உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: வெண்கல பதக்கம் வென்ற சாத்விக்-சிராக் ஜோடி

பாரீஸ், 29-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த ஆண்கள் இரட்டையர் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி-சிராக் ஷெட்டி இணை, சீனாவின் லியூ யி – சென் போ ஜோடியுடன் மோதியது. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் 2 செட்டுகளை ஆளுக்கொன்றாக கைப்பற்றிய நிலையில் 3-வது செட்டை சீன ஜோடி கைப்பற்றி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. லியு யி – சென் போ … Read more

தற்சமயம் உலகின் சிறந்த டாப் 3 டி20 பேட்ஸ்மேன்கள் இவர்கள்தான் – சுரேஷ் ரெய்னா தேர்வு

மும்பை, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி வீரர் சுரேஷ் ரெய்னா. இடது கை பேட்ஸ்மேனான அவர் 3 வடிவிலான போட்டிகளிலும் சதமடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமைக்குரியவர். குறிப்பாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சதம் அடித்த முதல் இந்திய பேட்ஸ்மேன் என்ற வரலாற்று சாதனைக்கு சொந்தக்காரர். அப்படிப்பட்ட அவர் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் தற்சமயம் டி20 கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் டாப் 3 பேட்ஸ்மேன்களை தேர்வு செய்துள்ளார். அவர் தேர்வு செய்ததில் 2 இந்திய … Read more

முதல் டி20 போட்டி: நெதர்லாந்தை எளிதில் வீழ்த்திய வங்காளதேசம்

சில்ஹெட், நெதர்லாந்து கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதல் டி20 போட்டி நேற்று சில்ஹெட்டில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வங்காளதேசம் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 136 ரன்கள் மட்டுமே அடித்தது. அதிகபட்சமாக தேஜா நிடமனுரு 26 ரன்கள் அடித்தார். வங்காளதேசம் தரப்பில் சிறப்பாக பந்துவீசிய … Read more

லலித் மோடியிடம் சொகுசு காரை பரிசாக பெற்ற யுவ்ராஜ் சிங் – வெளியான ரகசியம்

Lalit Modi : ஐபிஎல் நிதி முறைகேடு புகாரில் சிக்கி வெளிநாட்டில் வசித்துக் கொண்டிருக்கும் ஐபிஎல் முன்னாள் சேர்மன் லலித் மோடி, அண்மைக்காலமாக இந்திய பிளேயர்கள் குறித்த பல தகவல்களை வெளியிட்டு வருகிறார்.கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹர்பஜன் சிங் – ஸ்ரீ சாந்த் இடையே நடந்த சண்டை காணொளியின் இன்னொரு பகுதியை வெளியிட்ட அவர், இப்போது யுவராஜ் சிங்கிற்கு போர்ஷே கார் ஒன்றை பரிசாக கொடுத்ததை வெளிப்படையாக கூறியுள்ளார்.ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் … Read more

ஆசிய கோப்பை 2025! போட்டி நேரங்களில் அதிரடி மாற்றம்! இவ்வளவு தாமதமா?

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் முடிந்து ஒரு மாதம் ஆகிறது. அடுத்ததாக இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஒரு தொடர் ஆசிய கோப்பை 2025. இந்நிலையில் இந்த தொடரின் போட்டி நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 9 முதல் 28 வரை நடைபெறவுள்ள இந்த தொடரின் பெரும்பாலான போட்டிகள், இந்திய நேரப்படி இரவு 8:00 மணிக்கு தொடங்கும் வகையில் புதிய அட்டவணை … Read more

ராகுல் ட்ராவிட்டின் புதிய ஐபிஎல் அணி! RR அணியில் இருந்து விலகலுக்கு காரணம்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், வெற்றிகரமான தலைமை பயிற்சியாளருமான ராகுல் டிராவிட், ஐபிஎல்லில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான தனது உறவை முறித்து கொண்டுள்ளார். இந்த திடீர் விலகல், ஐபிஎல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளதுடன், தி வால் என்று அழைக்கப்படும் டிராவிட்டின் அடுத்தகட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. கடந்த சனிக்கிழமையன்று, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனது சமூக ஊடக பக்கத்தில், ராகுல் டிராவிட் அணியுடனான தனது பயணத்தை முடித்துக் கொண்டதாக அதிகாரப்பூர்வமாக … Read more

என்னால் தண்ணீர் பாட்டில் கொடுக்க முடியாது – விஜய் சங்கர் வைத்த குற்றச்சாட்டு!

தமிழ்நாடு கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர்களில் ஒருவரும், முன்னாள் கேப்டனுமான விஜய் சங்கர், தமிழ்நாடு அணியில் இருந்து விலகி, வரவிருக்கும் உள்ளூர் சீசனில் திரிபுரா அணிக்காக விளையாட உள்ளார். அவரின் இந்த முடிவு கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 12 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாடு அணிக்காக விளையாடி வந்த நிலையில், இந்த திடீர் விலகலுக்கான காரணங்கள் குறித்து நிலவி வந்த மர்மத்திற்கு, தற்போது விஜய் சங்கர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். Add Zee News as a … Read more

இந்திய அணியில் மீண்டும் தோனி? உலகக் கோப்பைக்கு பிளான் – அப்போ கம்பீருக்கு ஆப்பா?

MS Dhoni Team India Mentor: 2026 டி20 உலகக் கோப்பை இன்னும் 5-6 மாதங்களுக்குள் நடைபெற இருக்கிறது. இந்தியாவில் நடைபெறும் இந்த தொடர் பிப்ரவரி – மார்ச் மாதங்களில் திட்டமிடப்பட்டுள்ளது. இதுவே இந்திய அணியின் தற்போதைய அடுத்த டார்கெட் எனலாம்.  Add Zee News as a Preferred Source Team India: சூர்யகுமார் – கம்பீர் காம்பினேஷன் சொந்த மண்ணில் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற இருப்பதால், நடப்பு சாம்பியனான இந்திய அணி … Read more

இப்போ ராகுல் டிராவிட்… அடுத்து சஞ்சு சாம்சன் – ராஜஸ்தான் அணிக்கு பெரிய சிக்கல்!

Rahul Dravid, Rajasthan Royals: ராகுல் டிராவிட் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகி இருக்கிறார். அணிக்குள் பெரிய பொறுப்பை அவருக்கு கொடுத்ததாகவும், ஆனால் அதை ஏற்க மறுத்து ராகுல் டிராவிட் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Add Zee News as a Preferred Source இதற்கு முக்கிய காரணம், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு புதிய கேப்டனாக ரியான் பராக் நியமிக்கப்பட இருப்பதாகவும், இதற்கு ராகுல் டிராவிட் ஒப்புக்கொள்ளவில்லை … Read more

சுரேஷ் ரெய்னா தேர்வு செய்த ஆல் டைம் சிறந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.. யாருக்கெல்லாம் இடம்..?

மும்பை, ஐ.பி.எல். தொடரில் வெற்றிகரமான அணிகளில் ஒன்றான சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை 5 கோப்பைகளை வென்றுள்ளது. இந்த சூழலில் அந்த அணியில் இதுவரை விளையாடிய சிறந்த வீரர்களை கொண்டு ஆல் டைம் பெஸ்ட் சிஎஸ்கே அணியை அந்த அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தேர்வு செய்துள்ளார். அவர் தேர்வு செய்த அணியில் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு இடமில்லை. அதுபோக பதிரனா, கான்வே, பிராவோ போன்ற நட்சத்திர வீரர்களையும் அவர் தேர்வு செய்யவில்லை. சுரேஷ் ரெய்னா தேர்வு … Read more