ஆப்கானிஸ்தானில் உணவு நெருக்கடி: 10 ஆயிரம் டன் கோதுமை வழங்கி இந்தியா உதவி

புதுடெல்லி, இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான ஆப்கானிஸ்தானில் பொருளாதார சிக்கலின் காரணமாக கடும் உணவு பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. உணவு பற்றாக்குறையால் தவித்து வரும் ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு உதவும் விதமாக, இந்தியா சமீபத்தில் 10,000 மெட்ரிக் டன் கோதுமை வழங்கியிருக்கிறது. தனது டுவிட்டர் பதிவில் இச்செய்தியை உறுதிப்படுத்தியுள்ள ஐ.நா. உணவு அமைப்பு, இந்த கோதுமை இன்று அந்நாட்டின் ஹெராத் நகரை அடைந்ததாக தெரிவித்திருக்கிறது. கடந்த மாதம், ஈரானின் சபஹர் துறைமுகம் வழியாக, மனிதாபிமான அடிப்படையில், இந்திய அரசாங்கம் 20,000 … Read more

இலங்கையில் அமைகிறது திருப்பதி கோயில்.. ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் திடீர் அறிவிப்பு

விசாகப்பட்டினம்: இலங்கையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலை அமைக்கப்படும் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டைமானுடன் நேற்று நடந்த சந்திப்பில் இதனை அவர் தெரிவித்தார். ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/- மிகப்பெரிய பொருளாதார பாதிப்பில் சிக்கி சீர்குலைந்து போயிருக்கும் இலங்கை, தற்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, சில மாதங்களுக்கு முன்பு அங்கு சில மாகாணங்களுக்கு ஆளுநர்கள் நியமிக்கப்பட்டனர். … Read more

காலிஸ்தான் ஆதரவாளர்களால் இந்திய தூதரத்திற்கு தீ வைப்பு: அமெரிக்கா கடும் கண்டனம்

வாஷிங்டன், அமெரிக்காவின் சான்-பிரான்சிஸ்கோ நகரில் இந்தியாவின் துணை தூதரகம் அமைந்துள்ளது. இந்த தூதரகத்திற்கு கடந்த 2ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலிஸ்தான் ஆதரவாளரகள் தீ வைத்ததாக கூறப்படுகிறது. இந்த தீவைப்பு சம்பவத்தின் வீடியோ காட்சி தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2ம் தேதி நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் துணை தூதரகத்தை எரிபொருளை ஊற்றி எரித்துள்ளார். இதனால், அப்பகுதி முழுக்க கொழுந்துவிட்டு எரிந்த தீயால் புகை மண்டலமாக காட்சி அளித்தது. இதன் பின்னர் தீயணைப்பு … Read more

ஜெனின் தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேலில் கத்திக்குத்து, கார் தாக்குதல்: 8 பேர் படுகாயம் – அதிகரிக்கும் பதற்றம்

ஜெருசலேம், இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவ வருகிறது. பாலஸ்தீனத்தின் காசா முனையை ஹமாஸ் அமைப்பு ஆட்சி செய்கிறது. இந்த அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத இயக்கமாக கருதுகிறது. ஹமாஸ் அமைப்பை போன்று மேலும் சில ஆயுதமேந்திய குழுக்கள் காசா முனை, மேற்குகரையில் செயல்பட்டு வருகின்றன. அதேவேளை பாலஸ்தீனத்திற்கு மேற்கு கரையில் முகமது அப்பாஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. மேற்குகரையின் சில பகுதிகள் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த பகுதிகளில் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும், … Read more

சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெறுவதில் பாகிஸ்தானுக்கு 4-வது இடம்

இஸ்லாமாபாத், பாகிஸ்தான் தற்போது வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ளது. இதனால் அங்கு பணவீக்கம், விலை உயர்வு போன்றவற்றால் ஏழைகள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனை சமாளிப்பதற்காக உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்றவற்றிடம் கடன்களை வாங்கி வருகிறது. அதன்படி கடந்த மார்ச் மாத நிலவரப்படி சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் வாங்கிய நாடுகளின் பட்டியலில் 5-வது இடத்தில் பாகிஸ்தான் உள்ளது. சுமார் ரூ.3 லட்சம் கோடியுடன் அர்ஜென்டினா இந்த பட்டியலில் முதல் இடத்தில் … Read more

6 மாதங்களில் 354 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்: அதிர்ச்சி ரிப்போர்ட்

தெஹ்ரான்: 2023 ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் மட்டும் 354 பேருக்கு ஈரான் அரசு மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது. மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டுள்ள வேகம் கடந்த 2022 ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் மிகமிக அதிகம் என்று நார்வேயை மையமாகக் கொண்ட ஈரான் மனித உரிமைகள் அமைப்பு (IHR) எச்சரித்துள்ளது. மாஷா அமினி மரணமும் மரண தண்டனைகளும்: ஈரானில் 9 வயது சிறுமி முதல் வயதான பெண்கள் வரை ஹிஜாப் அணிவது கட்டாயம். பெண்கள் ஆடை அணியும் … Read more

லெபனான் சிறையில் உண்ணாவிரதம் இருந்த முகமது கடாபி மகன் கவலைக்கிடம்

திரிபோலி, ஆப்பிரிக்க நாடான லிபியாவில் கடந்த 1969 முதல் 2011-ம் ஆண்டு வரை அதிபராக இருந்த முகமது கடாபி சர்வாதிகாரியாக செயல்பட்டார். பின்னர் இவருக்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்து சொந்த ஊரான சிர்டேவில் புரட்சியாளர்களால் சுட்டு கொல்லப்பட்டார். இதனையடுத்து சிரியா-லெபனான் எல்லையில் பிடிபட்ட அவரது மகன் ஹன்னிவால் லெபனான் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முகமது கடாபியின் மகன் ஹன்னிவால் 2015-ம் ஆண்டு முதல் சிறையிலேயே உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இந்தநிலையில் அவருக்கு ரத்தத்தில் … Read more

பார்பி படத்துக்கு வியட்நாம் அரசு தடை: மீண்டும் சர்ச்சையான நைன் டேஷ் லைன் – பின்னணி என்ன?

ஹனோய்: கிரேட்டா கெர்விக் இயக்கத்தில் உருவாகியுள்ள ஹாலிவுட் படமான ‘பார்பி’ வரும் 21 ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் வெளியிடப்படவுள்ள நிலையில், இப்படத்துக்கு வியட்நாம் அரசு தடை விதித்துள்ளது. பார்பி பட போஸ்டரில், தென் சீன கடலில் சீனா சர்ச்சைக்குரிய விதத்தில் உரிமை கோரும் இடங்கள் அதன் ஆளுகைக்குக் கீழ் இருப்பதுபோலவே காட்டும் வரைபடம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதனைக் கண்டித்துள்ள வியட்நாம் அரசு, படத்துக்கு தடை விதித்தது. இந்நிலையில் அந்தப் போஸ்டர்களை வியட்நாம் நாட்டின் பட விநியோகஸ்தர்கள் … Read more

ஆப்கனில் அழகு நிலையங்கள் நடத்த பெண்களுக்குத் தடை: தலிபான் அரசு உத்தரவு

காபூல்: ஆப்கானிஸ்தானில் அழகு நிலையங்களை பெண்கள் நடத்துவதற்கு தடை விதித்து தலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து ஆப்கானிஸ்தானில் துணை மற்றும் நல்லொழுக்க அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவில், “காபூல் மற்றும் பிற மாகாணங்களில் பெண்களால் நடத்தப்படும் அனைத்து அழகு நிலையங்களும் உடனடியாக தடை செய்யப்படுகிறது. அனைவரும் எங்கள் உத்தரவைப் பின்பற்ற வேண்டும். இந்த உத்தர்வை மீறுபவர்கள் சட்ட ரீதியான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படுவர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பெண்களின் வேலை வாய்ப்பை பறிக்கும் செயல்களில் தலிபான்கள் ஈடுபட்டு வருகின்றனர். … Read more

விதிகளை மீறி ஏரி அமைத்த நெய்மருக்கு ரூ.28.6 கோடி அபராதம் விதித்த பிரேசில் அரசு

பிரேசிலியா: கால்பந்தாட்ட உலகின் நட்சத்திர வீரர்களில் ஒருவர் பிரேசில் நாட்டை சேர்ந்த நெய்மர். அவர் தனது நாட்டில் தனக்கு சொந்தமான சொகுசு பங்களாவில் செயற்கையாக ஏரி அமைத்தபோது சுற்றுச்சூழல் துறையின் முறையான உரிமம் இல்லாமல் விதிகளை மீறியதற்காக ரூ.28.6 கோடி அபராதம் விதித்துள்ளது அந்நாட்டு அரசு. பிரேசில் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள தனது கடற்கரையோர சொகுசு பங்களாவில் நெய்மர் ஏரி அமைத்துள்ளார். இந்தப் பணியின்போது நாட்டின் சுற்றுச்சூழல் விதிகளை அவர் மீறியுள்ளார். குறிப்பாக, சுற்றுச்சூழல் துறையின் … Read more