டெல்லி: குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் வேட்பு மனு தாக்கல் செய்தார். வேட்பு மனு தாக்கலின் போது தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் உடனிருந்தனர். ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் முடிவதால், புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்காக ஜூலை 18-ல் தேர்தல் நடக்கிறது.
