US President Nominates First Female Navy Commander | கடற்படைக்கு முதல் பெண் தளபதி அமெரிக்க அதிபர் பரிந்துரை

வாஷிங்டன் : அமெரிக்க கடற்படைக்கு முதல் முறையாக பெண் தளபதியை நியமிக்கும் வகையில், அந்நாட்டின் அதிபர் ஜோ பைடன் பரிந்துரை செய்துள்ளார். அமெரிக்க கடற்படையின் தளபதியாக உள்ள அட்மிரல் மைக் கில்டே, அடுத்த மாதம், தன் நான்கு ஆண்டு பதவி காலத்தை நிறைவு செய்கிறார். இதையடுத்து, தற்போது துணை தளபதியாக உள்ள லிசா பிரான்செட்டியை, படையின் புதிய தளபதியாக நியமிக்க அதிபர் ஜோ பைடன் பரிந்துரைத்துள்ளார். இதன்படி, கடற்படையின் முதல் பெண் தளபதி மற்றும் முப்படைகளின் குழுவின் … Read more

A 10-year-old Indian girl who has traveled to 50 countries is surprised not to take a day off from school | 50 நாடுகளுக்கு பயணித்த 10 வயது இந்திய சிறுமி பள்ளிக்கு ஒரு நாள் கூடு விடுமுறை எடுக்காத ஆச்சரியம்

லண்டன்:பிரிட்டனில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, 10 வயது சிறுமி, இதுவரை 50 நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அதேநேரத்தில், இதற்காக அவர் பள்ளிக்கு ஒரு நாள் கூட விடுமுறை எடுக்கவில்லை. இந்தியாவை பூர்விகமாக உடையவர் தீபக். இவரது மனைவி அவிலாஷா. இவர்கள் ஐரோப்பிய நாடான பிரிட்டனின் லண்டன் நகரில் தணிக்கையாளர்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்களது மகள், அதிதி, 10. தங்கள் மகளுக்கு பல்வேறு நாடுகள் பற்றிய அனுபவம் ஏற்பட வேண்டும் என்பதற்காக, இந்த தம்பதி ஒரு … Read more

உருகுவே கடற்கரையில் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கிய 2 ஆயிரம் பென்குவின்கள்!

மாண்ட்டெவிடியோ, தென் அமெரிக்காவில் உள்ள உருகுவே நாட்டின் கடற்கரை பகுதியில் கடந்த 10 நாட்களில் சுமார் 2 ஆயிரம் பென்குவின்கள் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளன. மெகலானிக் பென்குவின் என்று அழைக்கப்படும் இவை, அட்லாண்டிக் கடலில் உயிரிழந்து, பின்னர் உருகுவே கடற்கரைக்கு அடித்து வரப்பட்டிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இவ்வாறு ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான பென்குவின்கள் உயிரிழக்க என்ன காரணம் என்பது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. கரை ஒதுங்கிய பென்குவின்களுக்கு இன்புலுயென்சா காய்ச்சல் பாதிப்பு … Read more

அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக கடற்படை தலைமை தளபதியாக பெண் நியமனம்…!

வாஷிங்டன், அமெரிக்காவின் வரலாற்றில் முதல் முறையாக அந்நாட்டின் கடற்படை தலைமை தளபதியாக லிசா பிரான்செட்டி என்ற பெண் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தற்போது கடற்படையின் துணை தலைவியாக லிசா பணியாற்றி வரும் நிலையில் அவரை கடற்படை தலைமை தளபதியாக அதிபர் ஜோ பைடன் நியமனம் செய்துள்ளார். இந்த நியமனத்தின் மூலம் அமெரிக்க கடற்படை வரலாற்றில் முதல் பெண் உயர் அதிகாரி மற்றும் முதல் பெண் கூட்டுப்படை தலைவி என்ற பெருமையை லிசா பெற்றுள்ளார். இவரது நியமனத்திற்கு அமெரிக்க செனட் … Read more

பதற்றத்துக்கு இடையே தொடர்ந்து ஏவுகணை சோதனையில் வட கொரியா தீவிரம்

பியாங்யாங்: கொரிய தீபகற்பத்தின் மேற்கே கடலை நோக்கி வட கொரியா ஏவுகணை பரிசோதனைகளை செய்துள்ளது. இதுகுறித்து தென் கொரியா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “இன்று அதிகாலை 4 மணியளவில் கொரிய தீபகற்பத்தில் வட கொரியா மேற்கு கடலை நோக்கி ஏராளமான ஏவுகணைகளை ஏவி பரிசோதனை செய்தது. ஏவுகணைகள் விவரம் குறித்து ஆராய்ந்து வருகிறோம்” என்று தெரிவித்துள்ளது. முன்னதாக 1980-களுக்குப் பிறகு முதல் முறையாக, தென் கொரியாவுக்கு அணு ஆயுதம் கொண்ட பாலிஸ்டிக் ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பலை (SSBN) … Read more

தெலுங்கு படம் பார்த்திருப்பாரோ.. தனக்கு தானே மூளை ஆபரேஷன் செய்த நபர்.. தற்போது மரணப் படுக்கையில்..

மாஸ்கோ: தனது மூளைக்குள் மைக்ரோசிப் பொருத்துவதற்காக தனக்கு தானே ஆபரேஷன் செய்த ரஷ்யாவைச் சேர்ந்த நபர் அதிகப்படியான ரத்த இழப்பால் தற்போது மரணப்படுக்கையில் இருக்கிறார். ரஷ்யாவின் நோவோபிர்ஸ்க் மாகாணத்தைச் சேர்ந்தவர் மிக்கைல் ரடுகா. 40 வயதான இவர், ஆர்வக்கோளாறு நபர் எனக் கூறப்படுகிறது. ஏதாவது வீடியோவோ, புத்தகத்தையோ படித்துவிட்டு விதவிதமான அறிவியல் சோதனைகளை நடத்தி வந்திருக்கிறார். அதை வீடியோ எடுத்து தனது பேஸ்புக்கில் ஷேர் செய்வதையும் வழக்கமாக கொண்டுள்ளார். இந்த சூழலில், கடந்த வாரம் ஹாலிவுட் திரைப்படம் … Read more

Indian business magnate who bought a mansion in London for 1,200 crore rupees for family office | லண்டனில் குடும்ப அலுவலகத்திற்காக ரூ.1,200 கோடிக்கு மாளிகையை வாங்கிய இந்திய தொழில் அதிபர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் லண்டன்: இங்கிலாந்தில் வசித்து வரும் இந்திய வம்சாவழியை சேர்ந்ததொழில் அதிபர் ஒருவர் லண்டனில் சுமார் 1,200 கோடி ரூபாய் மதிப்புள்ள மாளிகையை குடும்ப அலுவலகத்திற்காக வாங்கி அசத்தி உள்ளார். லண்டனில் வசித்து வருபவர் ரவி ரூயா. இந்திய வம்சாவழியை சேர்ந்த தொழில் அதிபரான இவர் எஸ்ஸார் குழுமத்தை சேர்ந்தவராவார். இவர் லண்டனில் உள்ள கட்டடம் ஒன்றை சுமார் 1,200 கோடி ரூபாய் முதலீடு செய்து வசப்படுத்தி உள்ளார். லண்டனில் புகழ்பெற்ற … Read more

வங்காளதேசம்: இந்து மத வழிபாட்டுத்தலம் மீது தாக்குதல் – கடவுள் சிலைகள் அடித்து உடைப்பு

டாக்கா, பாகிஸ்தான், வங்காளதேசம் போன்ற நாடுகளில் சிறுபான்மை மதத்தினர், அவர்களின் வழிபாட்டு தலங்கள் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், வங்காளதேச நாட்டின் பிரம்மன்பரியா மாவட்டம் நைமத்பூர் கிராமத்தில் இந்து மத வழிபாட்டு தலமான நைமத்பூர் துங்கை கோவில் உள்ளது. இந்த வழிபாட்டு தலத்திற்குள் கடந்த வியாழக்கிழமை இரவு வந்த நபர் வழிபாட்டு தலத்தில் தாக்குதல் நடத்தினார். மேலும் அங்கிருந்த கடவுள் சிலைகளையும் அடித்து உடைத்தார். பின்னர், அந்த நபர் அங்கிருந்து தப்பியோடினார். இந்த … Read more

இந்தியாவின் ஏற்றுமதி தடை எதிரொலி: அமெரிக்காவில் அரிசி தட்டுப்பாடு அபாயம்

வாஷிங்டன்: பாஸ்மதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்துள்ளது. இந்த அறிவிப்பு வெளியான நிலையில், அமெரிக்காவில் சூப்பர் மார்க்கெட் உள்ளிட்ட கடைகளில் அரிசிப் பைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஒவ்வொரு நபரும் தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட உச்சபட்ச அளவில் அரிசியை வாங்கி வைத்துக் கொள்ள் முனைப்பு காட்டுவதாகத் தெரிகிறது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது. தடை ஏன்? – உலகம் முழுவதும் பரவலாக அரிசி சார்ந்த உணவுகள் உண்ணப்படுகிறது. … Read more

Sri Lanka may accept Indian rupee for local transactions | இலங்கையில் இந்திய ரூபாய் பயன்படுத்த அனுமதிக்க முடிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கொழும்பு: இலங்கையில் இந்திய தொழிலதிபர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள், உள்ளூர் பரிமாற்றத்திற்கு இந்திய ரூபாயை பயன்படுத்த அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சாப்ரி கூறியுள்ளார். இலங்கை அதிபர் ரணில் விக்கிரமிங்கே இரண்டு நாள் பயணமாக டில்லி வந்தார். பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேசினார். இந்த பயணத்தில் இரு நாடுகளுக்கு இடையே பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்த பயணம் தொடர்பாக … Read more