மணிப்பூரில் கிளர்ச்சிக் குழுக்களை சேர்ந்த ஐந்து பேர் ஆயுதங்களுடன் கைது

இம்பால்: மணிப்பூரில் சட்டசபைத் தேர்தல் வரும் 27ம் தேதி முதல் மார்ச் 3ம் தேதிவரை இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. இதையொட்டி பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் அசாம் ரைபிள்ஸ் படையினர் மற்றும் இம்பால் மேற்கு போலீஸ் கமாண்டோக்கள் அடங்கிய ஒருங்கிணைந்த குழு நடத்திய தேடுதல் வேட்டையில்  மூன்று வெவ்வேறு கிளர்ச்சிக் குழுக்களைச் சேர்ந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் 3 பேர் ஐக்கிய தேசிய விடுதலை முன்னணியை சேர்ந்தவர்கள் என தகவல்கள் … Read more

இங்கிலாந்து அணியை வீழ்த்தி 5 வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது இந்திய அணி

ஆன்டிகுவா: யு-19 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில்  வீழ்த்தி இந்திய அணி 5 வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.

‘ஜி 23’ குழுவை சேர்ந்தவர்கள் நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் மணீஷ் திவாரி, குலாம் நபி நீக்கம்: காங்கிரஸ் தலைமை திடீர் நடவடிக்கை

புதுடெல்லி: பஞ்சாப் மாநில சட்டப்பேரவை தேர்தல் வரும் 20ம் தேதி ஒரே கட்டமாக நடக்க உள்ளது. இத்தேர்தலுக்கான திருத்தப்பட்ட நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை காங்கிரஸ் தலைமை நேற்று முன்தினம் வெளியிட்டது. அதில், ஏற்கனவே வெளியிடப்பட்ட பட்டியலில் இருந்த மூத்த தலைவர்கள் மணீஷ் திவாரி, குலாம் நபி ஆசாத் ஆகியவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பஞ்சாப்பின் அனந்த்பூர் சாகிப் தொகுதி காங்கிரஸ் எம்பியாக மணீஷ் திவாரி ஆவார். சமீபத்தில் காங்கிரஸ் தலைமையை விமர்சித்து, கட்சியின் 23 … Read more

விஸ்வரூபம் எடுக்கும் பர்தா விவகாரம் ; காவி துண்டு அணிந்து வரும் மாணவர்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பெங்களுரு-கர்நாடக கல்வி மையங்களில் முஸ்லிம் மாணவியர், ‘பர்தா’ அணிந்து செல்ல அனுமதிக்கக் கோரி அம்மாநிலத்தின் பல பகுதிகளில் காங்., போராட்டம் நடத்தியது. இதற்கு பதிலடியாக பல கல்லுாரிகளில் ஹிந்து மாணவ – மாணவியர் கழுத்தில் காவித் துண்டுடன் வகுப்புக்கு வந்ததால் பரபரப்பு நிலவுகிறது. விதிமுறைகர்நாடகாவில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள உடுப்பி அரசு மகளிர் கல்லுாரியில், கடந்த மாதம் ஆறு முஸ்லிம் மாணவியர் பர்தா … Read more

இயக்குனருடன் சண்டை போட்டு வாய்ப்பு பெற்ற ஜனனி

எம்.கே.என்டர்டெயின்மென்ட் தயாரித்திருக்கும் படம் கூர்மன். பிரையன் பி.ஜார்ஜ் இயக்கி உள்ளார். ராஜாஜி, ஜனனி ஐயர், பாலசரவணன், நரேன் உள்பட பலர் நடித்துள்ளனர். டோனி பிரிட்டோ இசை அமைத்துள்ளார், சக்தி அரவிந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. இந்த விழாவில் பேசிய நடிகை ஜனனி, இயக்குனரிடம் சண்டைபோட்டு இந்த படத்தின் வாய்ப்பை பெற்றதாக கூறினார். அவர் மேலும் கூறியதாவது: இந்த படத்தின் இயக்குனர் பிரையன் ஜார்ஜை, தெகிடி படத்திலிருந்தே தெரியும், அவரிடம் நீங்கள் … Read more

உலகை வென்றது இளம் இந்தியா; ஜூனியர் கிரிக்கெட் பைனலில் வெற்றி

ஆன்டிகுவா: ஜூனியர் உலக கோப்பை பைனலில் ஐந்தாவது முறையாக கோப்பை வென்றது இந்தியா. நேற்று நடந்த பைனலில் இங்கிலாந்தை 4 விக்கெட்டில் வீழ்த்தியது. வெஸ்ட் இண்டீசில், 19 வயதுக்குட்பட்டோருக்கான ஐ.சி.சி., உலக கோப்பை கிரிக்கெட் (50 ஓவர்) 14வது சீசன் நடந்தது. ஆன்டிகுவாவில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடந்த பைனலில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதின. டாஸ்’ வென்ற இங்கிலாந்து கேப்டன் பிரஸ்ட், ‘பேட்டிங்’ தேர்வு செய்தார். ராஜ் அசத்தல் இங்கிலாந்து அணிக்கு ஜார்ஜ் … Read more

பள்ளிகள் மீண்டும் திறக்கப்படவில்லை எனில் தேர்தலில் வாக்களிக்கப் போவதில்லை – ஆசிரியர்கள் போராட்டம்

பர்னாலா, கொரோனா மூன்றாம் அலை பரவி வருவதை ஒட்டி பஞ்சாப்பில் இம்மாதம் 8ந்தேதி வரை பள்ளிகள் செயல்பட அனுமதி இல்லை என அம்மாநில அரசு தெரிவித்திருந்தது. இந்த நிலையில், பள்ளிகளை மீண்டும் வழக்கம்போல திறக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பஞ்சாப் மாநிலம் முழுவதும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என அனைவரும் போராட்டத்தில் இறங்கினர்.  பள்ளிகள் மீண்டும் திறக்கப்படவில்லையெனில் அவர்கள் வரும் சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்கப் போவதில்லை என்று கூறியுள்ளனர். பர்னாலா மாவட்டத்தில் மட்டும் சுமார் 100 … Read more

ஐ.எஸ்.எல் கால்பந்து: ஜாம்ஷெட்பூரை வீழ்த்தி பெங்களூரு வெற்றி

கோவா, 8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐ.எஸ்.எல்.) கோவாவில் நடந்து வருகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி  கோவாவில் உள்ள 3 மைதானங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெறுகிறது. இந்த நிலையில், இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணியும், ஜாம்ஷெட்பூர் அணியும் மோதின. ஆட்டத்தின் முதல் நிமிடத்திலேயே ஜாம்ஷெட்பூர் அணியின் டேனியேல் சீமா ஒரு கோல் அடித்தார். இதையடுத்து பெங்களூரு அணியில் சுனில் சேத்ரி 54-ஆவது நிமிடத்தில் ஒரு கோலும், … Read more

நியூயார்க்கில் மகாத்மா காந்தியின் சிலை சேதப்படுத்தப்பட்டதால் பரபரப்பு

நியூயார்க், அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் உள்ள மன்ஹட்டன்  ஒற்றுமை சதுக்கத்தில் மகாத்மா காந்தியின் 8 அடி  உயர முழு வெண்க சிலை உள்ளது. கடந்த 1986- ஆம் ஆண்டு காந்தியின் 117-வது பிறந்த தினத்தை முன்னிட்டு காந்தி நினைவு சர்வதேச அறக்கட்டளையால் இந்த சிலை வழங்கபட்டது.  மகாத்மா காந்தியின் இந்த சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவத்துக்கு அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், அமெரிக்க அதிகாரிகள் கவனத்துக்கும் இந்த விவாகரத்தை … Read more