
தனுஷிற்கு ஜோடியாகும் பிரியங்கா மோகன்?
நடிகர் தனுஷ் தற்போது தெலுங்கில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் வாத்தி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு பிறகு சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் கேப்டன் மில்லர் என்ற படத்தில் தனுஷ் நடிக்க இருக்கிறார். அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். இதில் டாக்டர் , டான் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அவரிடம் பேசி வருகின்றனர்.
தனுஷ் நடித்துள்ள நானே வருவேன், திருச்சிற்றம்பலம் , தி கிரே மேன் ஆகிய படங்கள் அடுத்தடுத்த வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.