காவல்துறையை கண்டு குற்றவாளிகள் மட்டுமே அச்சப்பட வேண்டும் என்று, தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். மேலும், காவல்துறையை கண்டு பொது மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி கல்லூரியில் ‘லாக்கப் மரணங்கள் தடுப்பு’ என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் டிஜிபி சைலேந்திரபாபு கலந்து கொணடார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் தெரிவிக்கையில்,
“சில நேரங்களில் காவல்நிலைய மரணங்கள் என்பது, எல்லாமே காவலர்கள் தாக்கியதால் தான் இறந்தார்கள் என்று சொல்ல முடியாது. சிலர் காவல் நிலையங்களில் தற்கொலை செய்துகொண்டு இறந்து விடுவார்கள். சிலர் உடல்நலக்குறைவால் இறந்து விடுவார்கள்.
நல்ல பொதுமக்கள் காவல்துறையை கண்டு பயப்பட வேண்டிய எந்த அவசியமும் இல்லை. குற்றவாளிகள் மட்டும்தான் காவல்துறை கண்டு பயப்பட வேண்டும்.

தற்போது நல்லவர்களுக்கு ஒரு நம்பிக்கை பிறந்துள்ளது. அந்த வகையில் தமிழக காவல்துறை இயங்கிக் கொண்டிருக்கிறது” என்று, தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்தார்.