Government action to rescue Indian child stuck in Germany for 20 months | ஜெர்மனியில் 20 மாதங்களாக சிக்கியுள்ள இந்திய குழந்தையை மீட்க அரசு நடவடிக்கை

புதுடில்லி,-ஜெர்மனியில் குழந்தைகள் உரிமை காப்பகத்தில் 20 மாதங்களாக சிக்கித் தவிக்கும் இரண்டரை வயது பெண் குழந்தையை விரைவில் இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப, அந்நாட்டு அரசை மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. குஜராத்தின் ஆமதாபாதைச் சேர்ந்த பவேஷ், ஐரோப்பிய நாடான ஜெர்மனியில் தன் மனைவி தாரா மற்றும் மகளுடன் வசித்து வந்தார். கடந்த 2021ல் குழந்தையின் அந்தரங்க உறுப்பில் காயம் ஏற்பட்டதை அடுத்து, பெற்றோர் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பரிசோதனையில், குழந்தை பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக கூறப்பட்டதை அடுத்து, … Read more

சீனாவின் லியோனிங் மாகாணத்தில் சுழன்றடித்த சூறாவளி.. விளைநிலங்கள், குடியிருப்பு கட்டிடங்களுக்கு கடும் சேதம்!

சீனாவின் லியோனிங் மாகாணத்தில்கடுமையான சூறாவளி தாக்கியது. பெரும் வேகத்துடன் காற்று சுழன்றடித்ததில், விளைநிலங்களில் இருந்து பயிர்கள், குடியிருப்பு கட்டிடங்கள் உள்ளிட்டவை கடுமையாக சேதம் அடைந்தன. சூறாவளி தாக்குதலையடுத்து, தீயணைப்பு, மின்சாரம், வீட்டுவசதி மற்றும் பொதுப் பாதுகாப்புப் படையினர் சம்பவ இடங்களுக்கு விரைந்து நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். சூறாவளியால் சுமார் 100 குடியிருப்புகள் சேதமடைந்துள்ளதாகவும், ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Source link

Prime Minister Modis speech at the American Parliament on 22 | ஜூன் 22-ல் அமெரிக்க பார்லி.,யில் பிரதமர் மோடி உரை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: வரும் ஜூன் 22-ம் தேதி அமெரிக்க பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி , அந்நாட்டு பாராளுமன்றத்தில் உரையாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. வரும் ஜூன் 22-ம் தேதி பிரதமர் மோடி அமெரிக்க பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். இந்த பயணத்தின் போது அதிபர் ஜோபைடனை சந்தித்து இரு நாடுகளுக்கிடையேயான பரஸ்பரம் நட்புறவு குறித்து பேசுகிறார். இந்நிலையில் அமெரிக்க பார்லி., செயலகம் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, அரசு முறைப்பயணமாக … Read more

சவுதி கட்டிடக் கலை நிபுணரை மணந்த ஜோர்டான் இளவரசர்

அம்மான்: ஜோர்டான் நாட்டு இளவரசர், சவுதியின் கட்டிடக் கலை நிபுணர் ஒருவரை திருமணம் செய்துகொண்டது வளைகுடா நாடுகளில் பேசும் பொருளாகி உள்ளது. ஜோர்டானின் இளவரசர் ஹூசைன் (28) – சவுதியின் கட்டிடக்கலை கலை நிபுணர் ராஜ்வா அல் சைஃப் (29) திருமணம் பிரமாண்டமாக நடைபெற்றது. தலைநகர் அம்மானில் நடைபெற்ற இந்தத் திருமணமத்தில் உலகப் பிரபலங்கள், அரசக் குடும்பங்கள் என பலரும் கலந்து கொண்டனர். இளவரசரின் திருமணத்தை முன்னிட்டு இன்று ஜோர்டானில் அரசு விடுமுறை விடுக்கப்பட்டு, அரசு தொலைக்காட்சியில் … Read more

தினமும் 6 மணிநேரம் கழிவறையில் செலவிட்ட நபர்.. வேலையை விட்டு தூக்கிய நிறுவனம்.. கேஸ் வர போடுவியா நீ?

பெய்ஜிங்: சீனாவில் ஒரு நபர் தான் வேலை செய்யும் நிறுவனத்தில் நாள்தோறும் 6 மணிநேரத்தை கழிவறையிலேயே செலவிட்டு வந்த சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள் சீனாவை சேர்ந்தவர் வாங். 35 வயதான வாங், அங்குள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் 2006-ம் ஆண்டு முதல் பணிபுரிந்து வந்திருக்கிறார். இதனிடையே, கடந்த 2015-ம் ஆண்டு அவருக்கு வயிற்றில் சிறு கோளாறு ஏற்பட்டுள்ளது. … Read more

Mahaperiyava Mani Mandapam Temple in America; Kumbabhishekam on 5th July | அமெரிக்காவில் மஹாபெரியவா மணிமண்டபம் கோவில்; ஜூலை 5ல் கும்பாபிஷேகம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் அமெரிக்கா, நியூ ஜெர்ஸியில் மிகப்பெரிய மஹா பெரியவா மணிமண்டபம் கோயில் கட்டபட்டுள்ளது. இதன் கும்பாபிஷேகம் ஜூலை 5ல் சிறப்பாக நடைபெறவிருக்கிறது. பேசும் தெய்வம், நடமாடும் தெய்வம் என்று உலகம் முழுவதும் போற்றப்படும் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளுக்கு, பல்லாயிரக்கணக்கான வருடங்களுக்கு எதிர்கால சந்ததிகளுக்கு வழிகாட்டும் ஒரு அணையா விளக்காக திகழும் வண்ணம் ஓர் கோவில் அமைக்க வேண்டும். அக்கோவில் காலங்கடந்து நிற்குமளவுக்கு கருங்கல்லினால் ஆக்கப்பட வேண்டும் , அதுவும் அமெரிக்காவில் நியூ ஜெர்ஸியில் … Read more

அமெரிக்காவில் ஸ்பெல்லிங் பீ போட்டி.. கடினமான வார்த்தைகளை மிகச்சரியாக உச்சரித்த இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி..!

அமெரிக்காவின் பிரபலமான ஸ்பெல்லிங் பீ போட்டியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 14 வயது மாணவன் வெற்றி பெற்றுள்ளார். ஆங்கில மொழி உச்சரிப்பை ஊக்குவிக்கும் வகையில் ஸ்கிரிப்ஸ் என்ற அமைப்பு ஆண்டுதோறும் கடினமான வார்த்தைகளை மிகச்சரியாக உச்சரிப்பவர்களுக்கு பரிசு வழங்கி வருகிறது. நடப்பாண்டிற்கான போட்டியில் புளோரிடாவின் லார்கோவில் வசித்து வரும் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட தேவ் ஷா இறுதி சுற்றில் சாம்மோபைல்  என்ற வார்த்தையை சரியாக உச்சரித்து வெற்றி பெற்றார். 200 போட்டியாளர்களை எதிர்கொண்டு வெற்றி பெற்ற 8ம் … Read more

அமெரிக்கா | பிறந்த 3 நாட்களில் நகர்ந்த குழந்தை: வைரல் வீடியோ

நியூயார்க்: பிறந்து 3 நாட்களிலே குழந்தை ஒன்று தலையை தூக்கிய நிலையில் நகர்கின்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த நிகழ்வு அமெரிக்காவில் நடந்துள்ளது. பெனிசில்வேனியா சேர்ந்தவர் சமந்தா எலிசபெத். இவருக்கு பிப்ரவரி மாதம் நைலா என்ற குழந்தை பிறந்துள்ளது. இக்குழந்தை பிறந்த மூன்று நாட்களில் குப்புறப் படுத்து தலையை தூக்கி நகரத் தொடங்கியிருக்கிறது. இதனை சற்றும் எதிர்பாராத சமந்தா தனது போனில் அதனை வீடியோவாக பதிவு செய்திருக்கிறார். தற்போது இந்த வீடியோ வைரலாகியது. … Read more

தனிமை மற்றும் சமூக தனிமைப்படுத்தலை சமாளிக்க சட்டத்தை இயற்றிய ஜப்பான்

Social isolation: சமூக தனிமை மற்றும் தனிமையில் இருக்கும் மக்களை ஆதரிப்பதற்கான நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் மசோதாவை சட்டமாக்கியது ஜப்பான்

பாகிஸ்தான் பணவீக்கம் 38% ஆக அதிகரிப்பு: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயர்வு

இஸ்லமாபாத்: பாகிஸ்தான் நாட்டில் முன் எப்போதும் இல்லாத வகையில் நுகர்வோர் விலை குறியீட்டு பட்டியல் 38 சதவீதம் என்ற அளவுக்கு உயர்ந்துள்ளது. அதன் காரணமாக அந்த நாட்டில் உணவுப் பொருட்களின் விலை, வீட்டு வாடகை, மின்சாரம், எரிவாயு மற்றும் போக்குவரத்து சார்ந்த கட்டணம் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. கடந்த ஏப்ரலில் அந்த நாட்டின் பணவீக்கம் 36.4 சதவீதமாக இருந்தது. இந்தச் சூழலில் ஒரே மாதத்தில் 1.6 சதவீதம் இந்த எண்ணிக்கை உயர்ந்துள்ளது. அதன் காரணமாக கடந்த … Read more