உலக செய்திகள்
சீனாவில் சிறுவனை விஷம் வைத்து கொன்ற ஆசிரியருக்கு தூக்குத்தண்டனை
பீஜிங், சீனாவின் ஹெனான் மாகாணம் ஜியான்சுவோ நகரில் உள்ள மழலையர் பள்ளியில் வான் யுன் என்பவர் ஆசிரியராக பணிபுரிந்தார். இவர் கடந்த 2019-ம் ஆண்டு தன்னிடம் பயின்ற 25 மாணவர்களுக்கு விஷத்தன்மை வாய்ந்த சோடியம் நைட்ரைட் கலந்த உணவை கொடுத்துள்ளார். இதில் அந்த சிறுவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதனால் வான் யுன்னை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்த வழக்கில் அந்த நாட்டின் கோர்ட்டு அவருக்கு … Read more
''நான் வாக்னர் குழு தலைவராக இருந்திருந்தால்…'' – அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் பகடி
வாஷிங்டன்: ரஷ்ய ராணுவத்துக்கு எதிராக வாக்னர் ஆயுதக் குழு கிளர்ச்சியில் ஈடுபட்ட பிர்கோஸின் எங்கு இருக்கிறார் என்பது இன்னும் மர்மமாக இருக்கும் சூழலில் அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன. இந்நிலையில், இதுகுறித்து பைடன் கிண்டலாக ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார். அதில் பைடன், நான் மட்டும் பிர்கோஸினாக இருந்திருந்தால். எனக்கு அளிக்கப்படும் உணவைக் கூட கவனமாகவே உட்கொள்வேன் என்று கூறியுள்ளார். ரகசிய சந்திப்பு: ரஷ்ய ஆதரவு கூலிப்படையாக இருந்த வாக்னர் குழு ரஷ்யாவுக்கு எதிராக திரும்பி மாஸ்கோவை … Read more
25 மாணவர்களுக்கு விஷம்… பெண் ஆசிரியைக்கு மரண தண்டனை நிறைவேற்றம்… சீனாவில் பரபரப்பு!
சீனாவில் உள்ள ஜியாஸுவாவில் உள்ள மெங்மெங் ப்ரீ ஸ்கூல் எஜுகேஷன் என்ற கிண்டர்கார்டன் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தவர் வாங் யுன் (39). இவருக்கும், சக ஆசிரியர் ஒருவருக்கும் கடும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக ஒரு திட்டத்தை தீட்டியுள்ளார். இந்தியாவிற்கு வர போகும் Tesla தொழிற்சாலை..! கிண்டர்கார்டன் மாணவர்களுக்கு விஷம் அதாவது, கிண்டர்கார்டன் பள்ளி மாணவர்கள் வழக்கமாக சாப்பிடும் உணவில் விஷம் கலந்துள்ளார். குறிப்பிட்டு சொல்ல வேண்டுமெனில் சோடியம் நைட்ரேட் என்ற ரசாயனத்தை தூவியிருக்கிறார். … Read more
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 66.39 கோடியாக உயர்வு
வாஷிங்டன், சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் தற்போது பெருமளவு கட்டுக்குள் வந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 69 கோடியே 14 லட்சத்து 55 ஆயிரத்து 785 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 5 லட்சத்து 8 ஆயிரத்து 640 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து … Read more
பாகிஸ்தானுக்கு அணுமின் நிலையம் கட்ட உதவும் சீனா! நன்றியில் நெகிழும் பாக் பிரதமர்
Chashma-V Nuclear Power Plant: சீனாவின் உதவியுடன் கட்டப்பட்டு வரும் 1200 மெகாவாட் அணுமின் நிலையப் பணிகளை பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்
இங்கிலாந்தில் 2 இந்தியர்களுக்கு சிறை
லண்டன், இங்கிலாந்தில் வசித்து வரும் இந்திய வம்சாவளி பல்விந்தர் சிங் புல் (வயது 48). இவர் கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் தென்கிழக்கு இங்கிலாந்தில் உள்ள எல்லையோர நகரமான டோவரில் காரில் சென்று கொண்டிருந்தபோது எல்லை பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து, அவரது காரை சோதனை செய்தபோது, காருக்குள் இந்திய அகதிகள் 3 பேரை மறைத்து வைத்து சட்டவிரோதமாக இங்கிலாந்துக்குள் அழைத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து பல்விந்தர் சிங்கை போலீசார் கைது செய்தனர். … Read more
தான்சானியாவில் லாரி மீது மினி பஸ் மோதி 6 பேர் சாவு
டோடோமா, ஆப்பிரிக்க நாடான தான்சானியாவின் கஹாமா பகுதியில் இருந்து நயகனாசிக்கு மினி பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அங்குள்ள கெய்ட்டா பகுதி அருகே சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை மினி பஸ் இழந்தது. இதனால் எதிரே வந்து கொண்டிருந்த லாரி மீது மினி பஸ் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர். காயம் அடைந்த இருவருக்கும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தினத்தந்தி Related Tags : தான்சானியா … Read more
பிரான்ஸின் உயரிய விருது பெற்றது இந்தியாவுக்கு கவுரவம்: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்
புதுடெல்லி: பிரான்ஸ் நாட்டின் மிக உயர்ந்த ‘தி கிரான்ட் கிராஸ் ஆஃப் தி லீஜியன் ஆஃப் ஹானர்’ விருது அளிக்கப்பட்டதை பணிவுடன் ஏற்கிறேன். இது இந்தியாவுக்கும், 140 கோடி இந்திய மக்களுக்கும் அளிக்கப்பட்ட கவுரவம்’ என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அழைப்பு விடுத்தார். இதை ஏற்று நேற்று முன்தினம் பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடியை விமான … Read more
இந்தியா-பிரான்ஸ் உறவுகளின் முக்கிய அம்சம் பாதுகாப்பு ஒத்துழைப்பு – பிரதமர் மோடி பேச்சு
பாரிஸ்: இந்தியாவின் யுபிஐ பணப்பரிவர்த்தனை சேவையை பிரான்ஸில் அறிமுகப்படுத்த ஒப்புக்கொண்டுள்ளோம் என பிரதமர் மோடி தெரிவித்தார். பிரான்ஸ் அதிபரின் அழைப்பை ஏற்று, அந்நாட்டின் தேசிய தின கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி பாரிஸ் சென்றுள்ளார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரான்ஸ் பிரதமர் எலிசபெத் போர்ன், பிரதமர் நரேந்திர மோடியை விமான நிலையத்திற்கு வந்து வரவேற்றார். இதையடுத்து, அதிபர் இம்மானுவேல் மேக்ரனை பிரதமர் மோடி சந்தித்தார். அப்போது, பிரதமர் நரேந்திர மோடிக்கு, … Read more