மும்பை தாக்குதலில் தொடர்புள்ள லஷ்கர் தீவிரவாதி பாக். சிறையில் உயிரிழப்பு

புதுடெல்லி: மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 160 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு தீவிரவாதி களை தயார்படுத்திய லஷ்கர்-அமைப்பின் தலைவர்களில் முக்கியமானவர் ஹபிஸ் அப்துல் சலாம் புட்டாவி. இவர் லஷ்கர் அமைப்புக்கு நிதி திரட்டுவது, ஆட்களை தேர்வு செய்வது போன்ற பணிகளை 20 ஆண்டுகளாக செய்து வந்தார் என அமெரிக்க உளவுத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2002-ம் ஆண்டு மத்தியில் பாகிஸ்தானின் லாகூரில் உள்ள லஷ்கர் மையத்தின் பொறுப்பாளராக இவர் … Read more

கொசோவா நாட்டில் நேட்டோ படையினர் மீது தாக்குதல்; 40 வீரர்கள் காயம்

பிரிஸ்டினா, தென்கிழக்கு ஐரோப்பிய நாடான கொசோவாவில் செர்பியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் சிவேகன் நகரில் அல்பேனியர் ஒருவர் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால் அதிருப்தி அடைந்த செர்பியர்கள் போராட்டத்தில் குதித்தனர். இதனையடுத்து போராட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக உலகின் மிகப்பெரிய ராணுவ கூட்டமைப்பான நேட்டோ படை அங்கு விரைந்தது. அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். ஆனால் போராட்டக்காரர்கள் நேட்டோ படையினர் மீது கற்களை எறிந்தும், பெட்ரோல் குண்டுகளை வீசியும் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட … Read more

China Mosque: சீனாவில் இடிக்கப்படும் மசூதி! வெகுண்டெழும் இஸ்லாமியர்களின் போராட்டம்

China to demolish 13th century mosque: சீனாவில்  புராதனமான மசூதியை இடித்துவிட்டு, அங்கு உணவகங்கள், பார்கள் மற்றும் கழிப்பறைகளைக் கட்டும் அரசின் திட்டத்தை இஸ்லாமியர்கள் எதிர்க்கின்றனர்

இந்தியர்களுக்கு 5 மாதங்களில் 60 ஆயிரம் விசாக்களை வழங்கிய சீனா

பீஜிங், சீனாவில் 3 ஆண்டுகளாக வெளிநாட்டு சுற்றுலாவாசிகளுக்கு அனுமதி அளிக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில், நடப்பு ஆண்டு மார்ச்சில் இந்தியா உள்பட வெளிநாட்டு சுற்றுலாவாசிகள் நாட்டுக்குள் வர அனுமதிக்கப்படுவார்கள் என சீனா அறிவித்தது. இதன்படி, சீனாவின் பல்வேறு வகையான விசாக்கள் வழங்கப்படும். இதற்காக இந்தியாவில் உள்ள தூதரகம் வெளியிட்ட அறிவிப்பில், 2020-ம் ஆண்டு மார்ச் 28-ந்தேதிக்கு முன்பு வழங்கப்பட்ட சீன விசாக்கள், மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றும் தெரிவித்து இருந்தது. இந்நிலையில், இந்தியாவில் உள்ள சீன … Read more

நைஜீரியா பிடித்து வைத்திருந்த இந்திய வீரர்கள் 9 மாதங்களுக்கு பின் விடுவிப்பு

அபுஜா, நைஜீரியா நாட்டில் இருந்து எண்ணெய் வாங்குவதற்காக கடந்த ஆண்டு ஹீரோயிக் ஐடுன் என்ற கப்பல் சென்று உள்ளது. அதில், இந்தியாவை சேர்ந்த 16 கடற்படை வீரர்கள் உள்பட 26 வெளிநாட்டினர் பயணம் செய்தனர். இந்த நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்டில், அந்த கப்பல் எண்ணெய்க்காக நைஜீரிய கப்பலுக்கு காத்திருந்தது. எனினும், தெரியாத மற்றும் அடையாளம் தெரியாத கப்பல் ஒன்று, நைஜீரிய கடற்படையில் இருந்து வருகிறோம் என கூறியபடி இந்த கப்பலை நெருங்கி உள்ளது. இதனால், கடற்கொள்ளையர்களாக … Read more

'குத்தகை பணம் செலுத்தவில்லை' – மலேசிய விமான நிலையத்தில் பாகிஸ்தான் விமானம் சிறைபிடிப்பு…!

கொலாலம்பூர், பாகிஸ்தான் கடும் அரசியல், பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதனிடையே, பாகிஸ்தான் விமான நிறுவமான பாகிஸ்தான் சர்வதேச ஏர்லைன்ஸ் குத்தகை முறையில் மலேசியாவிடமிருந்து போயிங் 777 வாங்கியுள்ளது. இதற்கு தவணை முறையில் பணம் மலேசியாவுக்கு கொடுக்கப்பட்டு வந்தது. ஆனால், கடந்த சில மாதங்களாக தவணை தொகை செலுத்தப்படமால் இருந்து வந்தது. மொத்தம் 4 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பாக்கி தொகை செலுத்தப்படாமல் இருந்தது. இது தொடர்பாக மலேசிய கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் விமானத்தை பறிமுதல் செய்ய … Read more

லிபியாவில் ஐ.எஸ். அமைப்புக்கு பிரசாரம்; 23 பேருக்கு மரண தண்டனை விதித்து கோர்ட்டு அதிரடி

திரிபோலி, லிபியா நாட்டில் 2011-ம் ஆண்டு அரசுக்கு எதிராக ஏற்பட்ட கிளர்ச்சிக்கு பின்னர், அரசியல் ஸ்திரத்தன்மையற்ற நிலை மற்றும் மோதல் போக்கும் காணப்பட்டது. இதனால், சண்டை, உள்நாட்டு குழப்பம் என்ற சூழலை ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பயன்படுத்தி கொண்டது. ஈராக் மற்றும் சிரியாவில் அடித்தளம் கொண்டு இயங்கும் இந்த அமைப்பு லிபியாவிலும் வளர்ச்சி அடைந்தது. இதன் தொடர்ச்சியாக, 2015-ம் ஆண்டு திரிபோலி நகரில் கொரிந்தியா ஓட்டலில் தாக்குதல் நடத்தியதில் 9 பேர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து, இந்த … Read more