மிஸ் யுனிவர்ஸ் மேடையில் தவறி விழுந்த அழகி! வைரலாகும் வீடியோ..எந்த நாட்டை சேர்ந்தவர்?

Miss Jamaica Fall Video : 2025ஆம் ஆண்டின் மிஸ் யுனிவர்ஸ் அழகிப்பாேட்டி, சமீபத்தில் நடைப்பெற்றது. இதில், மெக்ஸிகோ அழகி பட்டம் வென்றார். இப்போட்டி நடக்கையில், ஒரு அழகி தவறி விழுந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.  

மிஸ் யுனிவர்ஸ் 2025 பட்டத்தை வென்ற சர்ச்சைக்குரிய போட்டியாளர்! யார் இந்த ஃபாத்திமா போஷ்?

Miss Universe 2025 Winner Fatima Bosch : மிஸ் யுனிவர்ஸ் 2025 அழகிப்போட்டி, சமீபத்தில் தாய்லாந்தில் நடந்தது. இதில், சர்ச்சைக்குரிய போட்டியாளராக கருதப்பட்ட ஃபாத்திமா போஷ், பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்றிருக்கிறார்.

சொந்த நாட்டு மக்களையும் விட்டுவைக்காத பாகிஸ்தான்… இரசாயன ஆயுத தாக்குதலா?

Balochistan: பாகிஸ்தான் ராணுவம் தங்கள் நாட்டு மக்கள் மீதே இரசாயன ஆயுதம் மூலம் தாக்குதல் நடத்துகிறது என கடும் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளன.

பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு

பாரீஸ், பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பிரசித்தி பெற்ற லூவ்ரே அருங்காட்சியகம் அமைந்துள்ளது. ஈபிள் கோபுரத்துக்கு இணையான சிறப்பினை பெற்ற இந்த அருங்காட்சியகத்தை லட்சக்கணக்கானோர் பார்வையிடுகின்றனர். இந்தநிலையில் கடந்த மாதம் வைர கிரீடம், நெக்ளஸ் உள்பட சுமார் ரூ.900 கோடி மதிப்புள்ள பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இதுதொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். எனினும் கொள்ளையடிக்கப்பட்ட பொருட்கள் இன்னும் மீட்கப்படவில்லை. இந்த சம்பவம் அருங்காட்சியகத்தின் பாதுகாப்பில் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியது. எனவே பாதுகாப்பை பலப்படுத்த அங்கு … Read more

பாகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.9 ஆக பதிவு

இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் இன்று திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. மாலை 5.19 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.9 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 35.02 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 35.02 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை. 1 More update … Read more

ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு

கான்பெரா, இன்றைய காலகட்டங்களில் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சமூகவலைதளங்களை பயன்படுத்துகின்றனர். ஆனால் சிறுவர்கள் பலரும் இதில் மூழ்கி கிடப்பதால் கவனக்குறைவு, தூக்கமின்மை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் அவர்களுக்கு ஏற்படுகின்றன. எனவே 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூகவலைதளங்களை பயன்படுத்துவதற்கு ஆஸ்திரேலிய அரசாங்கம் தடை விதித்தது. இந்த தடையானது வருகிற 10-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது. எனவே 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களின் சமூகவலைதள கணக்குகளை நீக்க டிக்-டாக், எக்ஸ், மெட்டா ஆகிய நிறுவனங்களுக்கு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. இதனை … Read more

“டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” – பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர்

இஸ்லாமாபாத், டெல்லியில் கடந்த 10-ந் தேதி நிகழ்ந்த கார் வெடிப்பு பயங்கரவாத சம்பவத்தில் 13 பேர் கொல்லப்பட்டனர். 27 பேர் படுகாயம் அடைந்தார்கள். இந்த சம்பவம் தொடர்பாக டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்திருந்த நிலையில் தேசிய புலனாய்வு அமைப்பு அதனை விசாரணைக்கு எடுத்தது. விசாரணை மிகத்தீவிரமாக சென்று கொண்டிருக்கிறது. இதற்கிடையில் சிகிச்சையில் இருந்த 2 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை 15 ஆக உயர்ந்தது. இந்த கார் குண்டு தாக்குதலை நடத்தியது டெல்லி அருகே … Read more

அமெரிக்காவில் ரூ.88 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும்: சவுதி அரேபியா அறிவிப்பு

வாஷிங்டன், சவுதி அரேபியா நாட்டின் மன்னராக சல்மான் (வயது 88) உள்ளார். உடல்நல குறைபாடு காரணமாக அவருக்கு பதிலாக பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் நாட்டின் நிர்வாகத்தை கவனித்து வருகிறார். இந்தநிலையில் சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றார். ரியாத் மற்றும் வாஷிங்டன் இடையேயான உறவை வலுப்படுத்தும் விதமாக இந்த சந்திப்பு திட்டமிடப்பட்டது. வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகைக்கு வருகை தந்த இளவரசருக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ராணுவ வீரர்கள் … Read more

சீனாவில் ஜப்பான் கடல் உணவுக்கு தடை

பீஜிங், அண்டை நாடான தைவானை தங்களுடைய ஆட்சிக்கு உட்பட்ட பகுதியென கூறி போர் விமானங்களை பறக்கவிட்டும், போர் கப்பல்களை களம் இறக்கி சீனா அச்சுறுத்தி வருகிறது. ஜப்பான் பிரதமர் சனே தகைச்சி, தைவானை சீண்டினால் சீனாவுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என எச்சரித்தார். இதனால் வெகுண்டெழுந்த சீனா, ஜப்பானின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்தது. மேலும் அந்த நாட்டிற்கு தங்களுடைய மக்கள் யாரும் செல்ல வேண்டாம் எனவும் மேலும் அறிவுறுத்தியது. சீனாவின் மிகப்பெரிய உணவு ஆதரமாக ஜப்பான் … Read more

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு

ஜகர்தா, ஆசியாவில் அமைந்துள்ள நாடு இந்தோனேசியா. இந்நாட்டில் பல்வேறு எரிமலைகள் உள்ளன. இதில் சில எரிமலைகள் அவ்வப்போது வெடித்து எரிமலை குழம்பை வெளியேற்றி வருகின்றன. இந்நிலையில், அந்நாட்டின் ஜாவா தீவில் உள்ள செமேரு எரிமலை இன்று வெடித்து சிதறியது. எரிமலையில் இருந்து கரும்புகையுடன், லாவா எரிமலை குழம்பும் வெளியேறி வருகிறது. இதன் காரணமாக செமேரு எரிமலை அருகே வசித்து வரும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். எரிமலை வெடிப்பால் ஜாவா தீவில் பதற்றமான சூழ்நிலை நிலவி … Read more