கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனம் மீது சிமெண்ட் கலவை லாரி ஏறி இறங்கியதில் 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் பகுதியை சேர்ந்த பிரேம் நாத் என்பவர் தனது ஆட்டோவில் சாலையை கடப்பதற்காக காத்திருந்தார். அப்பொழுது இரணியல் பகுதி அருகே அந்த வழியே வேகமாக வந்த சிமெண்ட் கலவை லாரி ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, ஆட்டோ மற்றும் அருகில் இருந்த இரு சக்கர வாகனம் மீது ஏறி இறங்கி விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் படுகாயம் அடைந்த 5 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மேலும் இந்த விபத்து குறித்து காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளின் மூலம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.