சமையல் எரிவாயு, உணவு மற்றும் மற்ற பொருட்களின் விலையானது மே மாதத்தில் கடும் உச்சத்தினை எட்டியுள்ளது. இது அமெரிக்காவில் மட்டும் அல்ல, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் இதே நிலை தான்.
இதற்கிடையில் அமெரிக்காவில் 40 ஆண்டுகளில் இல்லாதளவுக்கு மோசமான பணவீக்கத்தினை எட்டியுள்ளது.
உலகின் முன்னணி பொருளாதார நாடான அமெரிக்காவிலேயே பணவீக்கத்தின் தாக்கம் இந்தளவுக்கு மோசமான தாக்கத்தினை எட்டியுள்ள நிலையில், இந்தியா போன்ற வளரும் நாடுகளில் இதன் தாக்கம் மிக அதிகம் எனலாம்.
செலவினங்கள் அதிகம்
குறிப்பாக தொடர்ந்து உயர்ந்து வரும் விலைவாசி உயர்வால் அமெரிக்க மக்களின் வாழ்க்கை செலவினங்கள் மிக மோசமாக அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அமெரிக்காவினை பொருத்த வரையில் செலவினங்கள் மிக அதிகம். இதற்கிடையில் தற்போது இன்னும் செலவினங்கள் அதிகரித்துள்ளன.

உச்சத்தில் பணவீக்கம்
இதனை சுட்டிக் காட்டும் விதமாக நுகர்வோர் விலை குறியீடானது கடந்த மாதத்தில் 8.6% அதிகரித்துள்ளது. இது ஏப்ரல் மாதத்தில் 8.3% ஆகவும் இருந்தது. ஆக மாதத்திற்கு மாதம் இது தொடர்ந்து உச்சம் தொட்டு வருகிறது. இந்த பணவீக்க விகிதமானது 1981 பிறகு மிக மோசமான விகிதமாகும்.

விலையேற்றம்
விமான டிக்கெட்டுகள் முதல் உணவகங்கள் வரையில் புதிய மற்றும் பயன்படுத்தப்பட்ட கார்கள் வரை அனைத்தும் விலையேற்றம் கண்டுள்ளன. தொடர்ச்சியாக இரண்டாவது மாதமாக இதன் விலைகள் உச்சம் தொட்டுள்ளன. இதே கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 6% மேலாக ஏற்றம் கண்டுள்ளது.

மந்த நிலை ஏற்படலாம்
தொடர்ந்து அதிகரித்து வரும் பணவீக்கம், எரிபொருள் விலையையும் உச்சத்தினை எட்டியுள்ளது. இது பங்கு சந்தையிலும் சரிவினை ஏற்படுத்தியுள்ளது. வட்டி விகிதங்களை அதிகரிக்க வங்கிகளை ஊக்குவிக்கிறது. ஏற்கனவே வங்கிகள் வட்டி விகிதங்களை அதிகரித்தூள்ளன. இதனால் தனி நபர் மற்றும் நிறுவனங்களுக்கு கிடைக்கும் கடனுக்கான வட்டி விகிதத்தினை அதிகரிக்கும். இது நிறுவனங்களின் மார்ஜினில் தாக்கத்தினை ஏற்படுத்தும். இது ரெசசனுக்கு தள்ளப்படலாம்.

ஒவ்வொரு துறையிலும் பணவீக்கம்
ஒவ்வொரு துறையிலும் இயல்பை விட பணவீக்கம் அதிகமாக உள்ளது என பாங்க் ஆப் அமெரிக்கா எச்சரித்துள்ளது. இது பொருளதாரத்தில் தாக்கத்தினை ஏற்படுத்துகிறது. இது இன்னும் கொஞ்ச காலத்திற்கு தொடர வாய்ப்புள்ளது. குறிப்பாக கடந்த மே மாதத்தில் மட்டும் கேஸ் விலை 4% அதிகரித்துள்ளது. கடந்த ஒரு வருடத்தில் 50% அதிகரித்துள்ளது.

சேமிப்புகள் கரைந்து விட்டன
இதே மளிகை பொருட்கள் விலையானது ஒரு வருடத்திற்கு பிறகு கிட்டதட்ட 12% அதிகரித்து, 1979க்கு பிறகு அதிகரித்துள்ளது. இது ரஷ்யா உக்ரைன் பிரச்சனைக்கு பிறகு மிகப்பெரிய அளவில் ஏற்றம் கண்டுள்ளது.
குறைந்த வேலையில்லாத் திண்டாட்டம், சில பணி நீக்கங்கள் மற்றும் அதிகளவிலான வேலை வாய்ப்புகள் ஆகியவற்றுடன் வலுவானதாக இருக்கும். இதனால் நிறுவனங்கள் சம்பளத்தினை அதிகரிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. ஊழியர்கள் பணவீக்கத்தினை எதிர்கொள்ள சேமிப்பினை கரைத்து வருகின்றனர்.
US’s Cost of groceries see biggest rise since 1979: Is India better than the US?
Grocery prices have risen by almost 12% in one year and since 1979. This is US’s biggest rise since the Ukraine crisis.