ஏஐ தொழில்நுட்பத்தால் மனித சமூகத்துக்கு ஆழமான உளவியல் பாதிப்பு: ஐ.நா. எச்சரிக்கை

நியூயார்க்: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை பயங்கரவாத அமைப்புகள் பயன்படுத்தும்போது நம்மால் கற்பனை செய்ய முடியாத ஆழமான உளவியல் பாதிப்புகள் ஏற்படும் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் ஆண்டோனியா குத்தரேஸ் எச்சரித்துள்ளார். உலக நாடுகளில் வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் நன்மை, தீமைகள் பற்றிய விவாதங்கள் அதிகரித்து வருகின்றன. இதனை கவனத்தில் கொண்டு இது தொடர்பான விவாதக் கூட்டங்களை ஐக்கிய நாடுகள் சபை கடந்த சில மாதங்களாகவே நடத்தி வருகிறது. அந்த வகையில், அமெரிக்காவின் நியூயார்க்கில் நேற்று … Read more

Protests of Indian origin in Germany | இந்திய வம்சாவளியினர் ஜெர்மனியில் போராட்டம்

பிராங்பேர்ட்:ஜெர்மனி அரசுக் காப்பகத்தில் உள்ள, இந்தியாவைச் சேர்ந்த இரண்டு வயது குழந்தை அரிஹா ஷாவை, அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கக் கோரி, அந்நாட்டில், இந்திய வம்சாவளியினர் போராட்டம் நடத்தினர். நம் நாட்டின் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பாவேஷ் ஷா- என்பவர், மனைவி தாரா உடன், தொழில் நிமித்தமாக, மேற்கு ஐரோப்பிய நாடான ஜெர்மனிக்கு சென்றார். இந்த தம்பதிக்கு, அரிஹா ஷா என்ற பெண் குழந்தை உள்ளது. கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பரில், குழந்தை அரிஹா ஷாவுக்கு, பிறப்புறுப்பில் ரத்தம் … Read more

கஞ்சா வைத்திருந்ததாகப் பிரபல மாடல் அழகி கைது…!

வாஷிங்டன், அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல மாடல் அழகி ஜிகி ஹடிட், தனது நண்பர்களுடன் கேமன் தீவுகளுக்குத் தனியார் விமானம் மூலம் சென்றார். ஓவன் ராபர்ட்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் ஜிகி ஹடிட் மற்றும் நண்பர்களின் உடைமைகளைச் சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் கஞ்சா மற்றும் கஞ்சாவைப் புகைக்கப் பயன்படுத்தப்படும் கருவிகள் இருந்தது. இதையடுத்து ஜிகி ஹடிட்டும், அவரது நண்பர் ஒருவரும் கைது செய்யப்பட்டனர். விசாரணைக்குப் பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகி … Read more

சிங்கப்பூர் பாஸ்போர்ட் இருக்கா உங்ககிட்ட? அப்ப நீங்க தான் ராஜா… விசா தேவையே இல்லயாம்!

வெளிநாட்டு பயணங்களின் போது ஒருவரது அடையாளத்தை உறுதி செய்யும் மிக முக்கியமான ஆவணமாக பாஸ்போர்ட் திகழ்கிறது. இதன்மூலம் சம்பந்தப்பட்ட நபர் எந்த நாட்டை சேர்ந்தவர், அவரது பிறந்த தேதி, ஊர், பயண விவரங்கள் உள்ளிட்டவற்றை தெரிந்து கொள்ளலாம். அதேசமயம் எந்த நாட்டிற்கு செல்கிறோமா, அந்நாட்டிற்குள் நுழைய விசா என்ற ஆவணம் தேவைப்படுகிறது. தொழில் நிறுவனங்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! பாஸ்போர்ட் மற்றும் விசா பயன்பாடு இதைப் பெறுவதற்கு பாஸ்போர்ட் தான் அடிப்படையான ஒன்று. பாஸ்போர்ட் மட்டும் இருந்தால் … Read more

World must prepare to face increasingly intense heatwaves: UN | “வெப்ப அலைகளை எதிர்கொள்ள தயாராக வேண்டும்”: ஐநா எச்சரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: வெப்ப அலை நிகழ்வுகள் தொடர்ந்து தீவிரமடையும்; அதை எதிர்க்கொள்ள மக்கள் தயாராக இருக்க வேண்டும் என ஐநா எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐ.நா.வின் உலக வானிலை அமைப்பின், மூத்த வெப்ப ஆலோசகர் ஜான் நேர்ன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: வெப்ப அலைகள் மிகவும் ஆபத்தான இயற்கை ஆபத்துகளில் ஒன்றாகும். ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான மக்கள் வெப்பத்தால் ஏற்படும் உடல் சோர்வால் இறக்கின்றனர். வெப்ப அலை நிகழ்வுகள் தொடர்ந்து தீவிரமடையும்; அதை … Read more

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 66.41 கோடியாக உயர்வு

வாஷிங்டன், சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் தற்போது பெருமளவு கட்டுக்குள் வந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 69 கோடியே 16 லட்சத்து 90 ஆயிரத்து 737ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 6 லட்சத்து 90 ஆயிரத்து 346 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை … Read more

‘பெலாரஸில் வாக்னர் குழுவால் நேட்டோ படைகளுக்கு அச்சுறுத்தல்’ – ரஷ்ய ராணுவ முன்னாள் அதிகாரி பேட்டியால் சலசலப்பு

மாஸ்கோ: வாக்னர் குழுவினர் பெலாரஸில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதால், உக்ரைன் நேட்டோ படைகளின் நெருக்கடியை சமாளிக்க ரஷ்யாவுக்கு புதிய உத்தி கிட்டியுள்ளதாக அந்நாட்டின் மூத்த அரசியல்வாதியும், முன்னாள் ராணுவ அதிகாரியுமான ஆண்ட்ரே கர்டபோலோவ் தெரிவித்துள்ளார். ரஷ்ய தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டி, உக்ரைன் போரை இன்னொரு கோணத்தில் எதிர்கொள்ள ரஷ்ய அதிபர் புதின் ஆயத்தமாகி வருகிறாரோ என்ற வினாக்களை எழுப்பியுள்ளது. தொலைக்காட்சிப் பேட்டியில் பேசிய ஆண்ட்ரே, “நேட்டோ படைகள் போலந்து, லிதுவேனியா எல்லைகளில் குவிக்கப்பட்டுள்ளன. ஒருவேளை உக்ரைனுக்கு ஆதரவாக அங்கிருந்து … Read more

செக் குடியரசில் 2 பஸ்கள் நேருக்கு நேர் மோதல்; ஒருவர் உயிரிழப்பு.! 76 பேர் காயம்

ப்ராக், தென் அமெரிக்க நாடான செக் குடியரசின் புரூனோவில் உள்ள நெடுஞ்சாலையில் ஒரு பஸ் சென்று கொண்டிருந்தது. இதில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். திடீரென இந்த பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதில் நிலைதடுமாறி எதிரில் வந்த மற்றொரு பஸ் மீது நேருக்குநேர் மோதியது. இதில் ஒரு பஸ் டிரைவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து தகவலறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் பஸ்சுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். … Read more

காதலருடன் தப்பிச் செல்ல முயன்ற பாகிஸ்தான் பெண் கைது: பாகிஸ்தான் ராணுவத்துடன் தொடர்பா என விசாரணை

புதுடெல்லி: காதலருடன் டெல்லிக்கு தப்பிச் செல்ல முயற்சி செய்த பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் சீமா குலாம் ஹைதரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். பாகிஸ்தானின் கராச்சி நகரை சேர்ந்தவர் சீமா ஹைதர் (27). இவரது கணவர் சவுதி அரேபியாவில் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர். கரோனா பெருந்தொற்று காலத்தில் சீமா ஹைதர், ஆன்-லைனில் பப்ஜி விளையாட்டை விளையாடி வந்தார். அப்போது தலைநகர் டெல்லி அருகேயுள்ள உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவை சேர்ந்த சச்சின் … Read more

ஆஸ்திரேலிய கடற்கரையில் ஒதுங்கிய மர்ம பொருள் இந்திய ராக்கெட் இன்ஜினா? – விண்வெளி நிறுவன அதிகாரிகள் ஆய்வு

கான்பெர்ரா: ஆஸ்திரேலியாவின் கடற்கரை பகுதியில் ஒதுங்கிய மர்ம பொருள் இந்திய ராக்கெட் இன்ஜினாக இருக்கலாம் என ஐரோப்பிய விண்வெளி நிறுவன பொறியாளர் கருத்து தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் பெர்த் நகருக்கு வடக்கே 250 கி.மீ தொலைவில் உள்ள கடற்கரை பகுதியில் மர்ம பொருள் ஒன்று கரை ஒதுங்கியது. ஒரு சிறிய கார் அளவுக்கு உருண்டையாக இருக்கும் அந்த பாகம் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட ராக்கெட் இன்ஜின் பாகமாக இருக்கலாம் என ஆஸ்திரேலிய அதிகாரிகள் கூறியுள்ளனர். இது தொடர்பாக ஆஸ்திரேலிய விண்வெளி … Read more