கேதார்நாத் கோயில் இன்று திறப்பு; திரளான பக்தர்கள் தரிசனம்

பக்தர்களின் தரிசனத்திற்காக கேதர்நாத் கோயில் இன்று திறக்கப்பட்டுள்ளது.

உத்தரகாண்டில் உள்ள புகழ்பெற்ற பத்ரிநாத், கேதர்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி கோயில்களுக்கு ஆண்டுதோறும் சார்தாம் யாத்திரை எனப்படும் புனித யாத்திரை நடத்தப்படுகிறது. இதையொட்டி, இரு நாட்களுக்கு முன்னர் கங்கோத்ரி, யமுனோத்ரி கோயில்கள் திறக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து இன்று கேதர்நாத் திறக்கப்பட்டதால், ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். வருகிற எட்டாம் தேதி பத்ரிநாத் திறக்கப்படவுள்ளது. ஏற்கனவே இந்த யாத்திரையில் பங்கேற்பதற்காக ஒரு லட்சம் பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர். கேதர்நாத்தில் தினமும் 12,000 பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்கலாம்: பொது இடங்களில் புர்காவை கழட்டினால் தாக்கப்படுவீர்கள் – வாட்ஸ் அப் குரூப் பகிரங்க மிரட்டல்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.