ஆப்டிகல் இல்யூஷன் தந்திரமானவை, அதிலும் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் அவற்றை விட வித்தியாசமாக உணரப்படுகின்றன. illusion என்ற சொல் லத்தீன் வார்த்தையான illudere என்பதிலிருந்து வந்தது, அதாவது “கேலி செய்வது”.
நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், மற்றவர்களின் எண்ணங்கள் மற்றும் செயல்களால் நாம் பாதிக்கப்படுகிறோம். தன்னைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் அல்லது என்ன சொல்கிறார்கள் என்று கவலைப்படுகிறோம். மேலும் எப்பொழுதும் மற்றவர்களிடம் நேர்மறையான எண்ணத்தை உருவாக்கும் வகையில் நடந்துகொள்கிறோம்.
மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் அல்லது மற்றவர்கள் உங்களை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதை அறிய இந்தப் படச் சோதனை உங்களுக்கு உதவும். படத்தை கவனமாக பாருங்கள்.

நீங்கள் முதலில் என்ன பார்த்தீர்கள்?
மனிதனின் முகமா?
நீங்கள் உங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தக் கூடியவர். மிகவும் பாசிட்டிவான மனிதர். தன்னம்பிக்கை அதிகம். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், உங்கள் மனதில் என்ன உள்ளது என்பதை யாராலும் சொல்ல முடியாது.
உங்களிடம் தலைமைத்துவ பண்பு உள்ளது. நீங்கள் உங்கள் முடிவுகளில் உறுதியாக இருப்பீர்கள். ஸ்ட்ரேயிட்ஃபார்வர்டு மற்றும் எதிலும் ஆர்வமுள்ளவர். உங்கள் வலுவான நேர்மறை எண்ணங்களின் காரணமாக மக்கள் உங்களைச் சுற்றி இருக்க விரும்புகிறார்கள்.
ஒரு பெண்ணைப் பார்த்தால்
நீங்கள் தாராள மனப்பான்மை உள்ளவர் என்பதை இது காட்டுகிறது. உங்களைச் சுற்றியுள்ளவர்கள்’ வாழ்க்கையில் நீங்கள் கொண்டிருக்கும் நேர்மறையான கண்ணோட்டத்திற்காக உங்களைப் போற்றுகிறார்கள். நீங்கள் மிகவும் மோட்டிவேடட் நபராகக் கருதப்படுகிறீர்கள்.
நீங்கள் உறுதியான நபர். ஒருமுறை இலக்கு செய்துவிட்டால், அதை அடையும் வரை ஓயமாட்டீர்கள். உங்கள் தனிப்பட்ட திறன்களுக்காக மக்கள் உங்களை அறிவார்கள். உங்களைச் சுற்றியுள்ள நுட்பமான சிக்னல்களையும் மற்றவர்களின் உணர்ச்சிகளையும் புரிந்து கொள்ளும் அளவுக்கு நீங்கள் கூர்மையானவர்.
உங்கள் வார்த்தைகளால் யாரும் காயப்படக்கூடாது என்பதில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்கிறீர்கள், மேலும் நீங்கள் உணர்ச்சிவசப்பட கூடியவர். இருப்பினும், உங்களைச் சுற்றியுள்ள செயல்களால் நீங்கள் எளிதில் பாதிக்கப்படுவீர்கள்.
நீங்கள் சமநிலையான உணர்ச்சி நிலை கொண்ட ஒரு சமநிலையான நபர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“