பள்ளிகளுக்கு வழிகாட்டுதல் வெளியீடு| Dinamalar

புதுடில்லி : நாடு முழுவதும் கோடை வெயில் உச்சம் அடைந்து வருவதை அடுத்து, பள்ளிகளை இயக்க மத்திய கல்வி அமைச்சகம் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் கோடை வெயில் அதிகரிக்க துவங்கியுள்ளது. தலைநகர் டில்லியில் வெயில் அளவு 46 டிகிரி செல்ஷியசை நெருங்கியுள்ளது.இதையடுத்து, மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளை இயக்குவதில் பல்வேறு வழிகாட்டுதல்களை மத்திய கல்வித்துறை நேற்று வெளியிட்டது. இதில், பள்ளிகள் இயங்கும் நேரத்தை குறைப்பது, சீருடை அணிவதில் விலக்கு அளிப்பது, மைதானங்களில் விளையாடுவதை தவிர்ப்பது உட்பட பல்வேறு வழிகாட்டுதல்கள் அளிக்கப்பட்டுள்ளன.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.