ரியாத் : சவுதி அரேபியாவில் 30 ஆண்டுகளாக சமோசா உள்ளிட்ட சிற்றுண்டிகளை கழிவறையில் தயாரித்த உணவகத்திற்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.
மேற்காசிய நாடான சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் பிரபல உணவகம் ஒன்று 30 ஆண்டுகளுக்கும் மேல் இயங்கி வருகிறது. இந்த உணவகத்தின் கழிவறையில் சமோசா உள்ளிட்ட சிற்றுண்டிகள் தயார் செய்யப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள் சமீபத்தில் அங்கு ஆய்வு செய்தனர்.
அப்போது உணவகத்தில் உள்ள கழிவறையில் சமோசா போன்ற சிற்றுண்டிகள் மற்றும் உணவு பொருட்கள் தயாரிப்பது உறுதியானது. அத்துடன் இரண்டு ஆண்டுகளுக்கு முன் வாங்கப்பட்ட இறைச்சி ‘சீஸ்’ போன்றவற்றை தற்போதும் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.மேலும் உணவகத்தில் சுகாதார வசதிகள் இல்லாததால் உணவுப் பொருட்களில் வண்டுகள் மற்றும் பூச்சிகள் அதிகம் இருந்தன. இதையடுத்து உணவகத்திற்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.
இதே நகரில் எலிகள் சுற்றித்திரிந்த ‘ஷவர்மா’ உணவகத்தை ஜன. மாதம் அதிகாரிகள் மூடியது குறிப்பிடத்தக்கது.
Advertisement