ரூ. 13.66 லட்சம் முதல் ஆரம்பம் மஹிந்திரா XUV 7XO அறிமுகமானது | Automobile Tamilan

மஹிந்திராவின் பிரசத்தி பெற்ற XUV700 மாடலுக்கு மாற்றாக புதிய XUV 7XO எஸ்யூவி விற்பனைக்கு ரூ.13.66 லட்சம் ஆரம்பம் முதல் துவங்குகின்ற நிலையில், முதலில் வாங்கும் 40,000 நபர்களுக்கு மட்டுமே இந்த அறிமுக சலுகை விலை கிடைக்க உள்ளது. மஹிந்திராவின் புதிய மின்சார வாகனங்களான XEV சீரிஸ் கார்களிலிருந்து பல்வேறு நவீன அம்சங்கள் இதில் சேர்க்கப்பட்டுள்ளது. Mahindra XUV 7XO முந்தைய XUV 700 மாடலின் விலையை அடிப்படையாகவே அமைந்திருந்தாலும், இந்த கார் பல்வேறு நவீன அம்சங்களுடன் … Read more

ஜனவரி 2026 முதல் ரெனால்ட் கார்களின் விலை உயருகின்றது.! | Automobile Tamilan

ரெனால்ட் இந்தியாவின் அனைத்து மாடல்களுக்கும் இந்த விலை உயர்வு பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், கார்களின் விலையில் சுமார் 2 சதவீதம் வரை உயர்வு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவில் விற்பனையில் உள்ள ரெனால்ட் நிறுவனத்தின் க்விட், ட்ரைபர், கைகர் போன்ற வாகன உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்களின் விலை உயர்வு மற்றும் தற்போதைய பொருளாதாரச் சூழல் காரணமாகவே இந்த விலை உயர்வு தவிர்க்க முடியாததாகிவிட்டது என்று இந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. வரும் ஜனவரி 26, 2026 அன்று தனது … Read more

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.! | Automobile Tamilan

கிளாசிக் லுக்கில் தொடர்ந்து கிடைக்கின்ற பஜாஜின் பல்சர் 150 பைக்கில் மேம்படுத்தப்பட்ட பாடி கிராபிக்ஸ் மற்றும் புதுப்பிக்கப்பட்ட நிறங்களை பெற்று விலை ரூ. 1,08,772 முதல் டாப் வேரியண்ட் ட்வீன் டிஸ்க் கொண்டது  ரூ. 1,15,481 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதிய டிசைனில் அறிமுகமாகி வாடிக்கையாளர்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், புதிய தொழில்நுட்பம் மற்றும் வசதிகளுடன் வந்துள்ள இந்த பைக்கின் முழு விவரங்களை இங்கே காண்போம். Bajaj Pulsar 150 பல்சர் N150 மற்றும் N160 மாடல்களில் … Read more

நிசானின் மேக்னைட் விலை ரூ.32,000 வரை உயருகின்றது.! | Automobile Tamilan

நிசான் இந்தியா தனது கார்களின் விலையை வரும் ஜனவரி 1, 2026 முதல் 3 % வரை அதாவது ரூ.17,000 முதல் ரூ.32,000 வரை உயர்த்த உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வாகனத் தயாரிப்புக்கான மூலப்பொருட்களின் விலை உயர்வு, பணவீக்கம் மற்றும் உற்பத்திச் செலவுகள் அதிகரித்துள்ளதே இந்த விலை உயர்வுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. அதிகரித்து வரும் செலவுகளை ஈடுகட்டவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யும் மேக்னைட் மற்றும் எக்ஸ்-ட்ரெய்ல் ஆகிய கார்களின் … Read more

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு | Automobile Tamilan

இந்தியாவின் முன்னணி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பாளரான ஏதெர் எனர்ஜி, தனது ஸ்கூட்டர்களின் விலையை ரூ.3,000 வரை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வு வரும் ஜனவரி 1, 2026 முதல் அமலுக்கு வரும். ஸ்கூட்டர் தயாரிப்பிற்குத் தேவையான மூலப்பொருட்களின் விலை உலக அளவில் அதிகரித்திருப்பதும், அந்நியச் செலாவணி சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் இறக்குமதி செலவை அதிகரிப்புடன், முக்கிய எலக்ட்ரானிக் உதிரிபாகங்களின் விலை உயர்வு உற்பத்திச் செலவை அதிகரித்துள்ளதால் உயர்வை தவிர்க்க இயலவில்லை என தெரிவிக்கப்படுள்ளது. மேலும் டிசம்பர் … Read more

ஹாரியர், சஃபாரியில் பெட்ரோல் என்ஜினை வெளியிட்ட டாடா மோட்டார்ஸ் | Automobile Tamilan

மிகுந்த எதிர்பார்ப்புக்குள்ளான டாடா மோட்டார்சின் ஹாரியர் மற்றும் சஃபாரி எஸ்யூவிகளில் பெட்ரோல் வெர்ஷன் குறித்த விவரங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. டீசல் இன்ஜின்களில் மட்டுமே கிடைத்து வந்த இரு கார்களும், விரைவில் புதிய பெட்ரோல் இன்ஜின் மற்றும் கூடுதல் சிறப்பம்சங்களுடன் விரைவில் விலை அறிவிக்கப்பட உள்ளது. Tata Safari and Harrier Petrol புதிய டாடா சியராவில் உள்ள அதே Hyperion இன்ஜின் ஆனது இரண்டு கார்களுக்கும் வலிமை சேர்ப்பதாக மட்டுமல்லாமல் சியராவை விட, ஹாரியர் மற்றும் சஃபாரியின் … Read more

ரூ. 1.79 லட்சம் விலையில் கேடிஎம் 160 டியூக்கில் TFT கிளஸ்ட்டர் வெளியானது | Automobile Tamilan

கேடிஎம் இந்தியாவின் பிரசத்தி பெற்ற 160 டியூக் பைக்கில் கூடுதலாக 5-அங்குல வண்ண டிஎஃப்டி (TFT) கிளஸ்ட்டருடன் கூடிய புதிய வேரியண்ட் ரூ.1.79 லட்சத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இது முந்தைய மாடலின் அடிப்படையான அனைத்து அம்சங்களை பெற்றாலும் டிஎஃப்டி கிளஸ்ட்டருக்காக ரூ.8,000 வரை விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. KTM 160 Duke புதிய மாடலின் மிக முக்கியமான 5-அங்குல வண்ண டிஎஃப்டி ஆனது ஏற்கனவே கேடிஎம் 390 டியூக் பைக்கில் உள்ளதைப் போன்றே வடிவமைக்கப்பட்டு மை கேடிஎம் செயலியுடன் … Read more

அடுத்த 18 மாதங்களில் 3 கார்களை வெளியிடும் நிசான் இந்தியா.! | Automobile Tamilan

மேக்னைட் மட்டும் உள்நாட்டில் தயாரிக்கப்படுகின்ற நிலையில் நிசான் இந்திய சந்தையில் கிராவைட், டெக்டான் மற்றும் 7 இருக்கை கொண்ட டெக்டான் என மூன்று மாடல்களை அடுத்தடுத்து விற்பனைக்கு வெளியிட உள்ளது. சென்னையின் ரெனால்ட் ஆலையில் தயாரிக்கப்பட உள்ள இந்த கார்கள் இந்தியா மட்டுமல்லாமல் பல்வேறு வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட வாய்ப்புள்ளது. Nissan Gravite ட்ரைபரின் நிசான் மாடலாக வரவிருக்கின்ற 7 இருக்கை  கொண்ட பட்ஜெட் விலை கிராவைட் காம்பேக்ட் எம்பிவி மாடலை ஜனவரி 2026ல் உற்பத்தி நிலை … Read more

ஜனவரி 2026 முதல் எம்ஜி கார்களின் விலை 2 சதவீதம் வரை உயருகின்றது.! | Automobile Tamilan

இந்தியாவில் ஜனவரி 2026 முதல் கார் நிறுவனங்கள் விலை உயரத்த தயாராகி வருகின்ற நிலையில், ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் தனது அனைத்து கார் மாடல்களின் விலையையும் 2 % வரை உயர்த்துவதாகவும், விலை உயர்வு வரும் ஜனவரி 1, 2026 முதல் அமலுக்கு வரும் என்று இந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. வாகனத் தயாரிப்பிற்கான மூலப்பொருட்களின் விலை தொடர்ந்து உயர்வதனாலும் மற்ற இதர பொருளாதாரக் காரணிகளால் உற்பத்திச் செலவுகள் அதிகரித்துள்ளதே இந்த விலை உயர்வுக்கு முக்கியக் காரணம் என்று … Read more

35 லட்சம் உற்பத்தி இலக்கை கடந்த மாருதி சுசூகி வேகன் ஆர்.! | Automobile Tamilan

இந்தியாவில் மிகவும் பிரசத்தி பெற்ற கார்களில் ஒன்றான டால்-பாய் ஹேட்ச்பேக் என அறியப்படுகின்ற வேகன் ஆர் வெற்றிகரமாக கடந்த 26 ஆண்டுகளில் 35 லட்சத்தை கடந்துள்ளது. 1993 ஆம் ஆண்டு முதன்முறையாக வந்த வேகன்ஆரின் ஒட்டுமொத்த உலகளாவிய விற்பனை 1 கோடியை கடந்துள்ளது. Wagon-R Sales Achivements டிசம்பர் 1999-ல் அறிமுகமான இந்த கார், தனது உயரமான வடிவமைப்பு (Tall-boy design) மற்றும் தாராளமான இடவசதியால் இந்தியக் குடும்பங்களின் நம்பிக்கையைப் பெற்றது. 2010ல் இரண்டாம் தலைமுறை மற்றும் … Read more