பெருகும் ஆதரவு… பிரித்தானியாவின் அடுத்த பிரதமர் இவரா? வெளிவரும் பின்னணி


பிரித்தானியாவின் முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக் கன்சர்வேடிவ் கட்சியின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட அதிக வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன் பொருட்டு, முன்னாள் சுகாதார அமைச்சர் சஜித் ஜாவித்துடன் இரகசிய ஒப்பந்தம் ஒன்றை ரிஷி சுனக் ஏற்படுத்திக் கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

42 வயதான இந்திய வம்சாவளி ரிஷி சுனக் பிரித்தானியாவின் அடுத்த பிரதமராக பொறுப்பேற்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரியவந்துள்ளது.
அவருக்கு கட்சியின் முக்கிய தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும், கட்சியில் அவருக்கான ஆதரவு பெருகி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பெருகும் ஆதரவு... பிரித்தானியாவின் அடுத்த பிரதமர் இவரா? வெளிவரும் பின்னணி | Rishi Sunak Tory Leadership Race Heats Up

நாட்டின் அடுத்த பிரதமர் பதவிக்கு போட்டியிட தாம் தயார் என ரிஷி சுனக் நேற்று தமது விருப்பத்தை உத்தியோகப்பூர்வமாக வெளிப்படுத்தியிருந்தார்.
மட்டுமின்றி, தமது சமூக ஊடக பக்கத்தில் காணொளி ஒன்றை வெளியிட்ட சுனக், தமது குடும்ப வரலாறு தொடர்பிலும், நம் நாடு மிகப்பெரிய சவால்களை எதிர்கொள்கிறது, ஒரு தலைமுறை இதுவரை சந்தித்திராத மிகவும் தீவிரமானது என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அவர் அளித்துள்ள இணைப்பில் உத்தியோகப்பூர்வ பிரச்சார பக்கமும் இணைக்கப்பட்டுள்ளது.
மேலும், சுனக் தொடர்பில் பல முக்கிய தலைவர்கள் வெளிப்படையாகவே ஆதரவு தெரிவித்துள்ளனர்.

பெருகும் ஆதரவு... பிரித்தானியாவின் அடுத்த பிரதமர் இவரா? வெளிவரும் பின்னணி | Rishi Sunak Tory Leadership Race Heats Up

கன்சர்வேடிவ் கட்சியிலும் பிரதமராக வாய்ப்பிருக்கும் தலைவர்களின் பக்கம் சாய்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே வெளிவிவகார அமைச்சர் லிஸ் டிரஸ் அடுத்த பிரதமராகும் வாய்ப்பிருப்பதாக கூறி, சில தலைவர்கள் அவருக்கும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் இதுவரை அப்படியான தகவலை லிஸ் டிரஸ் வெளியிடவில்லை என்றே கூறப்படுகிறது.
இந்த நிலையில், பாதுகாப்பு அமைச்சர் பென் வாலஸ் தமது விருப்பத்தை தெரிவித்துள்ளதுடன், பிரித்தானியாவின் அடுத்த பிரதமராகும் வாய்ப்பை வழங்க வேண்டும் என்ற பிரச்சாரத்தையும் துவங்கியுள்ளார். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.