வங்காளதேச வீரர்களையும் ஐ.பி.எல். விளையாட அனுமதிக்கக்கூடாது; பாஜக
கொல்கத்தா, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலம் எடுத்திருந்த வங்காளதேச கிரிக்கெட் வீரர் முஸ்தாபிசுர் ரகுமானை விடுவிக்குமாறு இ்ந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது. இ்ந்நிலையில், ேமற்கு வங்காள மாநில பா.ஜனதா முன்னாள் தலைவர் திலீப் கோஷ், பஸ்சிம் மெதினிபூர் மாவட்டத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவை வரவேற்கிறோம். அதற்கு நன்றி.பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் ஐ.பி.எல். பந்தயத்தில் விளையாட அனுமதிக்கப்படுவது இல்லை. அதுபோல், வங்காளதேச கிரிக்கெட் வீரர்களும் விளையாட அனுமதிக்கப்படக்கூடாது. … Read more