தங்கம் விலை தொடர்ந்து 3வது வாரமாக சரிவு.. இனியும் தொடருமா?

தங்கம் விலையானது தொடர்ந்து மூன்றாவது வாரமாக சரிவினைக் கண்டுள்ளது. இது அமெரிக்க மத்திய வங்கியானது வட்டி விகிதத்தினை அதிகரித்த நிலையில், அதன் அழுத்தம் தங்கம் விலையில் காணப்பட்டது.

கமாடிட்டி சந்தை நிபுணர்கள் தங்கம் விலையினை நிர்ணயிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றான, டாலரின் மதிப்பானது 20 வருட உச்சத்தினை எட்டியுள்ளது.

குறைந்த வட்டி விகிதத்தில் ‘ஹோம் லோன்’ வழங்கும் 5 வங்கிகள்!

இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்தின் விலையில் தொடந்து அழுத்தத்தினை ஏற்படுத்தியுள்ளது.

 முக்கிய காரணிக்ள்

முக்கிய காரணிக்ள்

அமெரிக்க டாலர் குறியீடு, சர்வதேச பணவீக்கம், உக்ரைன் – ரஷ்யா பிரச்சனை, கொரோனா தாக்கம், இந்தியாவில் கொரோனாவின் எண்ணிக்கை, சீனாவில் நிலவி வரும் பதற்றமான நிலைக்கு மத்தியில் ஏதும் நிதி உதவி அறிவிக்கப்படுமா என்றும் எதிர்பார்க்கப்படுறது. ஆக இதுவும் தங்கம் விலையினை நிர்ணயிக்கும் முக்கிய காரணிகாளாக அமையலாம்.

 பணவீக்கம்

பணவீக்கம்

வரும் வாரத்தில் முதலீட்டாளர்கள் அமெரிக்காவில் இருந்து வரும் பணவீக்கம் குறித்தான தரவினை முதலீட்டாளர்கள் உன்னிப்பாக கவனிப்பார்கள். பணவீக்கம் எவ்வளவு அதிகரிக்கலாம் என்பது கவனிக்க வேண்டிய முக்கிய விஷயமாக உள்ளது. இதற்கிடையில் அமெரிக்க டாலரின் மதிப்பும் கவனிக்கப்பட வேண்டிய முக்கிய அமசங்களில் ஒன்றாக உள்ளது. இது தங்கம் விலையில் முக்கிய பங்கு வகிக்கலாம்.

உக்ரைன் ரஷ்யா பிரச்சனை
 

உக்ரைன் ரஷ்யா பிரச்சனை

உக்ரைன் ரஷ்யா இடையேயான பிரச்சனைக்கு மத்தியில், தங்கம் ஒரு பாதுகாப்பு புகலிடமாக பார்க்கப்படுகிறது. இது சர்வதேச அளவில் உள்ள ஒரு அசெட் ஆகும். ஆக இது தொடர்ந்து தங்கம் விலைக்கு ஆதரவாக அமையலாம். ஆக தங்கம் விலையானது குறைந்தாலும், அது நீண்டகால நோக்கில் வாங்க சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது.

சீனாவில் கொரோனா

சீனாவில் கொரோனா

சீனாவில் கொரோனா பரவலானது அதிகரித்து வரும் நிலையில், அங்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக அங்கு பொருளதாரம் சரிவினைக் கண்டு வருகின்றது. சரிவில் இருக்கும் பொருளாதாரத்தினை மீட்டெடுக்க ஏதேனும் ஊக்க அறிவிப்புகள் வருமா என்றும் எதிர்பார்ப்பும் இருந்து வருகிறது. இதுவும் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.

பாதுகாப்பு புகலிடம்

பாதுகாப்பு புகலிடம்

எப்படியிருப்பினும் பணவீக்கத்திற்கு எதிரான சிறந்த ஹெட்ஜிங் ஆக பார்க்கப்படும் நிலையில், வட்டியில்லா முதலீடாக இருந்தாலும், அது பாதுகாப்பு புகலிடமான தங்கத்திற்கு பாதுகாப்பாக அமையலாம். இதற்கிடையில் உக்ரைன் பிரச்சனை மேலும் அழுத்தம் கொடுக்கலாம்.

சர்வதேச அளவிலான அசெட்

சர்வதேச அளவிலான அசெட்

உக்ரைன் ரஷ்யா இடையேயான பிரச்சனைக்கு மத்தியில், தங்கம் ஒரு பாதுகாப்பு புகலிடமாக பார்க்கப்படுகிறது. இது சர்வதேச அளவில் உள்ள ஒரு அசெட் ஆகும். ஆக இது தொடந்து தங்கம் விலைக்கு ஆதரவாக அமையலாம். ஆக தங்கம் விலையானது குறைந்தாலும், அது நீண்டகால நோக்கில் வாங்க சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Gold price outlook: Top 5 key reasons for the yellow metal this week

Gold price outlook: Top 5 key reasons for the yellow metal this week/தங்கம் விலை தொடர்ந்து 3வது வாரமாக சரிவு.. இனியும் தொடருமா?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.