ரஷியாவுக்கு பதிலடி,,, ஜெர்மனியில் 4 ரஷிய தூதரகங்களை மூட அரசு முடிவு
பெர்லின், உக்ரைனுக்கு எதிரான போரை ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்கியபோது, அதற்கு பல நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்தன. அவற்றில் ஜெர்மனியும் ஒன்று. இதனை தொடர்ந்து, ரஷியாவின் எரிவாயு இறக்குமதியை நிறுத்தியது. ரஷியாவுக்கு எதிரான சர்வதேச தடைக்கு ஆதரவு அளித்தது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடைகளை ரஷியா மீது விதித்தன. போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியாக இது மேற்கொள்ளப்பட்டது. எனினும், போரானது ஓராண்டை கடந்து நீடித்து வருகிறது. இதன்பின், தனது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் … Read more