பக்ரைனில் இருந்து ஐதராபாத் வரும் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
ஐதராபாத், தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி விமான நிலையத்துக்கு நேற்று திடீர் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. பக்ரைனில் இருந்து ஐதராபாத் வரும் விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அந்த விமானம் மும்பைக்கு திருப்பிவிடப்பட்டது. அங்கு தீவிர சோதனை செய்யப்பட்டதில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்று தெரியவந்தது. இதையடுத்து விமான நிலைய போலீசார், மிரட்டல் அனுப்பப்பட்டிருந்த இ-மெயில் முகவரி குறித்து விசாரணையில் இறங்கி உள்ளனர். 1 More update தினத்தந்தி Related Tags … Read more