35-Year-Old US Woman Dies After Drinking 2 Litres Of Water In 20 Minutes | தண்ணீர் குடித்தது தப்பா?: 20 நிமிடங்களில் 2 லிட்டரை காலி செய்த 35வயது பெண் பரிதாப பலி

வாஷிங்டன்: அமெரிக்காவில் கடந்த மாதம் பெரும்பாலான இடங்களில் வெயில் வாட்டி எடுத்தது. இந்நிலையில், அமெரிக்காவில் 35 வயது பெண் 20 நிமிடங்களில் 2 லிட்டரை குடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 20 நிமிடத்தில் 2 லிட்டர் தண்ணீர்: இது குறித்து, உயிரிழந்த பெண்ணின் மூத்த சகோதரர் டெவன் மில்லர் கூறியதாவது: தண்ணீர் குடியுங்கள் என யாரோ சொன்னதைக் கேட்டு அவர் 20 நிமிடத்தில் நான்கு பாட்டில் தண்ணீர் குடித்துள்ளார். 20 நிமிடத்தில் … Read more

ஆஸ்திரேலியாவில் சீக்கிய மாணவர்கள் பள்ளிக்கூடத்துக்கு கத்தியை எடுத்து செல்ல அனுமதி

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் பள்ளிக்கூடங்களுக்கு சீக்கிய மாணவர்கள் கிர்பான் எனும் கத்தியை கொண்டு செல்வதற்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது. கிர்பானை எடுத்து செல்வது தங்களது மத அடையாளங்களில் ஒன்று எனவும், இந்த தடையானது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது எனவும் கோரி அங்குள்ள சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பான வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் அதன் தீர்ப்பு வெளியானது. இதில், அரசின் இந்த நடவடிக்கை பாரபட்சமானது என்று கூறிய சுப்ரீம் கோர்ட்டு இந்த தடையை ரத்து … Read more

பாகிஸ்தான் பிரதமர் பதவி ஒரு முள்கிரீடம்… இது வரை சிறை சென்ற பிரதமர்கள் பட்டியல் இதோ..!

பாகிஸ்தான் பிரதமரின் நாற்காலி முட்கள் நிறைந்த கிரீடம் என்று அழைக்கப்படுகிறது. பாகிஸ்தானின் பிரதமர் பதவியில் அமர்ந்து பலர் சிறை வாசம் அனுபவைத்துள்ளனர்.

பணவீக்கம் 30 சதவீதமாக உயர்வு: அத்தியாவசிய பொருட்களுக்கு பாகிஸ்தான் மக்கள் தவிப்பு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. இந்நிலையில், தற்போது அங்கு பணவீக்கம் 30 சதவீதமாக உயர்ந்துள்ளது. காய்கறிகள் உட்பட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உச்சம் தொட்டுள்ளது. தக்காளி, வெங்காயம், அரிசி, கேஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசல் என 54 அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கின்றனர். விலைவாசி உயர்வால் அத்தியாவசிய பொருட்கள் வாங்கமுடியாமல் தவித்து வருகின்றனர். பாகிஸ்தானின் கடன் சுமை அதிகரித்துள்ள நிலையில், அதன் அந்நிய … Read more

Violence by Americans flocking to get free | இலவசம் பெற குவிந்த அமெரிக்கர்களால் வன்முறை

நியூயார்க், அமெரிக்காவில், சமூக வலைதள பிரபல மான காய் செனாட் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில், இலவசம் வாங்க ஏராளமானோர் குவிந்ததால், வன்முறை வெடித்தது. இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டார். அமெரிக்காவைச் சேர்ந்தவர் காய் செனாட், 21; இன்ஸ்டாகிராம், யு டியூப், ட்விட்ச் போன்ற சமூக வலைதளங்களில், லட்சக் கணக்கில் பின்தொடர்பவர்களை வைத்துள்ளார். இவர், ‘கேம் ஷோ’ போன்ற, இளைஞர்களை கவரும் விதமான வீடியோ வெளியிடுவது வழக்கம். இந்நிலையில், நியூயார்க்கில் உள்ள மன்ஹாட்டன் என்ற பகுதியில், காய் செனாட் … Read more

அரசு கருவூல பரிசுப் பொருட்கள் ஊழல் வழக்கு | பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது; 3 ஆண்டுகள் சிறை

இஸ்லாமாபாத்: அரசு கருவூலப் பரிசுப் பொருட்கள் ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. அவர் உடனடியாக கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இம்ரான் கான், 1996-ல் தெஹ்ரீக் இ–இன்சாப் (பிடிஐ) கட்சியைத் தொடங்கி, 2018 பொதுத் தேர்தலில் வென்று, பாகிஸ்தானின் 22-வது பிரதமராகப் பதவியேற்றார். கூட்டணிக் கட்சிகள் விலகியதால், 2022 ஏப்ரல் மாதம் அவர் பிரதமர் பதவியில் இருந்து … Read more

Aadhaar in Sri Lanka: Central Government assistance | இலங்கையில் ஆதார்: மத்திய அரசு உதவி

கொழும்பு, நம் நாட்டு மக்களுக்கு, ஆதார் அடையாள அட்டை வழங்குவதுபோல், இலங்கையிலும் டிஜிட்டல் அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்கான நிதியுதவியின் முதல் தவணையை மத்திய அரசு வழங்கியுள்ளது. நம் அண்டை நாடான இலங்கை, பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. தற்போது அதில் இருந்து படிப்படியாக மீண்டு வருகிறது. இந்நிலையில், நம் நாட்டில் வழங்கப்படும் ஆதார் அடையாள அட்டை போல், இலங்கையிலும், டிஜிட்டல் அடையாள அட்டை வழங்க, அந்த நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. அரசின் திட்ட பலன்கள், … Read more

Violators of new Hijab bill in Iran will be severely punished | ஈரானில் ஹிஜாப்புக்கு புதிய மசோதா மீறுபவர்களுக்கு கடும் தண்டனை

டெஹ்ரான், ஈரானில் இஸ்லாமிய பெண்கள் ‘ஹிஜாப்’ அணிவதற்காக தயாரிக்கப்பட்டு வரும் புதிய மசோதா அமலுக்கு வந்தால், விதிமுறைகளை மீறுபவர்கள் மீது முன்னெப்போதும் இல்லாத வகையில், கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். போராட்டம் மேற்காசிய நாடான ஈரானில், பெண்கள் தங்கள் தலையை சுற்றி, ‘ஹிஜாப்’ எனப்படும் துணியை அணிவதும், கழுத்து முதல் பாதம் வரை மறைக்க கூடிய முழு நீள ஆடை அணிவதும் கட்டாயமாக பின்பற்றப்படுகிறது. இந்த ஒழுக்க விதிகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்க, … Read more

“எனது கைது எதிர்பார்க்கப்பட்டதே” – கைதுக்கு முன்பே இம்ரான் கான் வெளியிட்ட வீடியோ வைரல்

இஸ்லாமாபாத்: தனது கைது எதிர்பார்க்கப்பட்டதே என்றும், கட்சித் தொண்டர்கள் உறுதியான எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும் என்றும் பாகிஸ்தான் தெரீக் இ இன்சாப் கட்சியின் தலைவர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து இஸ்லாமாபாத் விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து இம்ரான் கான் உடனடியாக கைது செய்யப்பட்டார். மேலும், அவர் அரசியலில் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எவ்வித தேர்தலிலும் போட்டியிட இயலாத வண்ணம் … Read more