அதிக கவலையில் இருந்த அவருக்கு அதிர்ச்சி தகவல் கிடைத்தது. ஐதராபாத் நகரை சேர்ந்த இளைஞர்கள் 2 பேர், பாத்திமாவை தொடர்பு கொண்டு, உங்களுடைய மகள் … Read more

US support to the central government | மத்திய அரசுக்கு அமெரிக்கா ஆதரவு

வாஷிங்டன்:’மணிப்பூரில் இரண்டு பெண்களுக்கு எதிரான பாலியல் தாக்குதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்களுக்கு நீதி கிடைக்க மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிக்கிறோம்’ என, அமெரிக்கா கூறியுள்ளது. அமெரிக்க வெளியுறவுத் துறையின் துணை செய்தித் தொடர்பாளர் வேதாந்த் படேல், நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, பாகிஸ்தானைச் சேர்ந்த நிருபர் ஒருவர், மணிப்பூர் விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பினார். இதற்கு வேதாந்த் படேல் கூறியுள்ளதாவது: ஏற்கனவே நாங்கள் கூறியபடி, மணிப்பூர் விவகாரத்தில் அமைதியாகவும், சுமுகமாகவும் தீர்வு காண … Read more

தென் ஆப்பிரிக்காவில் பஸ்கள் மோதல்; 77 பேர் படுகாயம்

ஜோகன்னஸ்பர்க், தென் ஆப்பிரிக்காவின் தலைநகர் ஜோகன்னஸ்பர்க்கில் தென் ஆப்பிரிக்க பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இங்குள்ள மாணவர்களை ஏற்றிக்கொண்டு கல்லூரி பஸ் சென்று கொண்டிருந்தது. பல்கலைக்கழகத்தின் முன்பு வந்தபோது எதிரே வந்த மற்றொரு பஸ் இதன்மீது நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் மாணவர்கள் உள்பட 77 பேர் படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் சிலரது நிலைமை … Read more

Campaign of Indian origin contesting the presidential election | அதிபர் தேர்தலில் போட்டியிடும் இந்திய வம்சாவளி பிரசாரம்

சிங்கப்பூர், சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் போட்டியிடும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முன்னாள் துணை பிரதமர் தர்மன் சண்முகரத்னம், 66, தன் அதிகாரப்பூர்வ தேர்தல் பிரசாரத்தை நேற்று துவக்கினார். தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூர் அதிபராக பதவி வகித்து வரும் ஹலிமா யாகோபின் ஆறு ஆண்டு பதவி காலம் செப்., 13ல் முடிவுக்கு வருகிறது. இதை தொடர்ந்து, செப்., மாதம் அதிபர் தேர்தல் நடக்கிறது. இதில் போட்டியிடப் போவதாக, அந்நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர் ஜார்ஜ் கோ, முதலீட்டு மேலாளர் … Read more

ஆஸ்திரேலியா கடற்கரையில் கரை ஒதுங்கிய திமிங்கலங்கள்… 50க்கும் மேற்பட்டவை பலி

ஆஸ்திரேலியா, டால்பின் மீன் வகைகளில் அளவில் பெரிய வகையை சேர்ந்தவை பைலட் திமிங்கலங்கள். அவை ஒரு குழுவாக நீந்தி செல்லும்போது, ஒரு திமிங்கலத்தை பின்தொடர்ந்து மற்ற அனைத்தும் ஒன்றாக செல்லும் பழக்கம் உடையவை. நேற்று முன்தினம் ஆஸ்திரேலியாவின் மேற்கு கடற்கரை பகுதியில் 100-க்கும் மேற்பட்ட பைலட் திமிங்கலங்கள் திடீரென கரை ஒதுங்க தொடங்கின. அவற்றில் 50-க்கும் மேற்பட்டவை நேற்று உயிரிழந்தது. இந்த திமிங்கல குழு முதல் முதலில் மேற்கு ஆஸ்திரேலியாவின் துறைமுக நகரமான அல்பனியின் செய்ன்ஸ் கடற்கரை … Read more

ஓட்டல் 'பாத் டப்'-இல் தலையில்லாமல் குளித்த முண்டம்.. ஜப்பானில் பயங்கரம்

டோக்கியோ: ஜப்பானில் உள்ள ஒரு ஓட்டலில் பாத் டப்பில் தலையில்லாமல் ஒரு உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விசாரணையில், ஒரு சைக்கோ குடும்பத்தால் அவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. ஜப்பானின் ஒக்கைடோ தீவில் உள்ள லவ் ஓட்டல் என்ற பெயரில் லாட்ஜுடன் இணைந்த உணவகம் இயங்கி வருகிறது. இங்கு நேற்று மாலை ஹிட்டோஷி உரா என்ற 62 வயது நபர் ஒரு பெண்ணுடன் வந்திருக்கிறார். இருவரும் அங்கு உணவருந்திவிட்டு ஓட்டல் அறைக்கு சென்றனர். … Read more

இந்தியாவின் ஏற்றுமதி தடை எதிரொலி: ஆஸ்திரேலியா முதல் அமெரிக்கா வரை அடித்துப்பிடித்து அரிசி வாங்கும் இந்தியர்கள்

சிட்னி, உள்நாட்டில் அரிசி விலையை கட்டுக்குள் வைக்கும் விதமாக பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. உலகில் அரிசி ஏற்றுமதியில் முக்கிய நாடாக இந்தியா உள்ள நிலையில், இந்த தடை காரணமாக அரிசி விலை உயரக்கூடும் என்ற அச்சம் சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ளது. கோடிக்கணக்கான ஆசிய, ஆப்பிரிக்க மக்களின் பிரதான உணவுப்பொருளாக அரிசி உள்ளது. அதிலும் இந்தியர்களுக்கு, அவர்கள் உள்நாட்டில் வசித்தாலும், வெளிநாட்டில் வசித்தாலும், அரிசி சோறு உண்டால்தான் ‘சாப்பிட்டது’ போலவே இருக்கும். … Read more

ரஷிய பாதுகாப்பு மந்திரி வடகொரியாவுக்கு திடீர் பயணம்

மாஸ்கோ, ரஷிய பாதுகாப்பு மந்திரி செர்கே சொய்கு மற்றும் அந்நாட்டு ராணுவ குழுவினர், வடகொரியா நாட்டுக்கு 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளனர். இதன்படி, சுனான் சர்வதேச விமான நிலையத்திற்கு சென்று சேர்ந்த அவரை வடகொரிய பாதுகாப்பு மந்திரி காங் சுன்-னாம் வரவேற்றார். கொரிய போர் நிறைவடைந்த 70-வது ஆண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் ரஷிய குழு பங்கேற்க உள்ளது. இந்த பயணம் இரு நாடுகளுக்கு இடையேயான உறவை வலுப்படுத்த உதவும் என அமைச்சகம் தெரிவித்து உள்ளது. சீன … Read more