இந்தியா தலைமையிலான ஷாங்காய் மாநாட்டில் காணொளி மூலம் பங்கேற்கும் சீன அதிபர்

பீஜிங், இந்தியா, ரஷியா, கிர்கிஸ்தான், கஜகஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளை உறுப்பினர்களாக கொண்டு ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு செயல்பட்டு வருகிறது. இதனிடையே, இந்த ஆண்டு ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு அமைப்பிற்கு இந்தியா தலைமை வகிக்கிறது. இந்தியா தலைமை வகிக்கும் நிலையில் இந்த கூட்டமைப்பின் மந்திரிகள் மட்டத்திலான மாநாடு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. பாதுகாப்புத்துறை, வெளியுறவுத்துறை உள்பட பல்வேறு துறை மந்திரிகளின் மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் உறுப்பு நாடுகளை சேர்ந்த மந்திரிகள் … Read more

பிரான்ஸ் கலவரத்தில் இதுவரை 600 பேர் கைது; இனப் பாகுபாடு பிரச்சினையைத் தீர்க்க ஐ.நா அறிவுரை

பாரிஸ் : பிரான்ஸ் தனது காவல் துறையில் ஆழமாக வேரூன்றியுள்ள இனப் பாகுபாடு பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை அறிவுறுத்தியுள்ளது. ஆப்பிரிக்க இளைஞர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து பிரான்ஸில் கலவரம் வெடித்துள்ளது. இந்தக் கலவரத்தில் இதுவரை 600 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 200-க்கும் அதிகமான போலீஸார் காயமடைந்துள்ளனர். இது குறித்து பிரான்ஸ் பிரதமர் எலிசபெத் போர்னே கூறும்போது ”போராட்டங்களை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தேசிய ஒற்றுமையை உறுதிப்படுத்துவதே முன்னுரிமை. சட்டம் – … Read more

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 66.34 கோடியாக உயர்வு

வாஷிங்டன், சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் தற்போது பெருமளவு கட்டுக்குள் வந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 69 கோடியே 9 லட்சத்து 20 ஆயிரத்து 81 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 5 லட்சத்து 83 ஆயிரத்து 767 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து … Read more

ரஷ்யா – உக்ரைன் போரால் சுற்றுச்சூழல் பாதிப்பு: ஆய்வுக் குழுவில் இடம்பெற்ற கிரெட்டா துன்பெர்க்

கீவ்: ரஷ்யா – உக்ரைன் போரால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து ஆராயும் குழுவில் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த சூழலியல் ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க் இடம் பெற்றுள்ளார். உக்ரைன் தலைநகர் கீவ் நகரத்துக்கு அவர் ஆய்வுக் குழுவினருடன் நேற்று சென்றார். போரினால் அரவமின்றி பாதிக்கப்பட்ட சுற்றுச்சூழல் மீது உலக நாடுகளின் கவனத்தைத் திருப்பும் முயற்சியாக இந்தப் பயணத்தை அந்த ஆய்வுக்குழு மேற்கொண்டுள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்து 16 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், போரினால் சுற்றுச்சூழல் எந்த … Read more

நகரும் நடைபாதையில் சிக்கிய பெண்ணின் கால் துண்டிப்பு.! தாய்லாந்தில் பரிதாபம்

பாங்காக், தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள டான் மியுயங் விமான நிலையத்துக்கு நேற்று 57 வயதான தாய்லாந்து பெண் பயணி ஒருவர் வந்தார். அதே நாட்டின் தென்பகுதியில் உள்ள நகோன் சி தம்மராட் மாகாணத்துக்கு செல்லும் விமானத்தை பிடிப்பதற்காக அவர் வந்திருந்தார். விமான நிலையத்தில் நகரும் நடைபாதை உள்ளது. அதில் அவர் சூட்கேசுடன் சென்றார். நகரும் நடைபாதை முடிவடையும் இடத்தில் போட்டிருந்த தட்டுகள் திடீரென உடைந்ததால், அதனுள் அவரது இடது கால் சிக்கிக்கொண்டது. அவர் செய்வதறியாமல் திகைத்தார். … Read more

மெக்சிகோவில் தீவிர வெப்ப அலை – 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவில் கடந்த 3 வாரங்களாக நீடிக்கும் தீவிர வெப்ப அலையினால் 100க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து மெக்சிகோ சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், “மெக்சிகோவின் பெரும்பாலான பகுதிகளில் கடந்த மூன்று வாரங்களாக வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸை எட்டியுள்ளது. குறிப்பாக ஜூன் 18 முதல் 24 வரை மெக்சிகோவில் அதிதீவிர வெப்பம் பதிவாகி இருக்கிறது. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது. தீவிர வெப்பஅலை காரணமாக இதுவரை 100க்கும் அதிகமானவர்கள் பலியாகி … Read more

Putin Praises Make In India, Says Had Visible Effect On Indian Economy | இந்திய பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்திய ‛மேக் இன் இந்தியா: புடின் புகழாரம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் மாஸ்கோ: பிரதமர் மோடியின், ‛மேக் இன் இந்தியா’ திட்டம், இந்திய பொருளாதாரத்தில் ஏற்படுத்திய தாக்கங்கள் தெளிவாக தெரிகிறது என ரஷ்ய அதிபர் புடின் புகழாரம் சூட்டி உள்ளார். இது தொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில் புடின் பேசியதாக அந்நாட்டு நாளிதழில் வெளியான செய்தியில் கூறப்பட்டு உள்ளதாவது: ரஷ்யாவின் மிக நெருங்கிய நண்பரான, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சில வருடங்களுக்கு முன்பு ‛மேக் இன் இந்தியா’ என்ற திட்டத்தை கொண்டு வந்தார். … Read more

மூன்றாம் உலகப்போர்… அடுத்த அமெரிக்க அதிபர் இவர்தான்… சுனாமி… மிரட்டும் டைம் ட்ராவலர்!

எதிர்காலம் குறித்து பல ஆண்டுகளுக்கு முன்பே பாபா வங்கா, நாஸ்டர் டாமஸ் போன்றவர்கள் பல்வேறு கணிப்புகளை கூறியிருப்பதாக அடிக்கடி பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது. இந்நிலையில் தற்போது இதுபோன்று கணிப்புகளை ஃபலோயர்களையும் வியூவர்ஸ்களையும் குவித்து வருகிறார் இளைஞர் ஒருவர். ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/- எனோ அலரிக் என்ற அவர் தன்னை ஒரு டைம் ட்ராவலர் என கூறிக்கொள்கிறார். தான் 2671 ஆம் ஆண்டிலிருந்து வந்திருப்பதாகவும் கூறி வருகிறார். … Read more

150 people arrested for rioting in France | பிரான்சில் சிறுவன் சுட்டுக்கொலை : கலவரம் செய்த 150 பேர் கைது

பாரீஸ் : பிரான்சில் 17 வயது சிறுவன் போலீசாரால் சுட்டு கொலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கலவரம் செய்த 150 பேர் கைது செய்யப்பட்டனர். பிரான்ஸ் தலைநகர் பாரீசுக்கு உட்பட்ட நான்டர்ரே புறநகரில் நஹேல் 17, மீது போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். இதில் சிறுவன் உயிரிழந்தான். கீழ்படியவில்லை என்பதற்காக போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர். இச்சம்பவம் மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. பாரீசின் எண்ணற்ற புறநகர் பகுதிகளில் மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிறுவன் சுட்டு … Read more

போலீஸ் சுட்டதில் இளைஞர் உயிரிழப்பு – பாரிஸ் நகரில் கலவரம்; 40,000 போலீஸார் குவிப்பு

பாரிஸ்: பிரான்சில் 17 வயது இளைஞர் போக்குவரத்து போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து பாரிஸ் நகரின் பல இடங்களில் காவல் துறையினர் மற்றும் ஆர்ப்பாட்டக்கார்களிடையே கடும் மோதல் மூண்டுள்ளது. நான்டெரி பகுதியில் கடந்தசெவ்வாய்க்கிழமை போக்குவரத்து போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காரில் வந்த நயில் என்ற 17 வயது இளைஞர் காவல் துறையின் உத்தரவுக்கு கட்டுப்பட மறுத்ததில் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானதையடுத்து பாரிஸின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டம் … Read more