ஊட்டி: 3வது நாளாக இரவில் கொட்டி தீர்க்கும் மழை – முடங்கும் போக்குவரத்து, மலை ரயில் சேவையும் ரத்து!
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. நீலகிரி மாவட்டத்திலும் கடந்த மூன்று நாள்களாக மழை தீவிரமடைந்து வருகிறது. குன்னூர், கோத்தகிரி, குந்தா மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு நேரங்களில் மின்னல், இடியுடன் கனமழை பெய்து வருகிறது. சீரமைப்பு பணிகள் கனமழையின் காரணமாக குன்னூர் நகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சில குடியிருப்புகள், சாலைகளில் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. தீயணைப்பு வீரர்கள், வருவாய்த்துறையினர் மற்றும் தன்னார்வலர்கள் உதவியுடன் மீட்பு … Read more