டைட்டானிக் போலவே டைட்டன் திரைப்படமாகுமா? கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஜேம்ஸ் கேமரூன்

Titan Submarine Accident: டைட்டானிக் நீர்மூழ்கிக் கப்பல் விபத்து குறித்து ஜேம்ஸ் கேமரூன் படம் எடுப்பாரா? என்ற கேள்வியை பலரும் சில நாட்களாக வினவி வருகின்றனர். இந்த கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் பதிலை டைட்டானிக் படத்தின் இயக்குநர் அளித்துள்ளார்

Elon Musk says Twitter is losing cash because advertising is down and the company is carrying heavy debt | ” அதிக கடன் சுமையில் டுவிட்டர் நிறுவனம் “: எலான் மஸ்க் சொல்கிறார்

வாஷிங்டன்: டுவிட்டரில் விளம்பரங்கள் பாதியாக குறைந்து விட்டதால், நிறுவனம் அதிக கடன் சுமையில் உள்ளது என அந்நிறுவனம் சிஇஓ எலான் மஸ்க் வருத்தம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, டுவிட்டர் சிஇஓ எலான் மஸ்க் கூறியிருப்பதாவது: டுவிட்டருக்கான விளம்பரங்கள் 50 சதவீதமாக குறைந்துள்ளது. நாங்கள் இன்னும் நஷ்டத்தில் தான் இயங்கி கொண்டிருக்கிறோம். அதிக கடன் சுமையில் நிறுவனம் உள்ளது. வியாபாரம் சார்ந்த மற்ற விஷயங்களில் கவனம் செலுத்துவதற்கு முன்பாக டுவிட்டர் நிறுவனத்தை லாபப் பாதைக்கு கொண்டு வர வேண்டும். … Read more

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 66.40 கோடியாக உயர்வு

வாஷிங்டன், சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் தற்போது பெருமளவு கட்டுக்குள் வந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 69 கோடியே 14 லட்சத்து 57 ஆயிரத்து 903 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 66 கோடியே 40 லட்சத்து 02 ஆயிரத்து 329 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனா வைரசால் … Read more

2024ல் ரஷ்ய அதிபர் புடினுக்கு ஆபத்து… பாபா வங்காவின் பகீர் கணிப்பு!

2024 ஆம் ஆண்டில் ரஷ்ய அதிபர் புடின் படுகொலை செய்யப்படுவார் என பாபா வங்காவின் கணிப்பில் கூறப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. பாபா வங்காபல்கேரிய நாட்டை சேர்ந்தவர் பாபா வங்கா. 1911ஆம் ஆண்டு வடக்கு மேசிடோனியாவில் பிறந்த பாபா வங்கா சிறுவயதில் கடுமையான புயல் ஒன்றில் சிக்கி கண் பார்வையை இழந்தார். கண் பார்வையை இழந்த பாபா வங்காவிற்கு எதிர்காலத்தை கணித்து கூறும் சக்தி கிடைத்ததாக கூறப்படகிறது.​ சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறப்பு… உடனடி … Read more

இஸ்ரேல் பிரதமர் மருத்துவமனையில் அனுமதி..!

இஸ்ரேல், மத்திய கிழக்கு நாடான இஸ்ரேலில், லிகுட் கட்சியைச் சேர்ந்த பெஞ்சமின் நெதன்யாகு பிரதமராக உள்ளார். இந்நிலையில், இஸ்ரேல் நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (73) உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அலுவலகத்தில் இருந்த போது அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து டெல் அவிவ் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் பெஞ்சமின் நெதன்யாகு உடல்நிலை சீராக இருப்பதாகவும், மருத்துவர்கள் தொடர் கண்காணிப்பில் இருப்பதாகவும், விரைவில் வீடு திரும்புவார் … Read more

ஒரு கொடிக்கு ரூ. 40 கோடியா… ஏற்கெனவே கடன் பிரச்னை – பந்தா காட்டுகிறதா பாகிஸ்தான்!

பாகிஸ்தான் இந்தியாவோடு போட்டிப்போடும் வகையில் அதன் சுதந்திர தினத்தன்று (ஆக. 14) 500 அடி தேசியக் கொடியை ஏற்றிவைக்க திட்டமிட்டுள்ளது. 

அமெரிக்கா: ஜார்ஜியா நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 4 பேர் பலி

ஹாம்ப்டன், அட்லாண்டாவின் தெற்கே ஒரு சிறிய சமூகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது நான்கு பேர் கொல்லப்பட்டதாக ஜார்ஜியாவில் உள்ள மாவட்ட அரசாங்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஹென்றி கவுண்டி அதிகாரிகளின் அறிக்கையின்படி, அட்லாண்டாவிற்கு தெற்கே சுமார் 40 மைல் (65 கிலோமீட்டர்) தொலைவில் உள்ள ஹாம்ப்டனில் உள்ள ஒரு துணைப்பிரிவில் நேற்று காலை நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தை போலீசார் இன்னும் விசாரித்து வருகின்றனர் என்று தெரிவித்துள்ளது. நான்கு பேர் இறந்துவிட்டார்கள் என்பதை என்னால் உறுதிப்படுத்த … Read more

ஐக்கிய அரபு அமீரகத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

அபுதாபி: ஐக்கிய அரபு அமீரகத் தலைநகர் அபுதாபியில், பிரதமர் நரேந்திர மோடிக்கு நேற்று உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரான்ஸில் 2 நாட்கள் பயணத்தை நிறைவுசெய்த பிரதமர் மோடி, ஐக்கிய அரபு அமீரகத் தலைநகர் அபுதாபிக்கு நேற்று சென்றார். அங்குள்ள விமான நிலையத்தில் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் காலித் நேரில் வந்து வரவேற்றார். தொடர்ந்து, ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமதுவை, பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். அப்போது, வர்த்தகப் … Read more

இந்திய ரூபாயை பொது நாணயமாக பயன்படுத்த இலங்கை தயார் – அதிபர் ரணில் விக்ரமசிங்கே

இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே அடுத்த வாரம் 2 நாள் பயணமாக இந்தியா வரவுள்ளார். இந்த பயணத்தின்போது அவர் பிரதமர் மோடியை சந்தித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இலங்கை தலைநகர் கொழும்புவில் நடைபெற்ற இந்திய தலைமை நிர்வாக அதிகாரி மன்றத்தில் அதிபர் ரணில் விக்ரமசிங்கே உரையாற்றினார். அப்போது இந்தியாவின் வளர்ச்சி குறித்து பேசிய அவர் “ஜப்பான், கொரியா மற்றும் சீனா போன்ற நாடுகளுடன் கிழக்கு ஆசியா 75 ஆண்டுகளுக்கு முன்பு குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டது. … Read more