புனே: கோவிட் தடுப்பூசிகள் விற்காமல் வீணாவதை தடுக்கும் விதமாக தடுப்பூசி உற்பத்தியை கடந்த டிசம்பர் மாதம் முதல் நிறுத்தி விட்டதாக சீரம் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் கோவிட் தடுப்பூசி உற்பத்தி நிறுவனமான சீரம், கோவிஷீல்டு மருந்தினை உற்பத்தி செய்து வந்தது. தற்போது இந்தியாவில் கோவிட் ஓய்ந்து மெதுவாக பரவத் துவங்கியுள்ளது.
இந்நிலையில் 20 கோடி கோவிஷீல்டு மருந்துக் குப்பிகள் விற்காமல் இருப்பதாக அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அடார் பூனாவாலா தெரிவித்துள்ளார். இதனால் தடுப்பூசி மருந்து உற்பத்தி நிறுத்தப்பட்டது
2 தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மூன்றாவது தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கான காலை இடைவெளியை 9 மாதத்திலிருந்து 6 மாதமாக குறைக்கும் படி ஏற்கனவே சீரம் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அரசுக்கு கோரிக்கை விடுத்தார். தடுப்பூசியின் ஒரு டோஸ் விலையை ரூ 600லிருந்து ரூ 225 ரூபாயாக குறைத்துக் கொள்வதாக அந்நிறுவனம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
புனே: கோவிட் தடுப்பூசிகள் விற்காமல் வீணாவதை தடுக்கும் விதமாக தடுப்பூசி உற்பத்தியை கடந்த டிசம்பர் மாதம் முதல் நிறுத்தி விட்டதாக சீரம் நிறுவனம் அறிவித்துள்ளது.nsimg3013531nsimgஇந்தியாவில்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.