தமிழகம் முழுவதும் மகா சிவராத்திரி விழா உற்சாக கொண்டாட்டம்

மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி தினத்தில் வரும் சிவாத்திரி மகா சிவராத்திரியாக அழைக்கப்படுகிறது. 
இதையொட்டி நாடு முழுவதும் மகாசிவராத்திரி விழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் உள்ள முக்கிய சிவன் கோயில்கள் மலர்களாலும் வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன. 
தஞ்சை பெரிய கோவில் உள்பட அனைத்து சிவன் கோயில்களிலும் நான்கு கால  சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. 
பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு விடிய, விடிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மகா சிவராத்திரி விழாவில் ஏராளமான பக்கர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தஞ்சை கோவிலில் நடைபெற்ற பரத நாட்டிய நிகழ்ச்சி
மேலும் இந்த விழாவை உற்சாகமாக கொண்டாட கோயில்களில் பரதநாட்டியம், சொற்பொழிவு என பல்வேறு  கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 
கோவை ஈஷா யோகா மையத்தின் சார்பில் மகா சிவராத்திரி விழா விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. 
ஈஷா மையத்தில் சிவராத்திரி விழா
நேற்று மாலை 6 இன்று காலை 6 மணி வரை ஆதியோகி முன்பு, சத்குரு முன்னிலையில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவில்  மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். 
மேலும் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்த பக்தர்கள் பங்கேற்றனர். விடிய விடிய பிரபல கலைஞர்களின் இசை, நடனம் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
மகா சிவராத்திரி விழாவையொட்டி தமிழகம் முழுவதும் முக்கிய சிவன் கோவில்கள் முன்பும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
உஜ்ஜயினி நகரில் 11 லட்சத்து 71  ஆயிரம் விளக்குகளை ஏற்றப்பட்டன
உஜ்ஜயினி நகரில் சிவ ஜோதி அர்ப்பணம் என்ற நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக 11 லட்சத்து 71  ஆயிரம் களிமண் விளக்குகளை ஏற்றப்பட்டு கின்னஸ் சாதனை படைக்கப்பட்டுள்ளதாக மத்திய பிரதேச  மாநில அரசு தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.