பெங்களூரு:பெங்களூரில் கொரோனாவை கட்டுப்படுத்த மாநகராட்சி சார்பில் ஹோட்டல், தியேட்டர், மால்கள், மருத்துவமனைகளுக்கு புதிய விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன
.பெங்களூரில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினமும் 100க்கும் மேல் பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. எனவே கொரோனாவை கட்டுப்படுத்த மாநகராட்சி சார்பில் ஹோட்டல், தியேட்டர், மருத்துவமனைகளுக்கு புதிய விதிமுறைகள் அறிவிக்கப் பட்டு உள்ளன.
மருத்துவமனை
மருத்ததுவமனைகள் சி.எம்.ஆர்., இணையத்தில் அனைத்து தகவல்களுடன் பரிசோதனை விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்; தனியார் மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளுக்காக 10 சதவீதம் படுக்கைகளை ஒதுக்க வேண்டும்.தியேட்டர், மால்ஹோட்டல், மால்கள், தியேட்டர்கள், கடைகளில் கொரோனா விதிமுறைகள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்; இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.முக கவசம், சமூக விலகல், உடல் வெப்ப பரிசோதனை கட்டாயம்; அனைத்து ஊழியர்களுக்கும் இரண்டு டோஸ் தடுப்பூசி கட்டாயம்.
குடியிருப்புகள்
கூடுதல் கண்காணிப்புக்கு ஒத்துழைக்க வேண்டும். எல்லா வயதினரும், 100 சதவீதம் தடுப்பூசி போட்டிருப்பதை உறுதிப்படுத்தி கொள்ள முகாம்களை நடத்த வேண்டும். பொது இடத்தில் எச்சில் துப்புவதுக்கு எதிரான இயக்கம் மற்றும் முக கவசம் அணிவது குறித்த விழிப்புணர்வை தொண்டு நிறுவனத்தினர் மீண்டும் ஆரம்பிக்க வேண்டும். கொரோனா நோயாளிகளின் முதல் கட்ட தொடர்பில் இருப்பவர்கள் அனைவரும் பரிசோதனை செய்ய வேண்டும்.இவ்வாறு விதிமுறைகளை மாநகராட்சி அறிவித்துள்ளது.
Advertisement