நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி ஆலய திருவிழா: முன்னாயத்த கலந்துரையாடல்

நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி ஆலய திருவிழா நடைபெறுவதற்கான சிறப்பான சேவையினை வழங்கும் பொருட்டான முன்னாயத்த கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் இன்று (10.06.2022)  மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இக்கலந்தரையாடலில் பாதுகாப்பு பொலிஸ் உத்தியோகத்தர்கள் தேவை, அம்புலன்ஸ சேவை, கடற்போக்குவரத்து சேவை , படகுகள் அனுமதி , அரச மற்றும் தனியார் வீதிப்போக்குவரத்து சேவை, அவற்றுக்கான எரிபொருள் ஏற்பாடுகள், சுகாதாரம், மற்றும் குடிநீர் தேவை, மின்சாரத்தேவை, புனரமைக்கவேண்டிய வீதிகள், அமுதசுரபி அன்னதான ஒழுங்குகள், மற்றும் ஊடகங்களுக்கான அனுமதி உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் (காணி), உதவி மாவட்ட செயலாளர், பிரதம கணக்காளர், அறங்காவலர் சபைத் தலைவர், பிரதேச செயலாளர் (வேலணை) சுகாதாரத் துறைசார் பங்குதாரர்கள், இலங்கை போக்குவரத்து சபை உத்தியோகத்தர்கள், கடற்படை அதிகாரிகள், பொலிஸ் தரப்பினர், பிரதேசசபை பங்குதாரர்கள், துறை சார் திணைக்கள தலைவர்களும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், உள்ளிட்ட துறைசார் பங்குதாரர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.