Los Angeles riots: படைகளை அனுப்பிய ட்ரம்ப்; `அரசியலமைப்பை மீறும் செயல்' -கலிபோர்னியா ஆளுநர் வழக்கு

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பொறுப்பேற்றார். அப்போது இருந்து இப்போது வரை, அவர் கொண்டுவந்திருக்கும் பல சட்டங்கள் சர்ச்சைகளைக் கிளப்பி உள்ளன. ஆனால், முதன்முதலாக பூதாகரமாக வெடித்த சர்ச்சை, ‘ஆவணம் செய்யப்படாமல் அமெரிக்காவில் குடியேறியவர்களை முறையில்லாமல் வெளியேற்றியது’ ஆகும். இப்போது இவர்களை வெளியேற்றுவதில் ட்ரம்ப் மேற்கொண்டுள்ள ஒரு நடவடிக்கை அமெரிக்காவிற்குள்ளேயே பெரும் எதிர்ப்புகளைக் கிளப்பியுள்ளது. ட்ரம்ப் என்ன நடந்தது? அமெரிக்காவில் ஆவணம் செய்யாமல் குடியேறி இருப்பவர்களை வெளியேற்ற ட்ரம்ப் அரசு ரெய்டுகளைத் தொடர்ந்து … Read more

கோவா அரசு மருத்துவமனையில் அமைச்சரின் அடாவடி : மருத்துவர்கள் போராட்டம்

பனாஜி கோவா அர்சு மருத்துவமனையில் அமைச்சர் அடாவடி செய்ததை எதிர்து மருத்துவர்கள் போராட்டம் நடத்துகின்றனர் கோவா மாநில சுகாதார துறை அமைச்சர் விஷ்வஜித் ரானே மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் திடீர் சோதனை நடத்திய போது கோவா மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி ருத்ரேஷ் குட்டிக்கர் நோயாளிகளிடம் கடுமையாக நடந்து கொண்டதாக கூறி, திட்டியதோடு அவரை சஸ்பெண்ட் செய்து அமைச்சர் உத்தரவிட்டார். பத்திரிகையாளர் ஒருவரின் தாய்க்கு அவசர சிகிச்சை பிரிவில் வைட்டமின் பி 12 ஊசி … Read more

பிரியங்கா 14-ந் தேதி கேரளா வருகை

மலப்புரம், கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் நிலம்பூர் சட்டமன்ற இடைத்தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஜனநாயக முன்னணி சார்பில் ஆரியாடன் சவுகத் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்வதற்காக அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் பிரியங்கா எம்.பி. வருகிற 14-ந் தேதி நிலம்பூர் வருகிறார். அவர் நிலம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் தேர்தல் பிரசாரம் செய்கிறார். இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்ற … Read more

Lion: 'இது என்னடா சிங்கங்களுக்கு வந்த சோதனை’ சஃபாரி வாகனங்களைத் தாக்காமல் இருப்பதன் காரணம் தெரியுமா?

சஃபாரி வாகனங்களைத் தாக்காமல் இருப்பதன் காரணம் தெரியுமா? ஆப்பிரிக்க காடுகளுக்குள்ள ‘லயன் சஃபாரி’ போறவங்க, ‘முழுசா மூடப்படாத ஜீப்’கள்ல செல்கிற ரீல்ஸ் அடிக்கடி கண்கள்லபட்டுக்கிட்டே இருக்கு. சில ரீல்ஸ்ல, ரிசார்ட் வெளியே புல்வெளியில சில டூரிஸ்ட்டுகள் டீ குடிச்சிக்கிட்டு உட்கார்ந்திருக்க, சிங்கங்கள் அவங்களை கண்டுக்காம கடந்து போகுது. இது என்னடா சிங்கங்களுக்கு வந்த சோதனை..? அடிக்கடி தங்களைப் பார்க்க வர்ற மனுஷங்களைப் பார்த்து பார்த்து சிங்கங்கள் ‘நார்மலைஸ்’ ஆயிடுச்சா? சிங்கங்களோட இந்த அமைதிக்குப் பின்னாடி வேற ஏதாவது … Read more

நாளை திருநெல்வேலியில் மின்தடை

நெல்லை நாளை திருநெல்வேலியில் சில பகுதிகளின் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது/ திருநெல்வேலி நகர்ப்புற கோட்டம் செயற்பொறியாளர் , பழையபேட்டை மற்றும் பொருட்காட்சிதிடல் துணை மின் நிலையத்தில் நாளை (11.6.2025, புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் பின்வரும் இடங்களில் அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. அதன்படி திருநெல்வேலி டவுன், மேல ரதவீதி மேல் பகுதிகள், தெற்கு ரதவீதி தெற்கு பகுதிகள், … Read more

பெங்களூரு கூட்ட நெரிசல் விவகாரம்; சஸ்பெண்ட் ஆன ஐ.பி.எஸ். அதிகாரி மத்திய அரசிடம் மேல்முறையீடு

பெங்களூரு, 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் வெற்றி பெற்று முதல் முறையாக கோப்பையை கைப்பற்றிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்.சி.பி.) அணியினருக்கு சின்னசாமி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் பாராட்டு விழா நடந்தது. இதை காண ரசிகர்களுக்கு இலவச அனுமதி அளிக்கப்பட்டது. லட்சக்கணக்கான ரசிகர்கள் குவிந்ததால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டு 5 பெண்கள், 6 ஆண்கள் என மொத்தம் 11 பேர் உயிரிழந்தனர். 56 பேர் காயம் அடைந்தனர். இந்த துயர சம்பவத்துக்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாததும், … Read more

தவெக வில் இணைந்த முன்னாள் ஐ ஆர் எஸ் அதிகாரிக்கு முக்கிய பொறுப்பு

சென்னை தவெக கட்சியில் இணைந்த  முன்னாள் ஐ ஆர் எஸ் அதிகாரி அருண் ராஜுக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பரப்பு மற்றும் செயல்திட்டங்களை மேம்படுத்தும் வகையில் டாக்டர் K.G. அருண்ராஜ் Ex IRS., கொள்கை பரப்புப் பொதுச் செயலாளர் (Propaganda & Policy General Secretary) பொறுப்பில் நியமிக்கப்படுகிறார். இவர், எனது உத்தரவு மற்றும் ஆலோசனைக்கு இணங்க  கட்சி பொதுச் செயலாளர் என்.ஆனந்தின் வழிகாட்டுதலின்படி, … Read more

ஆக்சியம்-4 விண்கலம் ஜூன் 11ம் தேதி ஒத்திவைப்பு

புதுடெல்லி, அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஆக்சியம் ஸ்பேஸ் என்னும் தனியார் நிறுவனத்தின் ஆக்சியம் -4 நான்காவது மனித விண்வெளி பயணம் நாளை மறுநாள் ஜூன் 10ம் தேதி திட்டமிடப்பட இருந்தது. இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா மற்றும் 3 விண்வெளி வீரர்கள் என மொத்தம் 4 பேர் இடம்பெற்றுள்ளனர். இந்தநிலையில், வானிலை காரணமாக ஆக்சியம்-4 விண்கலம் ஏவுவது ஜூன் 11-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. நாசா, இஸ்ரோ … Read more

அடுத்த  7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை: தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. 09-06-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் … Read more

'11 ஆண்டுகளில் இந்தியாவின் அரசியல் கலாசாரத்தை பிரதமர் மோடி மாற்றிவிட்டார்' – ஜே.பி.நட்டா

புதுடெல்லி, கடந்த ஆண்டு ஜூன் 9-ந்தேதி நரேந்திர மோடி 3-வது முறை இந்தியாவின் பிரதமராக பதவியேற்றார். இதன்படி இன்றைய தினம் மோடி பிரதமராக பதவியேற்று ஓராண்டு நிறைவடைந்துள்ளது. அதே போல், ஒட்டுமொத்தமாக மோடி பிரதமராக பதவியேற்று 11 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில், 11 ஆண்டுகளில் இந்தியாவின் அரசியல் கலாசாரத்தை பிரதமர் மோடி மாற்றிவிட்டார் என மத்திய மந்திரி ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார். இது குறித்து டெல்லி பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது அவர் கூறியதாவது;- “பிரதமர் … Read more